சிறுவர் கதை - யானையும் நல்ல குணமும்

Elephant
Elephant
Published on

மிகப்பெரிய காட்டில் ஒரு பெரிய யானை வாழ்ந்து வந்தது. அந்த யானையோட உருவத்தை பார்த்து அந்த காட்டில் வாழ்ந்துகிட்டு இருந்த மற்ற மிருகங்கள் எல்லாம், ரொம்ப பயந்து நடுங்கின. யானை வருகிற பக்கம் கூட போக பயந்தன. அந்த மிருகங்கள் தங்களுடைய குழந்தைகளிடம் 'யானை ஒரு பெரிய அரக்கன்' என்று சொல்லி யானை இருக்கிற பக்கமே போக விடாம செய்தன.

இது எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியாக கழித்தது. இருந்தாலும் குட்டி குட்டி மிருகங்கள் தன்னை அரக்கனாக பார்த்து ஓடி ஒளியறதை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டது. என்னோட பழகாமல் தன்னைப் பற்றி எதுவும் தெரியாமல் தன்னை எல்லோரும் உதாசீனப்படுத்துறது யானைக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. இருந்தாலும் தைரியசாலியான யானை அதோட வாழ்க்கையை வாழ ஆரம்பித்தது.

ஒரு நாள் காட்டில் பெரிய மழை பெய்து திடீரென்று வெள்ளம் வர ஆரம்பித்தது. குட்டி குட்டி மிருகங்கள் வாழ்கிற இடத்துக்கு பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓட ஆரம்பித்தது.

அதனால் தீவில் மாட்டிகிட்ட மாதிரி எல்லாம் மிருகங்களும் உள்ளேயே மாட்டி கிட்டது. வெளியே வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா மிருகங்களும் தங்களோட குட்டிகளோட பட்டினி கிடந்தது.

அப்போது ரொம்ப நாளாகவே தன்னோட வேலை மட்டும் பார்த்துகிட்டு இருந்த யானை, ஒண்ணுமே பேசாம அங்க இருந்து நடக்க ஆரம்பித்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை - 'அக்கா - அண்ணன் - தங்கை'
Elephant

அப்போது ஒரு குட்டி குரங்கு 'யானை மாமா! எங்க குடும்பமே பட்டினியில் கிடக்கு. எங்களுக்கு உதவக் கூடாதா?' என்று கேட்டது. அதை பார்த்து சிரித்த யானை 'நான்தான் அரக்கன் மாதிரி இருக்கேனே? என்னை பார்த்தா பயமா இல்லையா?' அப்படின்னு கேட்டது.

அந்த குட்டி குரங்கு சொல்லியது ...'எங்க அப்பா அம்மா உங்க உருவத்தை பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வரக்கூடாது என்று அப்படின்னு சொல்லி வளர்த்தாங்க. ஆனா ஒருத்தரோட உருவத்தை வைத்து அவங்களோட குணத்தை எடை போடக் கூடாதுன்னும் சொல்லி இருக்காங்க. உங்களோட அமைதியான வாழ்க்கை முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோணலை' ன்னு சொல்லியது.

முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசியதும் யானைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே தன்னோட துதிக்கையை தண்ணிக்கு மேலே வைத்து, இந்த குட்டி குரங்கை அது மேல ஏறி வரச் சொல்லி வெளியே விட்டது. உடனே எல்லாம் மிருகங்களும் யானையோட துதிக்கையில் ஏறி அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தது.

அன்றிலிருந்து மற்ற மிருகங்கள் யானையையும் தங்களில் ஒருத்தராக நினைத்து பழக ஆரம்பித்தது. அந்த மிருகங்கள் தங்களோட குழந்தைகளையும் அந்த யானையுடன் விளையாட அனுமதித்தது. அதன் பின் அனைவரும் மிகவும் சந்தோசமாக காட்டில் வாழ ஆரம்பித்தது. யானையும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நீதி குழந்தைகளே: ஒருவரின் உருவத்தை பற்றி கேலி செய்யாமல், அவர்களிடம் இருக்கும் குணத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி அடையலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?
Elephant

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com