அடடா! கொஞ்சிக் கொஞ்சி 'பேசும் பறவை'களா? என்னது, பறவைகள் பேசுமா?

World's most talkative birds
Birds that talk like humans

குட்டீஸ், உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா? நம்மளைப் போலவே பேசும் ஆற்றல் கொண்ட பறவைகள் நம்ம உலகத்துல இருக்கின்றன. அதுல பத்து வகைப் பறவைகளைப் பத்தி நாம இப்போ பார்க்கப் போறோம்.

1. ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி:

African grey parrot
African grey parrot

இந்தப் பறவை அதிக எண்ணிக்கையிலான வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்வதுடன், அவற்றைச் சரியாக உச்சரித்துத் தகுந்த இடத்தில் பயன்படுத்தவும் செய்கிறது.

2. பட்ஜெரிகர்:

Budgerigar
Budgerigar

இது ஒரு சிறிய கிளியாக இருந்தாலும், டஜன் கணக்கிலான வார்த்தைகளை நினைவில் வைத்துச் சொல்லும் திறமை பெற்றது. இதனிடம் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது வார்த்தைகளை மட்டுமல்ல, வரிகளைக்கூட ஒப்பிக்கும் ஆற்றல் கொண்டது.

3. மஞ்சள் நெற்றி அமேசான் கிளி:

Yellow-headed Amazon Parrot
Yellow-headed Amazon Parrot

இதற்கு வார்த்தைகளை நினைவில் வைக்கும் சக்தி அதிகம். அதுமட்டுமல்லாமல், மனிதர்களைப் போல உணர்வுபூர்வமாக உச்சரிக்கவும் இதற்குத் தெரியும்.

இதையும் படியுங்கள்:
Birds in Trouble: How We Can Help!
World's most talkative birds

4. பச்சை நிற இந்திய கிளி:

Indian parakeet
Indian parakeet

மிகவும் தெளிவான குரலில் பேசும் திறன் கொண்டது. இதுவும் வரி வரியாகச் சொன்னதைச் சொல்லும் சாமர்த்தியம் பெற்றது.

5. மலை மைனா:

Hill Myna
Hill Myna

மனிதக் குரலில் இயல்பாகப் பேசக்கூடிய பறவை இது. இதன் குரலுக்கும் மனிதக் குரலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம்.

6. நீல முகப்பு அமேசான் கிளி:

Blue-fronted Amazon parrot
Blue-fronted Amazon parrot

இது மிகவும் சரளமாகப் பேசும் பறவை. இதன் நினைவாற்றல் மிக அதிகம். பேச மட்டுமல்லாமல், மனிதர்களைப் போலச் சிரிக்கவும் அழவும் இதனால் முடியும்.

இதையும் படியுங்கள்:
கதைப் பாடல் : சீறுவோர் சீறுதல் சிறுமை அல்ல!
World's most talkative birds

7. எக்லெக்டஸ் கிளி:

Eclectus parrot
Eclectus parrot

இது மிகவும் இனிமையான குரலில் தெளிவாகப் பேசும் கிளி. எந்த மொழிச் சொற்களையும் திருப்பிச் சொல்லும் திறமை இதற்கு உண்டு.

8. இரட்டை மஞ்சள் மண்டை அமேசான் கிளி:

Double Yellow-Headed Amazon Parrot
Double Yellow-Headed Amazon Parrot

இது பேசுவது மட்டுமன்றி, பாடவும் உரையாடவும் செய்யும்.

9. குவேக்கர் கிளி:

Monk parakeet
Monk parakeet

மிகவும் விளையாட்டுத்தனமான கிளி. மனிதர்களின் பேச்சுகளை மட்டுமல்லாமல், வீட்டில் உண்டாகும் பல்வேறு சத்தங்களையும் இது மிமிக்ரி செய்து காட்டும்.

10. வெள்ளை காக்கட்டூ:

White Cockatoo
White Cockatoo

மிகவும் அழகான கொண்டை உள்ள வெள்ளை நிறக் கிளி. வாக்கியங்களை எளிதாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் ஆற்றல் பெற்றது. நாம் கேட்காத போதும், நாம் சொல்வதைத் திரும்பத் திரும்பச் சொல்லி நம்மைக் கிண்டல் செய்யும்.

இதையும் படியுங்கள்:
A friend in need is a friend indeed!
World's most talkative birds

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com