உலகிலேயே பயம்னா என்னன்னே தெரியாத விலங்கு எது தெரியுமா?

தேன் வளைக்கரடி: சிங்கத்தையும் எதிர்த்து நிற்கும் இந்த சிறிய விலங்கின் மிரட்டலான உயிர்வாழ்வு ரகசியங்கள் இதோ.
தேன் வளைக்கரடி | Honey Badger
தேன் வளைக்கரடி | Honey BadgerImage credit: Gemini AI
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on

பொதுவாக விலங்குகள் எல்லாம் ஆபத்து வருகிறது என்று தெரிந்ததும் அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் அல்லது சமாளித்து எப்படி உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தான் யோசிக்கும். ஆனால் நம்ம தலைவனுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது! ஆம், அப்படிப்பட்ட கீரியின் குடும்பத்தை சேர்ந்த பாலூட்டி வகை தான் இந்த ஹனி பேஜர் என்று அழைக்கப்படக்கூடிய தேன் வளைக்கரடி ஆகும். இந்த விலங்கை பற்றிய வியத்தகு சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. காட்டில் உள்ள எந்த ஒரு விலங்கிடமும் பயப்படாமல் எதிர்த்து நின்று சண்டை போடும் தைரியம் இந்த ஹனி பேஜருக்கு இருக்கிறது. இந்த அசாத்தியமான தைரியமே கின்னஸ் புத்தகத்தில் 'மிகவும் பயமற்ற துணிச்சலான விலங்கு' என்ற பெயர் வர காரணமானது. 

2. உணவாக எது கிடைத்தாலும் உண்ணும். அசால்ட்டாக தேன்கூட்டை கலைத்து விட்டு தேனை எடுத்து சாப்பிடும். தேனிக்கள் கொட்டினாலும் இதற்கு ஒன்றும் ஆவதில்லை. ஏனென்றால் இதன் தோல் மிகவும் தடிமனாக இருக்கும். மிகவும் விஷமான நாகப் பாம்பையே கொன்று சாப்பிடும்.

பாம்பு கொத்தினாலும் இதன் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் அதற்கு எதிராக செயல்பட்டு 30 நிமிடங்கள் மட்டும் மயக்கத்தில் இருந்து விட்டு, பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விடும்.

3. இதன் நகங்களும், பற்களும் கூர்மையாக இருப்பதால் எதிரே உள்ள வேட்டை விலங்குகளை சரமாரியாக தாக்குகிறது. இதன் பற்கள் ஆமையின் ஓட்டை உடைக்கும் அளவிற்கு வலிமையாக இருக்கும். ஒருபோதும் பயந்து பின்வாங்குவதில்லை. யானை, சிங்கம், புலி, சிறுத்தை என எதுவாக இருந்தாலும் எதிர்த்து சண்டை போடும். 

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களே! வீட்டைச் சுற்றும் கிளிகள் பின்னால் இவ்வளவு ரகசியங்கள் இருக்கா?
தேன் வளைக்கரடி | Honey Badger

4. இயற்கை சூழலில் வாழக்கூடிய தேன் வளைக்கரடி 7 முதல் 12 ஆண்டுகள் வரை வாழும். நோய் தொற்று, பிற விலங்குகளின் தாக்குதல்கள் மூலம் ஏற்படும் காயங்கள் போன்ற பல காரணங்களால் இதன் ஆயுளானது கேள்விக்குறியாகிறது? சரணாலயத்தில் வளர்க்கப்படக் கூடியவை சுமார் 24 ஆண்டுகள் வரை வாழும்.

5. தேன் வளைக்கரடி பெரும்பாலும் வறண்ட புல்வெளிகள் மற்றும் மலைப் பகுதிகளான ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் அதோடு இந்தியாவின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது. குழி தோண்டி பொந்துகளில் வாழும். மற்ற விலங்குகளின் பொந்துகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்.

6. இதன் தோல் மிகவும் தடிமனாக 6mm வரை இருக்கும். இவற்றின் தோல் உடலோடு ஒட்டாமல் ஒருவித நெகிழும் தன்மையோடு இருக்கும். சுலபமாக எந்த ஒரு விலங்கும் இதனை கடித்து தோலை கிழிக்க முடியாது. இதன் தோல் தான் இதற்கு மிக முக்கிய பாதுகாப்பாக இருக்கிறது. தேனீக்களின் கொடுக்குகளும் இதன் தோளில் ஊடுருவ முடியாது.

தேன் வளைக்கரடி | Honey Badger
தேன் வளைக்கரடி | Honey BadgerImage credit: Gemini AI

7. இவை புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவை. சரணாலயங்களில் தப்பிக்க முடியாத இடங்களில் மாட்டிக் கொண்டாலும் கூட, சிறு சிறு கற்களை அடுக்கி மேலே வர பார்ப்பதும், அல்லது ஏணிகள் மூலம் ஏறி மேலே வந்து தப்பித்து வெளியே சென்றும் விடுகின்றன. அதேபோல் உயரத்தைப் பற்றியும் இதற்கு கவலை இல்லை. 

8. மலக்குடலில் அமைந்துள்ள சுரப்பியிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்க இதற்கு பயன்படுகிறது. மிகவும் ஆபத்தான நேரங்களில் வாலைத் தூக்கி இந்த கெட்ட திரவத்தை வெளியிடும். இந்த வாடை மிகவும் கொடுமையான அழுகிய முட்டை அல்லது அழுகிய இறைச்சியை விட பல மடங்கு துர்நாற்றமாக இருக்கும்.

இதனால் எதிரி விலங்குகளின் முகம் சுளித்து போய்விடும். அந்த நேரத்தை பயன்படுத்தி இது தப்பித்து விடும். தற்காப்பையும் தாண்டி தனது எல்லைகளை மற்ற விலங்குகளுக்கு தெரியப்படுத்தவும், மற்ற பெண் ஹனி பேஜர்களை ஈர்க்கவும் இந்த திரவத்தை பயன்படுத்துகிறது.

9. முன்னோக்கி செல்வது போல் பின்னோக்கியும், பக்கவாட்டிலும் வேகமாக செல்லும். எதிரிகளை நிலைகுலைய செய்யவும், தற்காப்பிற்காகவும் இதுபோன்று செய்யும். 

இதையும் படியுங்கள்:
சிட்டுக்குருவி முதல் விசித்திரப் பறவைகள் வரை: ஆச்சரியமான தகவல்கள்!
தேன் வளைக்கரடி | Honey Badger

10. ஹனி கைடு என்று அழைக்கப்படும் பறவையானது தேன்கூட்டை பார்த்ததும் ஒருவித சத்தத்தை ஏற்படுத்தும். இதை பார்த்த ஹனி பேஜர் தேன் கூட்டை நோக்கி செல்லும். தேனை சாப்பிட்டு முடித்துவிட்டு, அதில் உள்ள லார்வாக்களை அந்த பறவைகளுக்கு உணவாக விட்டு வந்துவிடும். இயற்கையில் இந்த ஹனி ஹைடு பறவையும் ஹனி பேஜரும் உணவு தேடுவதில் சிறந்த கூட்டணியாக செயல்படுகிறது.

இப்படி பல வியத்துக்கு வாழ்வியல் தகவமைப்புகளை கொண்டதுதான் இந்த தேன் வளைக்கரடி!!

logo
Kalki Online
kalkionline.com