100 முறை திருப்பதி போன புண்ணியம் வேண்டுமா? இந்த ரகசிய இடத்திற்கு போங்க!

narayanavanam temple
narayanavanam temple
Updated on
deepam strip
deepam strip

நாராயணவனம் தலத்தை ஒருமுறை தரிசிப்பது, 100 முறை திருப்பதிக்குச் சென்ற புண்ணியத்தைத் தரும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திர மாஸ கணக்குப்படி, சுக்லபட்ச தசமி திதியன்று இங்கு பத்மாவதி - ஸ்ரீனிவாச பெருமாள் திருமணம் நடைபெற்றது.

சிறப்பம்சங்கள்:

மணக்கோலம்: திருப்பதியில் தாயார் அலமேலு மங்காபுரம் (திருச்சானூர்) எனும் தள்ளி இருக்கும் ஊரில் அருள்பாலிக்கிறார். ஆனால், நாராயணவனத்தில் பெருமாளும் தாயாரும் ஒருசேர மணக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்.

kalyana thirukolam
kalyana thirukolamcredit AI Image

பழமையான தலம்: இக்கோவில் திருப்பதியை விடப் பழமையானது எனக் கருதப்படுகிறது. உலகில் உடைவாள் மற்றும் கையில் திருமண் காப்போடு அருளும் முதல் வெங்கடாஜலபதி கோவில் இதுவே ஆகும். இத்தகைய கோலத்தை நாம் குணசீலம் மற்றும் நாராயணவனம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே காண முடியும்.

நிம்மதியான தரிசனம்: திருப்பதியைப் போல "ஜருகண்டி" அவசரம் இல்லாமல், இங்கு மிகவும் நிம்மதியாகத் தரிசனம் செய்யலாம்.

திருமண இயந்திரம்: கோவிலின் உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு வரும்போது, பத்மாவதி தாயார் தன் திருமணத்திற்காக மாவு அரைத்த இயந்திரத்தைக் காணலாம்.

வழிபாட்டுப் பலன்கள்:

  1. திருமணத் தடை: திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்தை வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் சுபகாரியம் கைகூடும்.

  2. கடன் தொல்லை: பொருளாதாரப் நெருக்கடி மற்றும் கடன் தொல்லையிலிருந்து விடுபட இங்குள்ள பெருமாளைப் பிரார்த்தனை செய்யலாம்.

அகஸ்தியர் ஆசிரமமும் ஸ்ரீனிவாச மங்காபுரமும்

திருப்பதியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அருணாநிதி பள்ளத்தாக்கில்தான் தாயார் வளர்ந்தார். இவர்களின் திருமணத்தைக் காண 33 கோடி தேவர்களும் திரண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த பின், தம்பதியர் அப்பலயகுண்டா எனும் ஊரில் ஓய்வெடுத்தனர்.

அதன் பின், வேங்கட மலைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் ஆசிரமத்தில் அவர்களுக்குச் சிறப்பான விருந்து உபச்சாரம் நடந்தது. அப்போது அகத்திய முனிவர், "திருமணம் முடிந்த தம்பதிகள் ஆறு மாத காலத்திற்கு மலை ஏறக்கூடாது" என்று அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:
11 தலைகள்... 22 கைகள்! இப்படி ஒரு முருகனைப் பார்த்ததுண்டா? முருகனின் விஸ்வரூப தரிசனம்!
narayanavanam temple

அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தங்கிய இடமே ஸ்ரீனிவாச மங்காபுரம் ஆகும். இங்கு பெருமாள் கருவறையில் மூன்று நிலைகளில் (நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் அல்லது கல்யாண சீனிவாசனாக) காட்சி தருகிறார்.

logo
Kalki Online
kalkionline.com