பெரிய விலங்கு மட்டும்தான் சிறியவற்றை தாக்கும் என்பது தவறு. உருவத்தில் சிறியதாக இருக்கும் விலங்குகள் கூட மிகவும் ஆக்ரோஷமாக தாக்கக்கூடிய பண்புகளை கொண்டிருக்கும். ஆனால் விலங்குகள் எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் தங்களுடைய கோபத்தை காட்டிக் கொள்ளும். அப்படி உலகில் அதிகமாக தனது கோபத்தை வெளிப்படுத்தும் 5 விலங்குகள் பற்றி பார்ப்போமா குட்டீஸ்?
மேற்கு ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பன்றி இனத்தை சேர்ந்திருந்தாலும் மற்ற பன்றிகள் போல இல்லாமல் இவை பற்களை கொண்டிருக்கும். கோபம் ஏற்படும் நேரங்களில் மனிதர்களைக் கூட ஆக்ரோஷமாக தாக்கும். முழுவதுமாக வளர்ந்த காட்டுப்பன்றி கிட்டத்தட்ட 130 கிலோ எடையுடன் காணப்படும். இதன் ஒவ்வொரு கடியும் உறுதி கொண்டது. இந்த பன்றிகள் அனைத்து விலங்குகளையும் உண்ணக்கூடிய குணத்தை கொண்டது.
தென் ஆப்பிரிக்கா, தென் ஆசியக் காடுகளில் அதிகம் வாழும். தேன் வளைக் கரடிகளுக்கு பயம் என்று ஒன்று கிடையாது.
பார்ப்பதற்கு கீரியின் உருவம் போன்ற உடல் அமைப்பை கொண்டது. ஆனால் தன்னைவிட உருவத்தில் பத்து மடங்கு பெரிய விலங்குகளை கூட எதிர்த்து தாக்கக்கூடிய தன்மை கொண்டது. இவற்றின் அதிக கோபம், ஆக்ரோஷத்தின் காரணமாக மிருக காட்சி சாலையில் வைத்து பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் சமமாக சண்டையிடும் திறமையை இது பெற்று உள்ளது. இவ்வளவு பெரிய கோவக்கார விலங்காக இருந்தாலும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அரிதான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பெரியதாக வளரும் விலங்கு என்ற சாதனையை கொண்டுள்ள உப்பு நீர் முதலை ஆபத்தானதும் கூட. ஆண் முதலைகள் 24 அடி வரை வளரும் தன்மை கொண்டவை. 180 கிலோ எடை இருக்கும். இவை கொண்டுள்ள உறுதியான பற்கள் கோபம் ஏற்படும் நேரங்களில் மற்றவற்றை தாக்கும். பெரிய விலங்குகள் மனிதர்கள் உட்பட அனைத்தையும் ஒரே கடியில் கொன்றுவிடும். தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் இவை அதிகமாக வாழ்கின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக இக்கரடிகள் காணப்படுகின்றன. அதிகமாக தூங்கும் பழக்கத்தை கொண்ட இந்த விலங்கு சிறிய விஷயத்துக்கு எல்லாம் கோபப்படக் கூடியது.
மனிதன் எந்த ஒரு தொல்லையும் கொடுக்காமல் இருந்தாலும் மனிதனை தீவிரமாக தாக்கும் குணம் கொண்டது. கூரிய பற்களையும், கால்களில் மிகப் பெரிய நகங்களையும் கொண்டு உள்ளது.
ஒரே தாக்குதலில் சாதாரண கரடி ஏற்படுத்தும் காயங்களை விட அதிக அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி விடும் சூரியக்கரடிகள்.
ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட காட்டெருமைகள் மிகவும் கோபம் கொண்ட விலங்குகள். சாதாரணமாக ஒரு டன் எடை வரை வளரக்கூடியவை. ஒரே தாக்குதலில் மனிதனின் உயிரை எடுக்கும் அளவிற்கு திறன் கொண்டவை. இதனால் வருடத்திற்கு 200 நபர்கள் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைகின்றனர். இதனுடன் விளையாடுவது, இதனைப் பார்ப்பது என்பது கூட மிகவும் ஆபத்தானது.