

சட்டிக்குள்ளாற வெந்தாலும்
சந்தோஷமா சாப்பிட
இட்லி போல மல்லிப்பூ கணக்கா
சிரிச்சுகிட்டே இருக்கணும்
சுடுகின்ற கல்மேல காய்ந்தாலும்
கஷ்டத்தைக் காட்டாம முறுக்கா இருக்குற
முறுமுறு தோசை போல
உடம்பு மெல்லிசா இருக்கணும்
என்னதான் அடிச்சு பிசைந்தாலுமே
விரும்பி சாப்பிடுற
சப்பாத்தி போல
மென்மையா பழகணும்
கொதிக்குற எண்ணையில
தள்ளிவிட்டாலுமே பூரிப்பாய் எழும்
பூரி போல கஷ்டங்கள் வந்தாலும்
மீண்டு எழ வேண்டும்.
கட்டை விரலால ஓட்டைப்
போட்டாலும் சகித்து கொள்ளும்
மெதுவடை போல
வாழ்க்கை மிருதுவாக இருக்கணும்
பார்க்குறதுக்கு சிக்கல்களாக இருந்தாலும்
சீனியோடு சேர்ந்த இடியாப்பம் போல
வாழ்க்கையில சிக்கல்கள் வந்தாலுமே
இனிப்பா இருக்கணும்
குள்ள குள்ள வாத்து
குளத்தில் நீந்தும் வாத்து
மெல்ல மெல்ல நடக்கும்
வெண்மை சிறகு வாத்து
நீண்ட கழுத்து வாத்து
நீந்தி தவழும் வாத்து
பெண்கள் விரும்பும் வாத்து
தலையணை ஓவியம் வாத்து
கூட்டமாக போகும் வாத்து
பக் பக் சத்தமிடும் வாத்து
குட்டையைக் கண்டால் மகிழுமே!
குளத்தைக் கண்டால் நெகிழுமே!
சாப்பிட முகம் பொலிவுதான்
எட்டி நின்று பார்ப்போமே! கை
கொட்டி சிரித்து மகிழ்வோமே!