17 முறை உடைக்கப்பட்டும் சிதையாத நம்பிக்கை! சோம்நாத் ஆலயம் எழுந்த அதிசய வரலாறு!

Somnath temple
Somnath temple
Published on
deepam strip
deepam strip

ந்தியாவில் 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குகிறது குஜராத் சோம்நாத் ஆலயம் (Somnath Temple). குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில், வேராவல் நகருக்கு அருகில் உள்ள பிரபாஸ் படன் (Prabhas Patan) கடற்கரையில் அமைந்துள்ளது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். சந்திர பகவானுக்கு பாப விமோசனம் அளித்த ஸ்தலமாகும்.

முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாக விளங்கி வருகிறது. பலமுறை இடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட கோவில். பல படையெடுப்புகளுக்குப் பிறகு சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சியால் மீண்டும் புணர்அமைப்பு நடைபெற்றது.

குஜராத் ஜினாகத் பகுதியில் இருந்து 82 கிலோ மீட்டர் போர்பந்தரில் இருந்து 120 கிலோ மீட்டர் அகமதாபாத்தில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. இந்துக்களின் நம்பிக்கைக்கு உரிய புனிதமான யாத்திரை ஸ்தலமாக விளங்கி வருகிறது. சாளுக்கிய கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

1995 இல் இறுதியாக ஏழாவது முறையாக இந்த கோவில் கட்டப்பட்டது. ஜோதிர்லிங்கத்தின் பின்புறம் சக்தி அம்மனின் 51 பீடங்களில் அம்மனின் வயிற்றுப் பகுதி விழுந்த இடமாகும். இந்தக் கோவிலில் இருந்த சந்தன கதவுகளை கஜினி முகமது கொள்ளை அடித்து ஆப்கானிஸ்தான் கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டு தற்போது ஆக்ரா கோட்டையில் பாதுகாப்பில் உள்ளது.

கிருஷ்ணர் தனது அவதார முடிவை இங்கு உள்ள பிரபாஸ் பட்டணத்தில் தங்கி இருந்த காலத்தில் வேடுவனின் கணையால் காலில் தாக்கப்பட்டு இறந்தார் என பாகவத புராணம் தெரிவிக்கிறது. எனவே, பகவான் கிருஷ்ணர் இந்த இடத்தில் முக்தி அடைந்த ஸ்தலமாக கருதப்படுகிறது.

இஸ்லாமிய மன்னர்கள் இந்த கோவிலை ஆறு முறைக்கு மேல் தாக்கினார்கள். கஜினி முகமது இந்த கோவிலில் உள்ள ரத்தினங்கள், தங்கம், வெள்ளி, மாணிக்கம், மரகதம் போன்ற விலையை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டார். இதன் மதிப்பு அந்த காலத்திலேயே 2 கோடி பெரும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
12 சூரியர்கள் ஒரே ஊரில்! காசியில் மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயம்!
Somnath temple

இந்தக் கோவில் சாளுக்கிய மன்னர்களால் பிரமிடு வடிவில் கட்டப்பட்டுள்ளது. அரபிக் கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி போன்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோவில் அமைந்துள்ளது. 1947 இல் சுதந்திரம் அடைந்த பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

இதற்கு அரசு நிதியை பயன்படுத்தக் கூடாது என காந்தி தடை விதித்தார். எனவே, பொதுமக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு கோவில் வேலைகள் நடைபெற்றன. வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது காந்தியும் வல்லபாய்பட்டேலும் இறந்து விட்டார்கள். அதன் பின்னர் 44 ஆண்டுகள் பணிகள் நடைபெற்று 1995 கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த கோவிலை திறந்து வைத்தார். இந்தக் கோவிலின் உயரம் 115 அடி. கோபுரத்தில் பத்து டன் எடையுள்ள கோபுர கலசம் அமைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சிதம்பரம் நடராஜர் கோவில்: மனித உடல் ஒரு கோவில் என்பதற்கு சாட்சி!
Somnath temple

37 அடி உயரமுள்ள கொடிமரம் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கலை நயத்துடன் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குஜராத்தில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். ஏராளமான ஊர் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

1890 இல் சுவாமி விவேகானந்தர் இந்த கோவிலுக்கு வருகை தந்தார். முதன்முதலில் 1026 இல் இந்த கோவில் இடிக்கப்பட்டு 2026 இல் ஆயிரம் வருடங்கள் நிறைவு பெறுகிறது. கட்டடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமாகவும், பகவான் கிருஷ்ணர் முக்தி அடைந்த ஸ்தலமாகவும் இருப்பதால் இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com