சிறுவர் சிறுகதை: காட்டில் மராத்தான்!

Cheetah chasing Deer
Cheetah chasing Deer
Published on

அன்புள்ள குழந்தைகளே!

இன்று நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். நமது முதுமலை காட்டில் சிங்கம் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உள்ளன. பெரிய காடு, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்... அதாவது கிழக்கு தொடர்ச்சியின் மலையும் சேர்ந்து உள்ளது.

காட்டில் யானை, புலி, சிறுத்தை, கரடி, நரி, ஓநாய், மான், முயல், குறும்பு செய்யும் குரங்குகளும் இருக்கின்றன.

நான் ஒரு விஷயம் சொல்கிறேன், நீங்கள் கேளுங்கள். விலங்குகள் பிற விலங்குகளைத் தின்றுவிடும். யானை மட்டும் இதற்கு விதி விலக்கு. புலி மற்றும் சிறுத்தைக்கு பிடித்த உணவு மான்தான்.

ஒரு மானைப் பார்த்துவிட்டால் சிறுத்தை விடவே விடாது. தொடர்ந்து ஓடி... ஓட்டம் என்றால் பயங்கர வேகமாகத் துரத்தும். மானும் சிறுத்தையைப் பார்த்து விட்டால் வேகமாக ஓட ஆரம்பித்துவிடும். கடைசியில் சிறுத்தை மானைக் கடித்துக் குதறிவிடும்.

இங்கு ஒரு விஞ்ஞான விஷயம் உள்ளது. சிறுத்தையின் வேகம் பெரிது. ஆனால் அந்த வேகத்தைவிட மான் பல மடங்கு வேகமாகத் தாவித் தாவி ஓடும். மானின் வேகம் அதிகமாக இருந்தாலும் சிறுத்தை எப்படி மானைப் பிடிக்கிறது? சிறுத்தையின் வேகம் மானின் வேகத்தைவிடக் குறைவாக இருந்தாலும் கடைசியில் மான் சிறுத்தைக்குப் பலியாகிவிடும்.

இது எப்படி சாத்தியம்? மானுக்கு மிக அதிக வேகம் இருந்தாலும் அதற்குச் சந்தேக புத்தியும் இருந்தது. பதட்டத்தில் மான் யோசிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

ஆம். சிறுத்தை துரத்தும்போது 5 நிமிடங்கள் கழித்து மான் நின்றுவிடும். சிறுத்தை வருகிறதா? எனப் பார்க்கும். இதில் பல நொடிகள், சில நிமிடங்கள் போய்விடும். மீண்டும் சிறுத்தை வருவதைப் பார்த்து மீண்டும் தாவித் தாவி வேகமாக ஓடும்.

மீண்டும் அதே தவறு. மான் நின்று சிறுத்தை வருகிறதா? எனப் பார்க்கும். சிறுத்தை பக்கத்தில் வந்துவிட்டதைப் பார்த்து மான் கலங்கி ஓட்டம் எடுக்கும். அடுத்த முறை மான் நின்று பார்க்கும்போது சிறுத்தை மானை கவ்விவிடும். மானுக்கு வேகம் அதிகமாக இருந்தும் பதற்றத்தில் நின்று சிறுத்தை வருகிறதா? எனப் பார்ப்பதில் நேரம் வீணாகிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
ஊர்ந்து செல்லும் நத்தைகள்; சுவாரசியத் தகவல்கள்!
Cheetah chasing Deer

மான் என்ன செய்து இருக்க வேண்டும்? திரும்பிப் பார்த்து நேரத்தை வீணடிக்காமல் ஓடி இருந்தால், சிறுத்தையால் மானைப் பிடித்து இருக்க முடியாது.

ஆம். நாம் இலக்கை நிர்ணயித்துவிட்டால் அதிலிருந்து இம்மி அளவுகூட விலகாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும். மான் திரும்பிப் பார்த்துப் பார்த்து நேரத்தை வீணடித்ததால் தனது உயிரையே விட்டது.

எனவே, வாழ்க்கை பயணத்தில் மானாக இருக்காதீர்கள். சிறுத்தைபோல் இடைவிடாமல் முயற்சி செய்தால் நிச்சயமாக நம்மை வெற்றி வந்து சேரும்.

இதையும் படியுங்கள்:
உலக கடித தினம்: அன்புள்ள அம்மாவுக்கு… ஆசையில் ஒரு கடிதம்...
Cheetah chasing Deer

அன்புள்ள குழந்தைகளே! கதை உங்களுக்கு நிச்சயமாகப் பிடித்து இருக்கும். அடுத்த முறை வேறு ஒரு கதையுடன் சந்திக்கிறேன்.

நீங்கள் ஆமை - முயல் கதை கேட்டிருப்பீர்கள். அதே போல்தான் நிஜம் சிறுத்தைக்கு உதவியாக இருந்தது. முயலின் கர்வம் எல்லாம் மானுக்கு இல்லை. ஆனால் இடைவிடாது ஓட வேண்டும் என்று அது தெரிந்துகொள்ளவில்லை.

குறியை நிர்ணயம் செய்துவிட்டால் அதிலே மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும். திரும்பிப் பார்க்கக் கூடாது.

பை... பை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com