புதிரோ புதிர்!

விடையை கண்டுபிடியுங்கள் !
glowing light bulbs and scattered puzzle pieces
Everyday Objects as Riddles: Tamil Edition

எளிமையாய் தோன்றும் கேள்விகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியமான பதில்களைக் கண்டுபிடிப்பது எப்போதும் சுவாரஸ்யமானது. இந்தப் பகுதியில், உங்களை யோசிக்க வைக்கும் சில சுவையான தமிழ் புதிர்களும், அவற்றிற்கான விடைகளும் உங்களுக்காக! ஒவ்வொரு புதிரையும் படித்து, விடையைக் கண்டுபிடித்து மகிழுங்கள்!

1. வெள்ளைத் திடல் கருப்பு விதை - அது என்ன?

2. தேவை என்றால் வீசி எறிவோம், இல்லை என்றால் எடுத்து வைப்போம். - அது என்ன..?

3. மரம் ஒன்று, கிளைகள் 12, ஒரு கிளைக்கு 30 இலைகள். அது என்ன.?

4. காலைக் கடிக்கும் - செருப்பு அல்ல...காவலுக்கு உதவும் - நாய் அல்ல.. - அது என்ன?

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
glowing light bulbs and scattered puzzle pieces

5. அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கம் முழுவதும் கண்கள் - அவன் யார்?

6. கனமாய் தலைசாய்த்து, உணவு தரும் பொக்கிஷம். - அது என்ன?

7. உடம்பெல்லாம் கண் உச்சியிலே கிரீடம்.. - அவன் யார்?

8. வாசலை வழி மறைக்கும் வெள்ளைக்காரன்.. - அவன் யார்..?

9. முச்சந்தியில் மூன்று விளக்கு, பார்த்து நடந்தால் பாதுகாப்பு.. - அது என்ன..?

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களுக்கான 4 வெற்றி ரகசியங்கள்!
glowing light bulbs and scattered puzzle pieces

10. வாயோரம் காதுகள் இருக்கும் - அவன் யார்?

11. ஆடச் சொல்லி சட்டை போடுவான்.. ஆடும் முன்பே கழற்றி விடுவான்..  - அவன் யார்?

12. காய் காய்க்கும் பழம் பழுப்பதில்லை.. அது என்ன..?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com