சில உயிரினங்களின் அமைப்பு நின்று கொண்டு தூங்குவதற்கு ஏற்றாற் போல் உள்ளது. அவை எவை என்று பார்ப்போம்...
யானை:
இவற்றின் பெரிய உடம்பு வாகினால் படுத்து தூங்குவது மிகவும் சிரமமான ஒன்று. இவை நின்று கொண்டே தூங்கும். இவற்றால் இரண்டு மணி நேரம் மட்டுமே படுத்து தூங்க முடியும். சூற்றுச் சூழலுக்கு ஏற்றார் போல் இது நின்று கொண்டே தூங்க பழக்கப்பட்டுள்ளது.
ஒட்டகச்சிவிங்கி:
ஒரு நாளைக்கு அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை மட்டுமே ஓய்வு எடுக்கும். இவற்றின் நீண்ட கால்களும், இதன் உயரமும் கீழே படுப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன . இவை பெரும்பாலும் நின்று கொண்டே இருக்கும்.
Starlings and pigeons:
ஸ்டார்லிங் மற்றும் புறாக்களின் கால்களில் இருக்கும் டென்டண் என்ற அமைப்பு இவை காலை ஊன்றும் போது இறுக்கமாக பிடித்துக்கொள்ள உதவும். நின்ற நிலையில் தூங்கினாலும் இவை கீழே விழாது.
ஃப்ளெமிங்கோ:
இவற்றால் ஒற்றைக்காலில் நின்று கூட தூங்கமுடியும். இவற்றின் கால்கள் இவை நன்கு நிற்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தண்ணீரிலே இருப்பதால் உட்காருவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
வரிக்குதிரை:
இவை பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். பெரும்பாலும் இவை நின்று கொண்டே தூங்கும்.
பசு:
அடிக்கடி நின்று கொண்டு தூங்கும் பசு. இவற்றின் கால்கள் வலுவாக உள்ளதால் நிற்பதில் சிரமம் இருக்காது. சிலசமயம் படுத்துக்கொண்டும் தூங்கும்.
குதிரை:
குதிரைகள் நின்று கொண்டே தூங்குவதில் எக்ஸ்பெர்ட் ஆகும். இதன் கால்களில் உள்ள stay apparatus அமைப்பு அதற்கு உதவியாக உள்ளது. இதன் உடலமைப்பு கீழே படுத்துக் தூங்கி எழுவதில் சிரமம் உள்ளதால் பெரும்பாலும் இவை நின்று கொண்டே தூங்கும் பழக்கம் கொண்டவை.