சுட்டீஸ்கான சுவாரஸ்ய குட்டி புதிர்கள்!

விடையை கண்டுபிடியுங்கள் !
Everyday Objects as Riddles: Tamil Edition
Everyday Objects as Riddles: Tamil Edition

வாங்க நண்பர்களே!

எளிமையான கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் அதிசயமான  பதில்களைக் கண்டுபிடிப்போம். சிரித்துக்கொண்டே விடையைக் கண்டுபிடித்து மகிழுங்கள்! புதிர் போடத் தயாரா குட்டீஸ்?

1. நான் ஒரு பந்து அல்ல, ஆனால் உருளுவேன். நான் யார்?

2. கீழே விழுந்தால் உடைந்து விடுவேன்; உடைந்தாலும் அழ மாட்டேன். நான் யார்?

3. நடக்கிறேன்; ஆனால் என்னிடம் கால்கள் இல்லை. பறக்கிறேன்; ஆனால் என்னிடம் இறக்கைகள் இல்லை. நான் யார் தெரியுமா?

இதையும் படியுங்கள்:
புதிரோ புதிர்!
Everyday Objects as Riddles: Tamil Edition

4. உடம்பில்லாத ஒருவன் பல சட்டைகள் அணிந்து இருப்பான். அவன் யார்?

5. முகத்தில் தோன்றி மறையும் பூ. அது என்ன பூ?

இதையும் படியுங்கள்:
Labubu Doll – The Cute Little Monster Everyone Loves!
Everyday Objects as Riddles: Tamil Edition

6. கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?

7. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக் கொள்ள துணி இல்லை. யாரது?

8. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். யாரது?

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஜூஸ் கடை!
Everyday Objects as Riddles: Tamil Edition

9. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாத நாயகனுக்கு உடல் மேல் கவசம். அது என்ன?

10. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இருக்காது. அவர்கள் யார்?

இதையும் படியுங்கள்:
Golu in India - A beautiful tradition for children!
Everyday Objects as Riddles: Tamil Edition

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com