விபமில்லா தீபாவளி: குட்டீஸ் கவனிக்க வேண்டிய பட்டாசு பாதுகாப்பு டிப்ஸ்!

தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான எளிய மற்றும் அவசியமான வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பட்டாசு | Bursting firecrackers
பட்டாசு | Bursting firecrackersImage credit: Chatgpt
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

குட்டீஸ்களா தீபாவளி அன்று பட்டாசு கட்டாயம் வெடிப்பீர்கள்தானே! பட்டாசு வெடிக்கும்போது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு வெடி வெடியுங்கள் சரிதானே செய்வீர்களா?

வெடிகளை ஒருபொழுதும் வீட்டினுள் வெடிக்கக்கூடாது. மத்தாப்பு உடம்பில் படாமல் கவனமாக காட்ட வேண்டும். திறந்த வெளியில் மட்டுமே ராக்கெட் போன்ற வெடிகளை விட வேண்டும்.

உங்கள் சட்டை பாக்கெட்டில் இருந்தும் நெருப்புக்கு அருகிலிருந்தும் தூர வைத்துக் கொள்ளுங்கள்..

எரிந்து கொண்டிருக்கும் வெடிகளை சிறுவர்கள் கைகளால் தூக்கி எறியாமலும் அவர்களே பட்டாசு தயாரிப்பில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

வெடிகளை வெடிக்கும்பொழுது உடம்போடு கூடிய தடிமனான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். பட்டாசுகளை வெளிப்புறத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும்.

வாணவெடிகளை ஒவ்வொன்றாக ஒரு நபர் மட்டுமே பற்ற வைக்க வேண்டும். மற்றவர்கள் பாதுகாப்பான தூரத்தில் நின்று பார்க்க வேண்டும்.

எப்பொழுதும் நீண்ட கைப்பிடிக்கொண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.

பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தில் இரண்டு வாளிகளில் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டால் காயத்தின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கண்களில் தீக்காயம் பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரில் கண்களை பத்து நிமிடம் கழுவிவிட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

சட்டை பைகளில் ஒருபோதும் பட்டாசுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.

தீக்காயம் பட்டால் அந்த இடத்தில் எண்ணெய் தடவவே கூடாது.

மாசில்லாத தீபாவளியை கொண்டாட பட்டாசுகளை மிகக் குறைந்த அளவே வெடியுங்கள்.

அதிக அளவு ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா தீபாவளி பிறந்த கதை தெரியுமா?
பட்டாசு | Bursting firecrackers

பட்டாசுகளை வெடிப்பதில் கவனம் குறைவு ஒருபோதும் கூடவே கூடாது.

தேங்காய் சிரட்டை தகர டப்பா இவற்றை போட்டு மூடி வைக்க கூடாது.

ராக்கெட் போன்ற வெடிகளை திறந்த வெளி மைதானத்தில் வெடிக்கச் செய்வதே சிறந்தது. ஏனென்றால், அது எந்த திசையில் செல்கிறது என்று நமக்கு தெரியாமல் எங்காவது வீடுகளிலோ குடிசை வீடுகளிலோ விழுந்துவிடலாம். அதனால் நெருப்பு பற்ற வாய்ப்பு இருக்கிறது.

எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைத்துக் கொள்ளாதீர்கள். ஈரமான பட்டாசுகளை காயவைக்க முயற்சி செய்தார்கள்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் துணை நின்று தனியாக ஒரு பொழுதும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனக் குறைவு அலட்சியம் போன்றவை இருக்கவே கூடாது.. மிக மிக கவனமாக செய்யவேண்டும். பசுமை பட்டாசுகளை தாராளமாக வெடிக்கலாம். புகை தரும் பட்டாசுகளை குறைந்த அளவே வெடியுங்கள். ஏனென்றால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்பட அதுவே நமக்கு பாதிப்பாக முடிந்துவிடும்.

பட்டாசு | Bursting firecrackers
பட்டாசு | Bursting firecrackersImage credit: Gemini AI

வெளிநாடுகளில் பட்டாசு வெடிக்க தடைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா?

கனடாவில் வாணவெடிகளின் மொத்த வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட தகுதிச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே வெடிகள் வெடிக்க விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் வெடிகள் மிகச் சிறிய அளவில் வெடிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் வாண வேடிக்கை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ள.து குழந்தைகள் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. அங்கும் வயது வந்த அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளே...! எளிமையான முறையில் திட்டமிட்டுப் படிப்பது எப்படி?
பட்டாசு | Bursting firecrackers

நம் நாட்டில் வெடிகளை வெடிக்க உங்களுக்கெல்லாம் அனுமதி கொடுத்தாலும் நீங்களும் பெரியவர்கள் துணையோடு மிக மிக கவனமாக பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடுங்கள். பட்டாசு வெடிப்பது சந்தோஷமான விஷயமாக இருந்தாலும், அதுவே நமக்கு சங்கடமாக மாறிவிடக்கூடாது. உங்களின் உடல் நலமும் முக்கியம். உடலில் காயமும் ஏற்பட்டு விடக்கூடாது ஆதலால் சிறிதளவு பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.