கோபுர கலசங்களில் வரகு தானியம் வைப்பது ஏன்?: ஆன்மிகமும் ஆச்சரியமூட்டும் அறிவியலும்!

கோவில் கோபுர கலசங்களின் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் நம் பாரம்பரியத்தின் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் தொலைநோக்கு ரகசியங்களை அறிந்துகொள்ளலாம்.
கோபுர கலசம் -science-behind-temple
கோபுர கலசம் -science-behind-templeAI Image
Updated on

கோபுர கலசங்களில் நவதானியங்கள் வைக்கப் படுகின்றன. இவை இயற்கைச் சீற்றங்களின் போது விதைகளைப் பாதுகாக்கவும், இடிதாங்கியாகச் செயல்படவும் பயன்படுகின்றன.

நம் முன்னோர்கள் கட்டிய பிரமாண்டமான கோவில் கோபுரங்கள் வெறும் ஆன்மிக அடையாளங்கள் மட்டுமல்ல, அவை மனித சமுதாயத்தை காக்கும் உன்னத அறிவியல் மையங்களாகும். கோவில்களின் உச்சியில் வைக்கப்படும் கோபுரக் கலசம் ஒரு புனிதப் பொருளாகும். இது மின்னலைத் தாங்கும் இடிதாங்கியாகவும், இயற்கைச் சீரழிவின்போது உதவும் விதைகளைச் சேமிக்கும் பெட்டகமாகவும், ஆன்மீக ஆற்றலை ஈர்க்கும் மையமாகவும் செயல்படுகிறது.

கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசங்களில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுடன் சில குறிப்பிட்ட தானியங்களும் நிரப்பப்படுகின்றன.

தானியங்கள் தமிழ்ச் சமூகத்தால் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அதில் முதன்மையான ‘வரகு’ தானியம் வைக்கப்படுவதன் பின்னணியில் ஆச்சரிமூட்டும் ஆன்மிக மற்றும் அறிவியல் ரகசியங்கள் ஒளிந்துள்ளன.

கோபுர கலசம் பொதுவாக செம்பு அல்லது பித்தளையால் செய்யப்படுபவை. உலோகம் என்பதால் அவை காற்றில் உள்ள மின்சாரத்தை ஈர்க்கும். ஆனால் அதன் உள்ளே கொட்டி வைக்கப்படும் வரகு போன்ற தானியங்கள் மிகச்சிறந்த மின் கடத்தாப்பொருட்களாகும். கோபுர கலசங்களில் வரகு போன்ற தானியங்கள் இயற்கைப் பேரிடர் காலத்தில் விதைகளைப் பாதுகாக்க, மின்னலை ஈர்த்து திறக்க மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்க வைக்கப்படுகின்றன.

இடி தாக்கும்போது கலசத்தின் உலோகம் மின்சாரத்தை ஈர்த்தாலும் உள்ளே இருக்கும் தானியங்கள் அந்த மின் ஆற்றலின் வீரியத்தை கட்டுப்படுத்தி கோபுர கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் பூமியை நோக்கி செலுத்த உதவுகிறது.

அதாவது கலசத்தில் வைக்கப்படும் வரகு போன்ற சில தானியங்கள் மற்றும் உலோக பொருட்கள் மின்னல் மற்றும் இடி தாக்கத்திலிருந்து கோபுரத்தையும் ஊரையும் பாதுகாக்க உதவுகின்றன.

உலோகத்தால் ஆன கலசம் இடிதாங்கியாகச் செயல்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளை மின் தாக்கத்திலிருந்து காக்கிறது. குறிப்பாக வரகு தானியத்திற்கு வளிமண்டல மின்னலைத் தாங்கித் தடுத்து, ஊருக்குள் பாதிப்பு வராமல் பாதுகாக்கும் அதீத ஆற்றல் உண்டு.

கோபுர கலசம் - science-behind-temple
கோபுர கலசம் - science-behind-templeAI Image

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலசத்தில் இருக்கும். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக வைப்பார்கள். காரணம் என்னவென்றால் ‘வரகு’ மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்த காலத்திலேயே அறிந்து வைத்திருந்தனர். இந்த நுட்பம் மிகவும் சரியான விசயம் என இப்போதுள்ள அறிவியலும் கூறுகிறது.

அதுமட்டுமின்றி வரகு தானியம் பன்னிரெண்டு ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் தனித்தன்மை கொண்டவை.

இதையும் படியுங்கள்:
கோபுர தரிசனத்திற்கும் கும்பாபிஷேகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரியுமா?
கோபுர கலசம் -science-behind-temple

பெருவெள்ளம் அல்லது பஞ்சம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு பயிர்கள் அழியும்போது, மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக கலசத்தில் உள்ள வரகு விதைகளை எடுத்து மீண்டும் விவசாயம் செய்ய நம் முன்னோர்கள் திட்டமிட்டனர்.

கோபுரம் ஊரிலேயே மிக உயர்ந்த பகுதியாக இருப்பதால், வெள்ள நீர் அங்கு செல்ல முடியாது; தானியங்களும் பாதுகாப்பாக இருக்கும். பெரும்பாலான தானியங்களின் வீரியம் 10 முதல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துவிடும். இதனால்தான் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தி, பழைய தானியங்களை மாற்றிவிட்டு புதிய தானியங்களை நிரப்பும் வழக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

இப்போதும் புதிதாகக் கட்டப்படும் கோவில் கோபுர கலசங்களிலும் தானியங்களை அடைத்து வைக்கும் இந்த வழக்கம் தொடர்கிறது.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். அத்தகைய கோபுரங்கள், ஆன்மாவை மட்டுமின்றி மனிதர்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் அரணாக திகழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: வறுமையைப் போக்கிய கோபுர தரிசனம்!
கோபுர கலசம் -science-behind-temple

இயற்கை பேரழிவிலில் இருந்து நம்மை காக்க அறிவியல் பூர்வமாக சிந்தித்து கலசங்களில் வரகு தானியத்தை வைத்த முன்னோர்களின் தொலைநோக்கு பார்வையை வியந்து போற்றுவோம்.

logo
Kalki Online
kalkionline.com