

அன்பும் அரவணைப்பும் மிக்கவர் அம்மா,
அழுகையிலும் சிரிப்பை விதைக்கும் தேவதை அம்மா.
ஆக்கமும் ஆளுமையும் நிறைந்தவர் அம்மா,
ஆற்றலும் ஆதரவுமாய் நின்ற பெருமை அம்மா.
இயலாது என்பதைக் என்னுள் இல்லாமல் செய்து,
இரக்கத்தைப் படிப்பித்தவர் அம்மா,
இனிய மனதை உருவாக்கிய வழிகாட்டி அம்மா.
ஈகைக் குணம் கொண்டவர்,
ஈடு இணையில்லாதவர் அம்மா,
ஈரமான இதயத்தின் வடிவம் அம்மா.
உண்மை வழியில் நின்று
உலகை ஆளக் கற்றுக் கொடுத்தவர் அம்மா,
உறுதியின் உருவகமாக இருப்பவர் அம்மா.
ஊன்றுகோலாக நின்று
ஊக்கத்தை அளித்து,
ஊற்றாய் நம்பிக்கை கொடுத்தவர் அம்மா.
எளிமையின் செழுமையைக் கற்பித்தவர் அம்மா,
என் எண்ணங்களை உயர்த்தியவர் அம்மா.
ஏற்றங்கள் பல காண
ஏணிப்படியாக இருப்பவர் அம்மா,
ஏகாந்தத்திலும் துணையாக இருப்பவர் அம்மா.
ஐயத்தை அறவே என்னுள் தகர்த்த
அசுரப் பலம் கொண்டவர் அம்மா,
ஐக்கியத்தின் அர்த்தம் உணர்த்தியவர் அம்மா.
ஒளி வீசும் விளக்காய் என் வாழ்வில் இருப்பவர் அம்மா,
ஒவ்வொரு நாளும் வழிகாட்டும் நட்சத்திரம் அம்மா.
ஓங்காரத்தில் உறைந்து
ஒளியாய் இருப்பவர் அம்மா,
ஓயாத ஆசீர்வாதம் தருபவர் அம்மா.
ஔவியம் இல்லா நற்குணம் வளர்த்தவர் அம்மா,
ஒழுக்கத்தின் வடிவமாக வாழ்த்துபவர் அம்மா.
ஃ எழுத்து போல் அரிதாய்
உலகில் கிடைத்தவள் அம்மா.