திருப்புடைமருதூர் நாறும்புநாதர் கோவில்: வேண்டிய வரம் தரும் தென்னகத்தின் காசி!

ருத்ராட்ச அம்பாள், சாய்ந்த சிவலிங்கம் — திருநெல்வேலி திருப்புடைமருதூர் கோவிலின் அதிசய வரலாறும் வழிபாட்டு மகிமையும்!
திருப்புடைமருதூர் கோவில் - Tiruppudaimaruthur Temple
திருப்புடைமருதூர் கோவில் - Tiruppudaimaruthur Temple
Updated on

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது திருப்புடைமருதூர் கோவில். இது ஒரு பழமையான சிவன் கோவிலாகும். முற்காலத்தில் இந்த இடங்கள் முழுவதும் மருத மரங்கள் நிறைந்து காணப்பட்டது. இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார் நாறும்பு நாதர் தாயார் கோமதி அம்பாளுடன் இங்கு அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்பாள் ருத்ராட்சத்தால் ஆன மேனியுடன் காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும்.

மூலவர் தலையில் வெட்டு காயத்துடன் சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். சுயமபு மூர்த்தியாக இருப்பதால் சந்தனாதி தைலம் பூசி பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த கோவில் காசிக்கு நிகரான ஸ்தலமாக கருதப்படுகிறது.

இந்த ஸ்தலம் ஸ்ரீ சைலத்தின் தலைப்பகுதியாகவும் திருவிடைமருதூர் இடைப்பகுதியாகவும் திருப்புடைமருதூர் பாத பகுதியாகவும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சிறப்புகள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்!
திருப்புடைமருதூர் கோவில் - Tiruppudaimaruthur Temple

தைப்பூசம் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இக்கோவில் பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்டு பண்டைய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தல விருட்சம் மருத மரம் தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம்.

தல வரலாறு

ஒரு சமயம் சிவனிடம் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காசிக்கு ஒப்பான இடத்தை தென்னகத்தில் காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் பிரம்ம தண்டத்தை தரையில் இடும்படி கூறினார். அவர்கள் பிரம்மதண்டத்தை தரையில் வீசும்போது அந்த பிரம்மதண்டம் தாமிரபரணி ஆற்றைக்கடந்து திருப்படை மருதூர் என்ற ஊரில் நின்றது. இந்த இடமே காசிக்கு நிகரான இடம் என சிவன் கூறினார். அதை தேவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மற்றொரு கதை

ஒரு சமயம் மருத மரங்கள் நெருங்கிய அடர்ந்த காட்டில் மன்னன் பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் ஒரு விலங்குகளும் கண்ணில் தட்டுப்படவில்லை. பின்னர் மன்னன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தார். அந்த சமயம் ஒரு புள்ளிமான் துள்ளி குதித்து ஓடியது. உடனே மன்னன் அந்த மான் மீது தன் அம்பை எய்தார்.

அந்தமான் ஒரு பெரிய மருத மரத்தின் பொந்தில் போய் விழுந்து மறைந்தது. கோபமடைந்த மன்னன் அந்த மருத மரத்தை வெட்டுமாறு பணித்தார்.

மான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அந்த இடத்தில் ஜோதி குழம்பாக சிவன் சுயம்பு வடிவத்தில் காட்சி அளித்தார். பாண்டிய மன்னர் அந்த இடத்தில் சிவனுக்காக கோவில் கட்டினார். இங்குள்ள சிவன் தலை சற்று சாய்ந்த நிலையில் இருக்கும். அதாவது பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கேட்பதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அதிசயங்களும் காமதேனுவின் தல வரலாறும்!
திருப்புடைமருதூர் கோவில் - Tiruppudaimaruthur Temple

ஒரு சமயம் கருவூர் சித்தர் சிவனை தரிசிக்க இங்கு வந்தார். அந்த சமயம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவரால் ஆற்றைக் கடந்து செல்ல முடியவில்லை. சிவனிடம் மனம் உருகி வேண்டினார். சிவனும் கருவூர்சித்தர் தன்னை வழிபட தாமிரபரணி ஆற்றில் வழி ஏற்படுத்திக்கொடுத்தார்.

அன்று முதல் பக்தர்கள் அனைவருக்கும் செவி சாய்த்து அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்து வேண்டிய அருள்புரிகிறார்.

சிவனின் தலைப்பகுதியில் மானின் காலடி தடமும் மன்னன் கோடரியால் வெட்டிய தழும்பும் காணப்படுகிறது.

இங்கு இருக்கும் கோமதி அம்மன் கைலாய மலையில் உள்ள நீல கல்லால் ஆன தேவியென கருதப்படுகிறது. காசியில் உள்ள கங்கை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதுபோல் இங்குள்ள தாமிரபரணி நதியும் தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.

திருப்புடைமருதூர் கோவில் - Tiruppudaimaruthur Temple
திருப்புடைமருதூர் கோவில் - Tiruppudaimaruthur Temple

எனவே இந்த இடம் தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது.

உள்புறம் உள்ள சுற்றுப்புறகாரத்தில் 63 நாயன்மார்கள் சிலை உள்ளது. இதனுடன் கருவூர் சித்தர் சிலையும் காணப்படுகிறது. பிரம்மதண்டம். கருவறையின் இடதுபுறம் நிறுவப்பட்டுள்ளது. சிவனுக்கு புனுகு சாத்தி வழிபாடு நடைபெறுகிறது.

ராஜகோபுரம் மிகுந்த வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது.

இந்தக் கோவிலிலும் கோவிலைச் சுற்றியும் எண்ணற்ற மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் எண்ணற்ற பறவைகள் காணப்படுகிறது.

ஜாதக ரீதியாக பிரச்னை உள்ளவர்கள் தங்களது கோரிக்கைகளை இங்குள்ள ஒரு பெட்டியில் எழுதி போடுகிறார்கள். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவதாக ஐதீகம்.

திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

மும்மூர்த்திகள் வழிபட்ட ஸ்தலமாகும். திருமால் பிரம்மன் இந்திரன் ஆகியோர் இங்கு வந்து பூஜை செய்தனர். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. ராஜகோபுரத்தில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது.

தினசரி காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com