
பேசாத குழந்தையைப் பேச வைத்து, கல்வி அறிவு அறவே இல்லாத குழந்தையை தனது திருவருளால் மேதாவி ஆக்கிய திருமகளின் அருள் ஆச்சரியங்கள் பலவற்றை நாம் கேட்டிருப்போம். தாம் வாழும் ஊரில் பிறந்த தனது பக்தரின் குழந்தைக்கு ஞானப்பாலை ஊட்டி, தமது வஸ்திரத்தையும் அக்குழந்தைக்கு அளித்து, திருமகளான கோமளவல்லி தாயார் கொடுத்த ஆச்சரியத்தை கும்பகோணத்து மக்கள் இன்றும் ஆச்சரியத்துடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். திருமகளின் திருவருள் ப்ரத்யட்சமாக நடந்தேறியது கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் திருக்கோயிலில். இது நிகழ்ந்தது 1572ம் ஆண்டு.