குட்டீஸ்களா தீபாவளி பிறந்த கதை தெரியுமா?

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? நரகாசுரன் வதம், சத்யபாமா வரலாறு மற்றும் தீபாவளி புராண கதையை முழுமையாக படியுங்கள்.
தீபாவளி | Narakasuran story
தீபாவளி | Narakasuran storyImage credit: Chatgpt
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது உங்களுக் கெல்லாம் தீபாவளி என்றால் மிகவும் குஷியாக இருக்கும் அல்லவா! விதவிதமாக புத்தாடை வாங்கிவிட்டீர்களா? வெடி போடலாம் விதவிதமான இனிப்புகள் காரங்கள் சாப்பிடலாம் இப்படி எல்லாம் நாம் செய்ய காரணமான அந்த தீபாவளி பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா?

இதோ படித்துப் பாருங்கள். தமிழகத்தை பொறுத்தவரை நரகாசுரன்தான் இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் . திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த பிள்ளைதான் நரகாசுரன். மனிதர்களிலேயே மிகக் கொடியவன் என்னும் பொருளில் நரகாசுரன் என்று அழைக்கப்பட்ட இவனுக்கு பூமாதேவி இட்ட பெயர் பவுமன் என்றால் பூமியின் புதல்வன் என்று பொருள் சிவபெருமானிடம் பக்தி கொண்ட பவுமன் அவரிடம் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் வரம் ஒன்றை கேட்டு பெற்றான்.

பவுமன் தவறான வழிகளில் சென்றான். பூலோகத்தில் இருந்த மக்களும் தேவலோகத்தில் வாழ்ந்த தேவர்களும் இவனது கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டனர் அவர்கள் இது பற்றி சிவபெருமானிடம் முறையிட்டார்கள் . விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தொடங்கினார்கள்.

தாயான பூமாதேவியோ பிறர் தனக்கு கொடுமைகளை கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனை கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான். இருப்பினும் தாயான பூமாதேவி தன் மகனான பவுமனுக்கு அறிவுரைகள் சொல்லி திருந்தச் சொன்னாள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளே...! எளிமையான முறையில் திட்டமிட்டுப் படிப்பது எப்படி?
தீபாவளி | Narakasuran story

ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை மனிதன்( நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன் (அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர் . சிவபெருமானும் வேறு வழியின்றி நரகாசுரனை வதம் செய்ய உத்தரவிட்டார் .பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. அதனால் இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்தியபாமாவும் விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்றுகொண்டு அவரை கைப்பிடித்தாள். சத்யபாமா அவருக்கு தேரோட்டும் சாரதியாக பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்க புறப்பட்டார். அவனுடன் போரிட்டார் ஒரு கட்டத்தில் நரகாசுரனால் தாக்கப்பட்டு மயக்கமடைந்தது போல் நடித்தார். கோபம் கொண்ட சத்தியபாமா கிருஷ்ணரின் வில்லை பயன்படுத்தி நரகாசுரன் மீது அம்பை எய்தாள். பெற்ற தாயால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று அவன் ஏற்கனவே வரம் வாங்கி இருந்ததால் சத்யபாமா எய்த அம்பு அவனது கண்ணில் மண்ணை தூவி விட்டு அவனது நெஞ்சை துளைத்தது. கொடுமைகள் பல செய்த நரகாசுரன் ஒரு வழியாக இறந்தான்.

தீபாவளி | Narakasuran story
தீபாவளி | Narakasuran storyImage credit: Gemini AI

முற்பிறவியில் அவனது தாயாக இருந்து இந்த பிறவியின் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான். அவன் இறக்கும் சமயத்தில் சத்யபாமாவுக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. உடனே கிருஷ்ணரிடம் எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தம் அளிக்கிறது.

அவன் இறந்த நாளை பூலோகம் மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும் ஐப்பசி மாதம் சதுர்த்தசியில் இறந்ததால் இந்த நாளை இனிப்புகளுடனும் தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள்.

அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கான குதூகலமான விடுகதைகள் - பகுதி 2
தீபாவளி | Narakasuran story

குட்டீஸ்களா! நீங்களும் அதிகாலையிலேயே அம்மா அப்பா தாத்தா பாட்டி என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி எண்ணெய் தலையில் வைத்து வெந்நீரில் குளிக்க சொல்வார்கள். பிறகு சுவாமியை கும்பிட்டு விட்டு பலகாரங்கள் பட்டாசுகள் புத்தாடைகளுடன் அமர்க்களமாக கொண்டாடுவீர்கள். தீபாவளி திருநாள் இதோ வந்துவிட்டது.

தீபாவளியை ஹை ஜாலியாக கொண்டாட ரெடியாகி விட்டீர்களா தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள் பட்டாசுகளை வெடிக்கும் போது பார்த்து கவனமாக கையாளுங்கள் சரியா குட்டீஸ்களா!