உருவாரத் திருவிழா தெரியுமா?

தென் தமிழகத்தில் அய்யனாருக்கு எடுக்கப்படும் விழாவின் பெயர் புரவியெடுப்பு திருவிழா அல்லது குதிரையெடுப்பு என்று அழைக்கப்படுகிறது.
Puravi edukum festival
Puravi edukum festival
Published on

தென் தமிழகத்தில் அய்யனாருக்கு எடுக்கப்படும் புரவியெடுப்பு திருவிழா அல்லது குதிரையெடுப்பு திருவிழா என்று அழைக்கப்படும் திருவிழா, நாட்டுப்புறத் திருவிழாக்களுள் ஒன்றாகும். அய்யனார் கோவில்களில் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குதிரைகளுக்கு செய்யும் மரியாதையாக இந்த விழா நடத்தப்படுகிறது.

இதன் முக்கிய அம்சங்கள் :

இந்த விழாவில் முக்கியமாக மண்ணால் செய்யப்பட்ட குதிரை உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குதிரை உருவங்களை அலங்கரித்து அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

அய்யனார் வழிபாடு :

அய்யனார் என்ற காவல் தெய்வத்தின் வாகனமாக குதிரை இருப்பதால் இந்த விழா அய்யனாருக்கு செய்யப்படும் மரியாதை ஆகும். புரவி எடுப்பு திருவிழா ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விழாவை நடத்துகிறார்கள். புரவிஎடுப்பு திருவிழா கிராமிய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும். இது ஒரு பாரம்பரியமிக்க விழா ஆகும்.

உருவாரம் எடுத்தல் விழா :

புரவி என்பதற்கு குதிரை என்பது பொருளாகும். மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறைக்கு புரவியெடுப்பு என்று பெயர். இவ்வகை வழிபாடு பெரும்பாலும் தென் தமிழக பகுதிகளில் காணப்படுகிறது. இதனை 'உருவாரம் எடுத்தல்' எனவும் வழங்குவார்கள். தாத்தா, பாட்டி உருவங்களையும் தலையில் சுமந்து, குதிரை உருவங்களையும் தலையில் சுமந்து சென்று கோயில்களில் வைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
அமானுஷ்ய ஆச்சரியங்கள் நிறைந்த சொரிமுத்து அய்யனார் கோயில்!
Puravi edukum festival

"உனக்கு உருவாரம் எடுக்கிறேன், என் துன்பத்தை தீர்த்து வை " என தெய்வத்தின் மீது சார்த்தி உறுதிமொழி எடுத்துக் கொள்வர். இன்னல்கள், துன்பங்கள் தீர்ந்ததும் தெய்வம் தீர்த்து வைத்ததாக நம்பி உருவாரம் எடுப்பர்.

உருவாரம் செய்த கலைஞனுக்கு சிறப்பு செய்தல் :

இந்த உருவாரங்கள் அய்யனார், மாரியம்மன், செல்லி அம்மன் முதலான நாட்டுப்புற கோயில்களில் வைக்கப்பட்டிருப்பதை காணலாம். திருவிழாவின் போது உருவாரம் செய்த கலைஞர் மேளதாளத்துடன் சென்று ஊர் மக்களால் அழைத்து வரப்படுவார். அவரது வீட்டிலேயே அவருக்கு சிறப்பு செய்வார்கள்.

அவரை கோயிலுக்கு அழைத்து வந்த பின்னர் உருவாரம் கொண்டு வருவோரின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, கொட்டும் மேளத்துடன் அனைவரையும் ஒன்றாக திரட்டி கொண்டு வந்து 'உருவாரங்கள் 'அனைத்தையும் கோயிலில் இறக்கி வழிபாடு நடத்துவார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கெடுத்து விழாவை சிறப்பிப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஊரைத் காக்கும் காவல் தெய்வமாக அய்யனார் கோவில்கள், கருப்பசாமி கோவில் இருக்கும். காலம் காலமாக இந்த அய்யனார் கோவில்களில் வருடம் தோறும் திருவிழா, பொங்கல் வைத்து வழிபடுவது, புரவி எடுப்பு திருவிழா போன்றவை ஊர் மக்களால் இணைந்து நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
புரவி எடுக்கும் திருவிழா!
Puravi edukum festival

மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து அதனை ஊர்வலமாக எடுத்து கோவிலில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து நிறுத்திக் கடமையை முடிப்பார்கள். இந்த சிலைகள் அனைத்தும் இந்த கோயிலை சுற்றி வைக்கப்படும் வழக்கமும் உள்ளது. இந்த வழக்கம் இன்றளவும் கிராம பகுதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கலாச்சாரத்துடன் இந்த விழா பக்தி பரவசத்துடன் பக்தர்கள் எடுத்து வரும் போது பார்க்க பரவசமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com