பறவைகளைப் பிடிக்கும் மரம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...?

pisonia bird catcher tree
Pisonia bird catcher tree
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நியூசிலாந்து, நோர்போக் தீவு, லோர்ட் ஹாவ் தீவு மற்றும் ஹவாய் தீவு போன்ற இடங்களைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம், பறவைகளைப் பிடிக்கும் மரம் என்று அழைக்கப்படுகிறது. நிக்டாஜினாசியே குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இம்மரத்தின் அறிவியல் பெயர் 'பைசோனியா புரூனோனியானா' (Pisonia brunoniana).

இம்மரத்திற்கு மருத்துவரும், இயற்கையாளருமான வில்லியம் பைசோ என்பவரின் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. இம்மரத்தினை 'பராபரா' என்றும் சொல்கின்றனர்.

காகிதப் பூ குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், 66 அடி உயரம் வரை வளரக் கூடியது. பல கிளைகளை கொண்டது. மிருதுவானது. வெளுத்த நிறம் கொண்டது. தடிமனான, பச்சை நிறம் உடைய 25 செ.மீ. நீளம் உடைய இலை. இம்மரத்தின் வரும் பழங்கள் நேராக நிமிர்ந்து முக்கோண வடிவமாக இருக்கும். இதன் மீது அடர்த்தியான இனிப்பான பசை மூடி உள்ளது. அதனால் இதன் மீது உட்காரும் பறவைகள் பசையில் ஒட்டிக்கொள்கிறது. அப்பறவை, தப்பிக்க முயற்சிக்கும் போது மேலும் இதன் இறக்கையில் பசை ஒட்டிக்கொண்டு பறவை பறக்க முடியாமல் மாட்டிக் கொள்கிறது. சிறுவர்கள் இம்மரத்தில் ஏறி பறவைகளை பிடித்துக் கொள்கிறார்கள்.

நியூசிலாந்தில் இத்தாவரமானது கெர்மாடெக் தீவுகள் தொகுதியில் உள்ள ராவோல் தீவின் கடற்கரையோரக் காடுகளில் காணப்படுகிறது. மூன்று மன்னர்கள் தீவுகள் மற்றும் வடக்குத் தீவுகளில் இத்தாவரம் வாங்காபே துறைமுகத்திலிருந்து மாங்காவாய் வரை வெவ்வேறு இடங்களில் ஆங்காங்கே காணப்படுகிறது. வரலாற்று ரீதியாக, இது கோரமண்டல் தீபகற்பத்தில் ஓக்லாந்துக்கு அருகில் வளர்ந்து வந்தது. தற்போது இத்தாவர வகையானது தீவுகளின் கடற்கரையிலிருந்து சற்று விலகிய பகுதிகளில் குறிப்பாக கொறிப்பனவற்ற தீவுகளில் காணப்படுகின்றன.

இத்தாவர வகையானது நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் முற்றிலும் அழிந்து விட்டது. இத்தாவரத்தின் அகன்ற இலைகளானவை கால்நடை இனங்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படுவதால் இவ்வாறான நிலை உருவாகி இருக்கலாம். ஹவாய் தீவுகளில் இத்தாவரமானது 'பபாலா கெபாவ்' என அழைக்கப்படுகிறது. வறண்ட மற்றும் மிதமான தட்பவெப்பநிலை காணப்படும் பகுதிகளில் இது பரவலாகக் காணப்படுகிறது. இம்மரம் ஆஸ்திரேலியாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.

ஹவாய் தீவில். அங்கிருக்கும் பறவை பிடிப்பவர்களால் இத்தாவரத்தின் ஒட்டக்கூடிய பழங்கள், பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் இவ்வாறு பிடித்த பறவைகளிலிருந்து இறகுகளைச் சேகரித்து பல்வேறு பொருள்களைத் தயாரிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 பழக்கங்கள் உடையவரை அனைவருக்குமே பிடிக்கும்! 
pisonia bird catcher tree
logo
Kalki Online
kalkionline.com