தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில்: குழந்தை பாக்கியம் தரும் 500 ஆண்டுகள் பழமையான அற்புதத் தலம்!

காசிப முனிவர் வழிபட்ட திருமந்திர நகரின் வரலாற்றுச் சிறப்புகளும் அருள் அதிசயங்களும்!
ராமேஸ்வரர் கோவில் - Sankara Rameswarar Temple
ராமேஸ்வரர் கோவில் - Sankara Rameswarar Temple
Updated on

தூத்துக்குடி நகர மையத்தில் உள்ள 500 ஆண்டு பழமையான சங்கர ராமேஸ்வரர் கோவில், திருமந்திர நகரென அழைக்கப்படும் முக்கிய சிவஸ்தலமாக விளங்குகிறது. காசிப முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், சங்கர ராம பாண்டியன் கட்டிய கோவில், வாஞ்சா புஷ்கரணியில் நீராடி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, தினசரி ஆறு கால பூஜை, அன்னதானம், சித்திரை தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்களால் புகழ்பெற்றது.

இக்கோவிலில் உள்ள மூலவர் சங்கர ராமேஸ்வரர் அம்பிகை பாகம்பிரியாள் ஆவார். இக்கோவில் கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது. சிவபெருமான் பார்வதி தேவிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த ஸ்தலமாக விளங்கி வருகிறது.

இதனால் இந்த இடம் திருமந்திர நகர் எனவும் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் வந்த காசிப முனிவர் இப்பகுதியில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இந்த கோவில் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

500 ஆண்டுகள் பழமையான கோவில். காசிப முனிவர் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இந்த கோவில் சங்கர ராமேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் காசிப முனிவர் கௌதமர் பரத்வாஜர் அத்திரி போன்ற முனிவர்கள் வழிபட்ட ஸ்தலமாகும்.

ராமேஸ்வரர் கோவில் - Sankara Rameswarar Temple
ராமேஸ்வரர் கோவில் - Sankara Rameswarar TempleAI Image

குறுநில மன்னரான சங்கர ராம பாண்டியன் கயத்தாரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துவந்தான். இவருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் மன்னன் மனம் வருந்தினான். ஒருமுறை மன்னன் காசிக்குச் சென்று நீராடிய பொழுது இறைவன் மூலம் ஒரு அசரீரி வாக்கு கேட்டது.

இப்போது இறைவன் மன்னனிடம் திருமந்திர நகரில் காசிக்கு நிகரான திருமந்திர நகரில் உள்ள வாஞ்சா புஷ்கரணியில் நீராடி சிவலிங்கத்தை வழிபட்டுவா உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லி மறைந்தது அதன்படியே மன்னன் தூத்துக்குடி வந்து அங்குள்ள வாஞ்சா புஷ்கரணியில் நீராடி சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்தில் பாண்டிய மன்னன் சிவனுக்கு கோவில் கட்டினார்.

இந்த கோவிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இந்தக் கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது.

இறைவன் சன்னதி முன்பு அர்த்தமண்டபம் மகா மண்டபம் உள்ளது. இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கி ஒரு கையில் தாமரையும் மற்றொரு கையை தன் இடையுடன் தொங்கவிட்டபடி காட்சி தருகிறார். பார்ப்பதற்கு நாட்டிய மங்கை போல் காட்சி தருகிறார் கோவிலின் முன்புறம் உயர்ந்த கொடிமரம் உள்ளது. வாசலில் இருபுறமும் சூரியன் சந்திரன் அது அதிகார நந்தி ஆகியோர் உள்ளனர்.

கருவறை வாசலில் விநாயகர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் தென்முகன் பிரம்மன் துர்க்கை சன்னதிகள் உள்ளது. தென்புறம் 63 நாயன்மார்கள் உள்ளனர். புறச்சுற்றில் பஞ்சலிங்கங்கள் காணப்படுகிறது. வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் காட்சி அளிக்கிறார். நடராஜர் சன்னதி அருகில் நவகிரகங்களுக்கு சன்னதிகள் உள்ளன. இங்கே சனி பகவான் கையில் அம்புடன் காணப்படுகிறார். இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர் ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சிறப்புகள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
ராமேஸ்வரர் கோவில் - Sankara Rameswarar Temple

இங்குள்ள வாஞ்சா புஷ்கரணியில் நீராடி சிவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் நவராத்திரி ஐப்பசி திருவிழா தைப்பூசம் தெப்பத்திருவிழா சிவராத்திரி மற்றும் பங்குனி மாதம் காரைக்கால் அம்மையாருக்கு சிவன் மாங்கனி கொடுத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது

இக்கோவிலில் கண்டெடுத்த சுவடி கட்டுகளில் 3127 ஏடுகள் இருந்தன. இந்த ஏடுகள் 18 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இந்த ஓலைச்சுவடிகளில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் உள்ளது.

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் அகஸ்தியர் அருளிய திரு முருகாற்றுப்படை திருமந்திரம் ஆகியவையும் அடங்கியுள்ளது. இந்த கோவிலில் தினசரி அன்னதானம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலை நாலு மணி முதல் 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
ராமேஸ்வரர் கோவில் - Sankara Rameswarar Temple

இந்தத் தலத்தைப் பற்றிய தகவல்களை அறிவதன் மூலம், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்கள் எந்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட வேண்டும் என்ற தெளிவையும், 500 ஆண்டுகள் பழமையான தமிழ் சைவச் சுவடிகளின் வரலாற்றுப் பெருமையையும் உணர்ந்து இறை அருளைப்பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com