ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கிலப் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

New Year Celebration
New Year-2025
Published on

ஸ்காட்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் முடிந்த இரண்டாவது நாளிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். ஒரு பாரம்பரிய திருவிழாவைப்போல ஐந்து நாட்களுக்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஸ்காட்லாந்து  மக்கள் போர் வீரர்களை போல உடை அணிந்துகொண்டு கையில் தீப்பந்தத்தை ஏந்தி தெருவில் ஊர்வலம் வருவது இதில் முக்கியமான நிகழ்வு புதுவருடம் ஆரம்பிக்கும் நாட்களில் தெருக்களில் கும்பலாக நெருப்பை சுழற்றி வருவதால் தீயசக்திகள் விரட்டியடிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அடிநாதமே பன்னிரண்டு திராட்சைகளை சாப்பிடுவதுதான். புத்தாண்டு பிறப்பதற்கு பன்னிரண்டு நொடிகள் இருக்கும்போது ஒவ்வொரு நொடிக்கும் ஒரு திராட்சை என்று பன்னிரண்டு திராட்சைகளை வேகமாக சாப்பிட வேண்டும். அடுத்து வருகிற பன்னிரண்டு மாதங்களும் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை நூறு வருடங்களுக்கும் மேலாக இந்த வழக்கம் ஸ்பெயினில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டில் எதை மறந்தாலும் திராட்சை சாப்பிடுவதை ஸ்பெயின் வாசிகள் மறக்கமாட்டார்கள்.

புது வருடத்தின்  முதல் நாளில் ருமேனியா விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிடம் பேச்சு கொடுப்பார்கள். விவசாயிகள் பேசியதற்கு பதில் அளிப்பதைபோல கால்நடைகள் சத்தம் எழுப்பினால் நல்ல சகுனமாம். இதுபோக நாணயங்களை ஆற்றில் வீசுவார்கள். வீடு வீடாக சென்று நடனமாடி இசை கருவிகளை இசைப்பது ருமேனியர்களின் வழக்கம் இந்த வினோத கொண்டாட்டம்.

இதையும் படியுங்கள்:
மாதங்களின் பெயர் உருவானது எப்படி தெரியுமா?
New Year Celebration

டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும் இரவில் ஒரு வித்தியாசமான காரியத்தை செய்கிறார்கள். ஒரு பழைய பூட்சை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்கிறார்கள். சுத்தம் செய்யப்பட்ட பூட்ஸ் நிறைய புத்தம் புது வண்ண மலர்களை நிரப்பி இரவில் தங்களுக்கு வேண்டியவர்களின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். பூக்களை வீட்டுக்காரர் எடுத்துக்கொள்கிறார். இப்படி செய்தால் அந்த ஆண்டு முழுவதும் பரிசளித்தவருக்கும் பரிசை பெற்றவருக்கும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுபவர்கள். கொரிய மக்கள்தான் புத்தாண்டு தினத்தை ஒட்டி கொரிய அரசு ஜனவரி முதல் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கிறது. முதல் தேதி வாழ்த்துக்களை பரிமாறியும் இரண்டாவது நாள் தங்களின் முன்னோர்களை வணங்கியும் மூன்றாவது நாள் செமத்தியான விருந்து வைத்தும் கொண்டாடுகிறார்கள். அதேபோல கொரிய மக்கள் புத்தாண்டு தினத்தன்று குடும்பத்துடன் பட்டம் பறக்கவிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.

நெதர்லாந்து நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தன்று விடியற் காலையில் கப்பல்களில் ஹார்ன் சத்தம் கேட்பது நல்ல சகுனமாக கருதுகிறார்கள்.

ஜப்பானியர்கள் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும். கார்ப் என்ற மீனை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் கார்ப் மீன் தண்ணீரில் இருந்து எம்பி வெகு உயரத்துக்கு குதிக்கும் தன்மை உடையது அது மட்டுமல்ல மிக வேகமான சுழல் நீரிலும் நீந்த கூடியது இந்த மீனை புதுவருட நாளில் சாப்பிட்டால் அந்த மீன் போன்ற சக்தியையும் சுறுசுறுப்பையும் தாங்கள் அந்த ஆண்டின் அனைத்து நாளிலும் பெறமுடியும் என்று நம்புகிறார்கள்.

லாவோஸ் மக்கள் பறவையையும் தண்ணீர் பைகளில் மீனையும் வாங்கி அவற்றை வானத்தில் சுதந்திரமாக சிறகடித்து பறக்கவிட்டு மீன்களை ஆற்றில் நீந்தி செல்ல அனுமதித்தும் விட்டு விடுகிறார்கள் புத்தாண்டின் புது நாளில் செய்த ஒரு நல்ல காரியம் என்று அதை நினைக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா கண்ட பகுதியில் உள்ள தீவு நாடு கிரிபாஸ் இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் உலகில் முதலில் புத்தாண்டு கொண்டாடுவது இங்குதான் அடுத்து ஆஸ்திரேலியா கண்டத்தில் பிஜி தீவுகள் நியூசிலாந்து ஆஸ்திரேலியா என மகிழ்ச்சி களைக்கட்டும். ஆஸ்திரேலியா சிட்னி துறைமுக நகரத்தில் எண்பதாயிரம் வகை வாணவேடிக்கைகள் நடைபெறும்.

தென்கிழக்கு ஆசிய நாளான பிலிப்பைன்ஸில் புத்தாண்டு வித்தியாசமாக நடக்கும் அன்று வட்ட வடிவ பொருட்கள் பயன்படுத்தினால் ஆண்டு முழுக்க ஆனந்தம் நிலவும் என்பது அங்குள்ள மக்கள் நம்பிக்கை அதனால் வட்ட வடிவில் டிசைன் போட்ட சட்டை அணிந்து கொள்வார்கள் வட்டமான நாணயங்களை அதிர்ஷ்டமிக்கதாக சட்டை பையில் நிரப்பி கொள்வார்கள் வட்ட வடிவ பழங்கள் தின்பண்டங்களை அன்று விரும்பி உண்பார்கள்.

இதையும் படியுங்கள்:
2025 புத்தாண்டு முதல்... இப்படிச் செய்தால் என்ன?
New Year Celebration

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும்போது பழைய உணவு தட்டுகளை வீட்டு வாசலில் போட்டு உடைக்கும் வழக்கம் இருக்கிறது அத்துடன் புத்தாண்டு துவங்கும் நள்ளிரவில் நாற்காலியில்  ஏறி நின்று கொள்வார்கள் சரியாக பன்னிரண்டு மணிக்கு கீழே குதித்து மகிழ்வார்கள்.

அமெரிக்கா நியூயார்க் நகர டைம் சதுக்கம் புத்தாண்ட ன்று பிரமாதமாக பன்னிரண்டு அடி குறுக்களவுள்ள பந்து போன்று அமைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்டல் முக்கோணங்களால் அமைக்கப்பட்ட அந்த பந்தில் 32,256 மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும அவை விதவிதமாக வர்ணஜாலம் செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இதை பால் டிராப் என்பார்கள்.

கொலம்பியா நாட்டில் பன்னிரண்டு திராட்சைகளை புத்தாண்டிற்கு முன்பாக உண்ணும் வழக்கத்தை கொண்டுள்ளனர் பன்னிரண்டில் ஆறு பச்சை திராட்சை மற்ற ஆறு சிவப்பு திராட்சை என தேவாலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு    ஒன்றாக உண்டு முடிக்கின்றனர் அது மட்டுமின்றி 31ஆம் தேதி இரவு மஞ்சள்நிற கால்சட்டை அணிவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com