

சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் அமைந்துள்ளது இந்த புகழ் பெற்ற மசூதி. மஸ்ஜிது ஹராம் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் புனிதமான மசூதி ஆகும்.
இறைத்தூதர் இப்ராஹீம் நபியால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் கபாவை சுற்றி உள்ள இந்த மசூதி ஏழாம் நூற்றாண்டு முதல் பல வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று லட்சக்கணக்கான யாத்திரிகர் தொழுகை நடத்தக்கூடிய அளவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய மசூதியாக கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த கபாவை சுற்றி திறந்தவெளி பகுதியாக இருந்தது. முஹம்மது நபி மெக்காவை வெற்றி கொண்ட பிறகு கபாவை சுற்றி இருந்த சிலைகளை அகற்றி இந்த இடத்தை வழிபாட்டுத் தலமாக அர்ப்பணித்தார்.
கல்பா உமர் முதலில் கஃபாவை சுற்றி சுவர்களில் எழுப்பினார். தொடர்ந்து உஸ்மான் உமையாக்கள் மற்றும் அப்பாசியர்கள் காலங்களில் மசூதி பலமுறை விரிவாக்கம் செய்யப்பட்டது
சுல்தான் சலீம் காலத்தில் குவிமாடங்கள் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டது. 20 மட்டும் 21ஆம் நூற்றாண்டில் சவுதி அரசாங்கத்தால் மிகப்பெரிய அளவில் நவீன மயமாக்கப்பட்டு இந்த மசூதி உருவாக்கம் செய்யப்பட்டது.
அது முதல் மில்லியன் கணக்கில் யாத்திரைகள் வருகை தருகிறார்கள். லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யும் வகையில் இந்த இடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாத்தின் முக்கிய கில்பா தொழுகை திசையை குறிக்கும். இந்த இடம் ஹஜ் யாத்திரையை செய்பவர்களின் முக்கிய மையப் புள்ளியாகும். மசூதிக்குள் புகழ்பெற்ற ஜம்ஜம் கிணறு அமைந்துள்ளது.
ஹஜ் யாத்திரைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை தருகிறார்கள்.
1932 முதல் 1953 வரை சவுதி மன்னர் இதன் கட்டுமான பணிகளை மேற்கொண்டார்.
1988 மற்றும் 2011 இல் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது மசூதி 15 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இந்த பரப்பில் சுமார் 30 லட்சம் மக்கள் இருக்க முடியும். 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுமார் பத்து மடங்கு பெரிதாக உள்ளது.
கபாவை சுற்றி திறந்த வெளிப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் நபர்கள் நடந்து செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் தரைத்தளம் முழுவதும் குளிர்ந்த நிலையில் உள்ள பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. எஸ்கலேட்டர்களும் குளிரூட்டும் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1980 இல் பல்வேறு இடங்களில் சென்சார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. ரமலான் மற்றும் ஹஜ் பயண நேரத்தில் இந்த இடம் மிகவும் பரபரப்பாக காணப்படும்.
கபா (மசூதியின் மையத்தில் உள்ள புனிதமான அமைப்பு) கருப்பு நிற போர்வையால் மூடப்பட்ட கனசதுர வடிவில் உள்ளது. இதைச் சுற்றியே யாத்திரிகர்கள் வலம் வருகிறார்கள். ஜம் ஜம் கிணறு ஒரு வற்றாத ஒரு இயற்கையான நீர் ஆதாரமாக விளங்குகிறது. இது இஸ்மாயில் நபியின் காலத்தில் தோன்றியது . தலைமுறை தலைமுறையாக யாத்திரிகர்களில் தாகத்தை தீர்த்து வருகிறது.
கபாகட்டும் போது இப்ராஹீம் நபியின் கால் தடம் இந்த இடத்தில் காணப்பட்டது. இது இஸ்லாத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கபாவை சுற்றி யாத்திரிகர்கள் நடந்து செல்லும் திறந்த வெளிப்பகுதி மதாப் எனப்படுகிறது. முஸ்லிம்கள் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறை பார்க்க வேண்டிய அற்புதமான இடமாகும். புனித இடமாகவும் கருதப்படுகிறது.