கழுதை தெரியும், கோவேறுக் கழுதை தெரியுமா செல்லம்ஸ்?

Mule
Mule
Published on

பொறுமை, நிதானம், பொதி சுமக்கும் திறமை ஆகிய குணங்கள் உடைய கழுதைகள் பற்றி பார்ப்போமா செல்லம்ஸ்.

  • கழுதைகள் குதிரை இனத்தை சார்ந்தவை.

  • பாலுட்டி வகையை சார்ந்த இவை ஒற்றைப் படக் குளம்பிகள் வரிசையில் குதிரை, வரிக்குதிரை போன்றவைகள் ஆகும்.

  • குதிரையை விட வலிமை மிக்கவை.

  • கழுதை பால் மருத்துவ குணம் உள்ளதாக நம்பப் படுவதால் இதற்கு டிமாண்ட் அதிகம்.

  • காடுகளில் திரியும் இவை வீடு களிலும் வளர்க்கப் படுகின்றன.

  • பல ஆயிரம் வருடங்களாக பழக்கப் பட்ட கழுதைகள் மனித குலத்திற்கு உதவி செய்து வருகின்றன.

  • இவற்றை பழக்குவது அவ்வளவு சுலபமில்லை.

  • நம்பிக்கை ஏற்பட்டு பழகி விட்டால் இவற்றை கையாள்வது சுலபம்.

  • இவை பாலை வனப்பகுதிகளில் வசிப்பதற்கு தோதானவை.

  • இவற்றின் காதுகள் நீளமானவை. வெகு தொலை தூர சப்தங்களை துல்லியமாக கேட்க முடியும்.

  • காடுகளில் வசிப்பவை சுமார் 102 - 145 செ மீ மற்றும் வீடுகளில் வளர்ப்பவை 90 - 142 செ மீ உயரம் வளரும்.

  • கழுதைகள் கருப்பு, வெளுப்பு, பிரவுன், சாம்பல் நிறங்கள் கொண்டவை. பொதுவாக மூக்கு பகுதி வெண்மையாக இருக்கும்.

  • நினைவு ஆற்றல் அதிகம். பல வருடங்களுக்கு பிறகு முன்பு சென்ற இடத்திற்கு சென்றால் அடையாளம் கண்டு பிடித்து விடும் ஆற்றல் கொண்டது.

  • இவற்றால் குதிரைகளை விட நன்றாகவே எந்த தரையிலும் நடக்கவும், கடக்கவும் முடியும்.

  • இவை குதிரைகளை விட வலிமை அதிகம் உள்ளதாலும், பொறுமை மிக்கதாலும், கரடு முரடு இடங்களில் செல்லக் கூடியதாலும் பொதிகள் சுமக்க உபயோகிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உக்ரேனிய நாடோடிக்கதை - ஆடுகளின் சாமர்த்தியம்!
Mule
  • கழுதைகள் புல், தாவரங்கள் உண்பவை. ஆனால் குறைவாகவே உண்ணும்.

  • இவைகளுக்கு நீரில் நனைவது பிடிக்காது. எனவே மழையில் நனைவதை தவிர்த்து விடும்.

  • கழுதைகள் கூட்டமாக இருப்பதை விட தனியாக இருப்பதை மிகவும் விரும்பும்.

  • விதி விலக்கு - ஆடுகளுடன் இருப்பது பிடிக்கும்.

  • பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆபத்தை உணர்ந்தால் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்று விடும்.

  • 40 வயது வரையில் உயிர் வாழும். சில இடங்களில் அதிக ஆண்டுகள் வாழும்.

  • கழுதையால் ஒரே சமயத்தில் அதன் நான்கு கால்களையும் காணும் திறமை படைத்தது.

  • குட்டியை தாய் சுமார் 12 மாதங்கள் வயிற்றில் சுமக்கும்.

  • ஒரு பிரசவத்தில் ஒரே ஒரு குட்டி போடும்.

  • குட்டி பெரியதாக வளரும் வரையில் தாயுடன் சேர்ந்து திரியும்.

இதையும் படியுங்கள்:
நமக்கு இருப்பது 24 மணி நேரம்! அதை எப்படி நிர்வகிப்பது?
Mule
  • ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறக்கும் கழுதை கோவேறுக்கழுதை எனப்படும். இவை சாதாரண கழுதையை விட தோற்றத்தில் பெரியதாகவும், குதிரையை விட உடல் சிறியதாகவும் இருக்கும்.

  • சாதாரண கழுதைகளால் குட்டிகள் போட முடியும். ஆனால் கோவேறுக் கழுதைகளால் குட்டிகள் போட முடியாது.

  • கோவேறுக் கழுதைகள் சங்க காலத்தில் அத்திரி, வேசரி என்ற பெயர்களில் அழைக்கப் பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com