தமிழ் நாட்காட்டியின் எட்டாவது மாதமாக கார்த்திகை உள்ளது. பல்வேறு சிறப்புகள் மிக்க கார்த்திகை மாதம் தமிழ் கடவுளான கார்த்திகை மைந்தனின் பெயரால் உருவானது. இந்த கார்த்திகை மாதம் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் இது சிவன், சக்தி, முருகன், ஐயப்பன், துளசி ஆகியோரை வழிபட மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் இருந்து தெய்வீக சக்திகள் சிறப்பு பலம் பெறுகின்றன. இந்த மாதம் புண்ணியம், செல்வம், நல்வாழ்க்கை, வீடுபேறு ஆகியவற்றை அடைய சிறப்பான காலமாகும்.
ஒருவர் கார்த்திகை மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடி, அன்னதானம் செய்து, துளசி பூஜை செய்வதால் அவருக்கு ஏராளமான புண்ணியம் கிடைப்பதோடு முடிவில் அவருக்கு வீடு பேறும் கிடைக்கிறது. இந்த மாதத்தில் நற்செயல் செய்வோருக்கு அவரது இறுதி காலத்திற்கு பின் முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதம் இறைவவனை அடையக்கூடிய மாதமாகும்.
கார்த்திகை மாதத்தில் தான் முருகப் பெருமான் தவமிருந்து தனது அன்னை பார்வதி தேவியிடம் சக்தி மிகுந்த வேலை பெற்று தாரகாசுரனைக் அழித்தார். கார்த்திகை என்றால் வெற்றியைக் கொடுப்பவள் என்று பொருள். கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த மாதத்தில் தவமும், விரதமும் இருப்பது அதிக பலன்களை தரும். ஒருவரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்.
கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் வதம் செய்து மத்ஸ்ய அவதாரம் எடுத்தார். கார்த்திகை மாதத்தில் விஷ்ணுவும் மத்ஸ்ய வடிவில் நீரில் வசிக்கிறார். இதனால் கார்த்திகை மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் ஆறு அல்லது குளத்தில் நீராடினால் பாவங்களிலிருந்து விடுபட்டு இறைவனின் அருளினை பெறலாம். இந்த மாதம் மீன்களை உண்பதை தவிர்க்கவும்.
கார்த்திகை மாதத்தில் கார்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், இம்மாதத்தில் ஆதரவற்றவர்களுக்கும் எளியவர்களுக்கும் போர்வைகள் மற்றும் கம்பளி ஆடைகளை தானமாக வழங்க வேண்டும். ஆடைகளை தானம் செய்வதன் மூலம் ஒருவர் தன்னை பிடித்த பாவங்களிலிருந்து விடுபடலாம்.
மேலும் கார்த்திகை மாதத்தில் பணம், தானியங்கள், துளசி, பசு மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை தானம் செய்தவன் மூலம் ஒருவர் தன்னை பிடித்துள்ள தோஷங்களிலிருந்து விடுபடலாம். இவ்வாறு தர்ம காரியங்கள் செய்வதால் ஒருவரது செலவினங்கள் அதிகரித்தாலும் அவர் லஷ்மிதேவியின் அருளைப் பெற்று அதிக செல்வங்களையும், மகிழ்ச்சியையும் பெறுவார்.
கார்த்திகை மாதத்தில் தினசரி காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடலாம். ஒருவருக்கு பித்ரு தோஷம் நீங்கினால் தான் அவருக்கு தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். தங்களது முன்னோர்களின் ஆசி கிட்டாத வரை கடவுளின் அனுக்கிரகமும் எளிதில் கிடைக்காது. இதனால் திருமணத் தடை, காரியத் தடை ஆகியவை ஏற்பட்டு ஒருவர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும். அதனால் கார்த்திகை மாதத்தில் காகங்கள், குருவிகள் உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு , தானியங்கள் அளிக்க தவற வேண்டாம்.
இந்த மாதத்தில் வீட்டில் உள்ள பசுக்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ளுங்கள். பசுக்களில் தான் அனைத்து தெய்வங்களும் குடியிருக்கின்றன. பசுக்களுக்கு தினமும் வாழைப்பழம் கொடுத்து மகிழ்ச்சியுற வைத்துக் கொள்ளுங்கள். நிறைய அருகம் புல்லையும் உண்ணக் கொடுக்கலாம். வீட்டில் பசு வளர்க்க முடியாதவர்கள் கோசாலைக்கு சென்று உணவுதானம் அளித்து பசுவினை வழிபடலாம். இதனால் லஷ்மி தேவியின் அருள் உடனடியாக கிடைக்கும் .
கார்த்திகை மாதம் அன்னதானம் செய்ய ஏற்ற மாதம். இந்த மாதத்தில் பல கோயில்களில் விசேஷம் நடைபெறுவதால் அதில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கும் எளியவர்களுக்கும் அன்னதானம் செய்யுங்கள். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், நாய் போன்ற விலங்குகளுக்கும் தானம் அளியுங்கள். கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு பொறியும் கடலையும் வழங்குங்கள். இறைவனின் அருள் கிடைக்கும்.