யானையைப்போல பூனைக்கும் ஞாபக சக்தி உண்டு!

நாயை விட நன்றியும் யானையை விட ஞாபக சக்தியும் கொண்ட பூனை..
பூனை | Cat and Kittens
பூனை | Cat and KittensImage credit: Gemini AI
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 

யானையை பற்றி சொல்லும் போது யானைக்கு ஞாபக சக்தி அதிகம். அது எதையும் மறக்கவே மறக்காது என்றெல்லாம் சொல்வார்கள். என்னை பொறுத்தவரை பூனையும் கூட எளிதில் மறக்காது. 

நீங்கள் நம்ப மறுத்தால் என் அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் ஒரு 48 பிளாட்டுகள் அடங்கிய ஒரு வளாகத்தில் குடியிருந்தோம். அந்த குடியிருப்பின் ஸ்பெஷாலிட்டியே அங்கு இருந்த பூனைகள் தான். அந்த பக்கம் மியாவ்; இந்த பக்கம் மியாவ்; எந்த பக்கம் திரும்பினாலும் மியாவ் தான். அந்த மியாக்களுள் ஒன்று தான் பெண் பூனை Black Panther.

அவள் ஒருநாள் மூன்று குட்டிகள் போட்டாள். ஒன்று வெள்ளை; ஒன்று கருப்பு; ஒன்று டாபி. குட்டிகள் தொடர புலி மாதிரி நடந்து வருவாள். அந்த வளாகத்தில் நாய்கள் வளர்க்க அனுமதி இல்லை. ஆகவே பூனைகள் ராஜ்ஜியம் தான்.

ஒருநாள் இரவு திடீரென்று பெருமழை பெய்தது. செக்யூரிட்டி அசந்து விட்டார் போலிருக்கு காம்பவுண்டுக்குள் மூன்று தெரு நாய்கள் நுழைந்தது போலும்.. நான் ஒரு புத்தகம் படித்து விட்டு அப்போதுதான் கண்ணயர்ந்தேன்.

மழை பெய்யும் சத்தத்தைத் தாண்டி நாய்கள் குலைக்கும் சத்தமும் பூனை அலறும்; சீரும் சத்தம் கேட்டு அதிர்ச்சியானேன்.

சீறல் பெரிய பூனை Black Panther-ரோடாது என்று புரிந்தது. அப்படியானால் அந்த க்ரீச் என்ற அலறல்கள் பாவம் அதன் குட்டிகளோடதுதான் சந்தேகமே இல்லை. ஒரு தடியை எடுத்து கொண்டு பின் கதவை திறந்து சத்தம் போட்டேன். நாய்கள் ஓடிவிட்டன. ஆனால் பூனையையும் அதன் குட்டிகளையும் காண வில்லை. அந்த சமயமாக பார்த்து பவர் கட் ஆகி விட்டது. சரி நாளை காலை பார்த்து கொள்ளலாம் என்று படுத்துவிட்டேன். விடிந்ததும் முதல் வேலையாக வெளியே சென்று பூனைகளை தேட தொடங்கினேன்.

பூனை | Cat and Kittens
பூனை | Cat and KittensImage credit: Gemini AI

எந்த தடயமும் இல்லை.. செக்யூரிட்டியை  விசாரித்த போது  அவருக்கும் தெரியவில்லை. வீடு திரும்பிய நான் புழக்கடையை இன்னொரு முறை சுற்றி வரலாம் என்று போனேன். அப்போது அங்கு இருந்த ஒரு சாக்கடை சிமெண்ட் குழாய்குள்ளிருந்து  பூனை குட்டியின் குரல்  கேட்டது. டார்ச் அடித்து பார்த்தபோது  பிளாக் பாந்தரின் டாபி குட்டி இருப்பது தெரிந்தது.

கையை விட்டு அதை வெளியே எடுத்த போது அதன் உடலில் அப்படி ஒரு நடுக்கம். மற்ற இரண்டு குட்டிகளுக்கும் தாய் பூனைக்கும் என்னவாகி இருக்கும்? புரியவில்லை எனக்கு. 

புதர்களை எல்லாம் தேடியும் ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை. முதலில் குட்டியை ஆசுவாசப்படுத்தலாம் என்று உள்ளே எடுத்து சென்று அதற்கு சிறிது பாலை கொடுத்து படுக்க வைத்தேன். டாபிக்குத்தான் தெரியும் அதன் அம்மாவுக்கும் கூட பிறந்தவர்களுக்கும் என்ன ஆயிற்று என்று.

இதையும் படியுங்கள்:
நம்ம டெய்லி யூஸ் பண்ற வார்த்தைக்குப் பின்னாடி இவ்வளவு வரலாறா?
பூனை | Cat and Kittens

அது மட்டும் வாய் திறந்து பேசினால் நன்றாக இருக்கும் என்றும் நினைத்தேன். டாபி  எங்களிடம் பத்து நாட்கள் தங்கி பிறகு அதே காம்பவுண்டில் இருந்த ஒரு CAT LOVER-ரிடம் போய்விட்டது. அங்கு போனாலும் அது என்னை மறக்கவே இல்லை. ஆறு மாதம் கழித்து அந்த வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு வந்து விட்டோம். அந்த வீட்டை பற்றி எல்லாம் டாபி உட்பட  மறந்து போனது.

ஏதோ வேலை காரணமாக இரண்டு நாட்கள் முன் பழைய வீட்டிற்கு அருகில் போக நேர்ந்தது. வளாகத்தில் நுழைந்தேனோ இல்லையோ ஒரு அழகான டாபி என்னை நோக்கி ஓடி வந்து எனது  காலை முதுகை நிமிர்த்தியவாறு சுற்றி வந்து  கத்தியது.

"சார் இது யார் தெரியுதா நீங்கள் அன்று காப்பாற்றிய டாபி,  son of Black Panther" சொன்னார் செக்யூரிட்டி. பூனைக்கும் இருக்கு நாயை போல நன்றியும் யானையை போல  ஞாபகசக்தியும்  என்று புரிந்து கொண்டேன்.

logo
Kalki Online
kalkionline.com