
திருமகளின் திருவருள் ஒருவருக்குக் கிடைத்து விட்டாலே, அவருக்கு வாழ்க்கையில் அத்தனை விதமான நன்மைகளும் தானாகவே வரிசைக்கட்டிகொண்டு சீர்வரிசை போல வந்து சேரும். ‘அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்’ என்று ஸ்வாமி ராமானுஜர், ‘திருமகளான அந்தத் தாயார் உலகத்துக்கெல்லாம் தாயாக இருந்து, இவ்வுலகையே காத்துக்கொண்டிருக்கிறாள்’ என்கிறார். ‘நம்மிடம் இருக்கும் கெட்ட வாசனையைப் போக்கி, ஞானமாகிய சுகந்தத்தைக் கொடுப்பவள் திருமகளே’ என்கிறது வேதம்.