

யானை என்றாலே உங்களுக்கு மிகவும் பிடிக்கும் தானே..! யானையை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?
யானையோட நிறம் சாம்பல் நிறம். தடிமனான தோலையும் கொண்டிருக்கும். யானைக்கு நீண்ட துதிக்கை இருக்கும். விசிறி போன்ற பெரிய காது இருக்கும். யானைக்கு நீண்ட வெண்கலப் கற்கள் போன்ற தந்தங்கள் இருக்கும்.
ஆண் யானையை களிறு என்று சொல்லுவோம். பெண் யானையை பிடி என்று கூறுவோம். நாற்பதாயிரம் தசைகளால் யானையோட துதிக்கைகள் அமைந்திருக்கும். யானை சுமார் எழுபது வயசு வரைக்கும் இருக்கும். அதுக்கு நீண்ட ஆயுள் உண்டு.
ஒரு நாளைக்கு நூற்றி நாற்பது கிலோ முதல் இருநூற்றி ஐம்பது கிலோ வரை உணவு சாப்பிடும். நூறு லிட்டர் தண்ணீரை குடிக்கும். யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம். நினைவாற்றல் அதிகம். நம்மை ஒரு தடவை பார்த்து விட்டால் நம்மை அது மறக்கவே மறக்காது. அது தன்னோட தும்பிக்கையால முன்னூறு கிலோ எடையை கூட தூக்கி விடும் அவ்வளவு வலிமையானது.
யானைகளில் ஆப்பிரிக்க யானை, ஆசிய யானை என்று இரண்டு வகை இருக்கின்றன. நம்முடைய ஆசிய யானையை விட ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெருசா இருக்கும். அதோட பெரிய காது, நம்ம ஆசிய யானை காதை விட மிகவும் பெருசாக இருக்கும். ஆசியாவில் உள்ள பெண் யானைக்கு தந்தம் இருக்காது. ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள பெண் யானைக்கு தந்தம் இருக்கும். ஆப்பிரிக்க யானையோட முதுகுப்புறம் தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்து புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாக இருக்கும். இதனோட துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும்.
ஆனால் முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும் பின்னங்கால்களில் மூன்று நகங்களும் தான் இருக்கும். ஆசிய யானைகள் முதுகுச்சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறினவாகவும் இருக்கும். துதிக்கையின் நுனியில் ஒரே ஒரு இதழ் இருக்கும். முன்னங்கால்களில் ஐந்து நகங்களும் பின்னங்கால்களில் நான்கு நகங்களும் தான் இருக்கும்.
யானை தன்னோட காதை ஏன் எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?
யானையின் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங்களில் சுரக்காதால் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள ரத்த நாளங்கள் அதிகம் உள்ள காதை ஆட்டிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் தனது உடல் வெப்பநிலையை ஒரே அளவாக அதனால் பராமரிக்க முடிகிறது.
யானையைப் பற்றி இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா..! ஆனால் அதனிடம் ஏன் ஆசீர்வாதம் பெறுகிறோம் என தெரியுமா?
கோவிலுக்கு சென்றாலோ யானையை வெளியில் பார்த்தாலும் அதன் தும்பிக்கையை நம் தலையில் வைக்க சொல்லி ஆசீர்வாதம் பெறச் செல்வார்கள் இல்லையா? உங்களது அப்பாவும் அம்மா தாத்தா பாட்டி போன்றவர்கள் அப்படி ஏன் செய்யச் சொல்கிறார்கள் தெரியுமா?
யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் ஒரு தெய்வீக ரகசியம் உள்ளது. தினமும் மூலிகை மற்றும் தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலம் உள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்திய மிருகங்களினுள் யானையும் ஒன்று.
உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசி துவாரங்கள் வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் இருபத்தி நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை நம்முடைய சுவாசம் ஒரு நாசி துவாரத்தில் இருந்து இன்னொரு நாசித் துவாரத்தில் மாறிக்கொண்டே இருக்கும். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீகம் முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.
பிரணாயாமம் வாசியோகம் போன்றவை நமது சுவாசத்தை தெய்வீக தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்பொழுதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர் வாதம் செய்வதால் மகாலட்சுமியின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கிறது. அதனால் தான் யானையின் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் பெற சொல்கிறார்கள்.
குட்டீஸ்களா..! யானையை கோவிலில் பார்த்ததும் அதற்கு பழம் கரும்பு போன்றவை கொடுத்து விட்டு கூடவே உங்களுடன் வந்த பெரியவர்கள் முன்னே யானை பாகன் யானையை பிடித்துக் கொண்டு நிற்கும் போது யானையை தும்பிக்கையை தலையில் வைத்து ஆசீர்வாதம் வாங்குங்கள் சரி தானே!