இயற்கையின் கலைப்படைப்புகள் - அழகிய அலகுகள் கொண்ட 8 பறவைகள்!

Birds beak
Birds beak

1. Keel billed Toucan:

Keel billed Toucan
Keel billed Toucan

தென் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பறவையின் அலகு பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். இதன் அலகு பறவையின் உடல் வெப்பத்தை சீராக வைப்பதாக அறியப்படுகிறது. இவைகள் தவளைகள் போல் கத்தும் பண்பை உடையது.

2. Black Skimmer:

Black Skimmer
Black Skimmer

இதன் அலகு நீளமாகவும் ப்ளேடு போன்றும் காணப்படும். அலகு சிவப்பு மற்றும் கருப்பும் கலந்து இருக்கும். இது தண்ணீரில் மிதப்பது போன்று காணபடுவதற்கு இதன் அலகு உதவுகிறது. கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இதன் அலகு உள்ளது.

3. Atlantic puffin:

Atlantic puffin
Atlantic puffin

இதன் எடுப்பான அலகு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் நீலக்கலரில் உள்ளது. வடக்கு அட்லான்டாவில் காணப்படுகிறது. இதன் அலகின் அமைப்பு ஒரே நேரத்தில் பல மீன்களைக் கவ்விக் கொள்ளும் வகையில் உள்ளது.

4. Toco Toucan:

Toco Toucan
Toco Toucan

இதன் அலகு மிகப் பெரியதாக இருக்கும். அடர்த்தியான ஆரஞ்சு வண்ணத்தில் நுனியில் கருப்பு நிறமாகவும் இருக்கும். இதன் அலகு பார்க்க தடிமனாகத் தெரிந்தாலும் அது கெராடின் என்ற பொருளால் உருவாக்கப்படுவதால் இலேசாகவே இருக்கும். தென் அமெரிக்காவில் இது காணப்படுகிறது.

5. American White Pelican:

American White Pelican
American White Pelican

இதற்கு தட்டையான நீண்ட அலகு இருக்கும். நல்ல ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இதன் அலகினால் 11 லிட்டர் தண்ணீர் வைத்துக் கொள்ள முடியும்.

6. Rhinoceros Hornbill:

Rhinoceros Hornbill
Rhinoceros Hornbill

தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இதன் அலகு நீளமாகவும் வளைந்தும் காணப்படும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் காணப்படும். இதன் தலைப் பகுதியில் ஹெல்மெட் போன்ற அமைப்பு காணப்படும். மலேசியாவில் இவை புனிதமாக கருதப்படுகிறது.

7. Southern cassowary:

Southern cassowary
Southern cassowary
இதையும் படியுங்கள்:
உலகின் மிகவும் ஆபத்தான 5 பறவைகள்... அறிவோமா குட்டீஸ்?
Birds beak

இதன் அலகு வண்ணமயமாக இல்லாவிட்டாலும் முகம் நீலம் மற்றும் சிவப்பு வண்ணமாக இருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் ந்யூகினியாவில் இது காணப்படும். பார்க்க அழகாக இருந்தாலும் ஆபத்தான பறவையாக கருதப்படுகிறது. இதன் கால்களில் கத்தி போன்ற அமைப்பு காயங்களை ஏற்படுத்தும்.

8. Mandarin duck:

Mandarin duck
Mandarin duck
இதையும் படியுங்கள்:
'நத்தை குத்தி நாரை' - இந்த நீர்பறவையின் பெயர் காரணம் தெரியுமா?
Birds beak

இதன் அலகு சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் வண்ணமயமாக இருக்கும். ஆண் இனம் ஆரஞ்சு கலர் பின்புறமும், பச்சை நிறக்கன்னங்களும், மெரூன் நிற மார்பும் மற்றும் கோல்டன் நிற இறக்கைகளுடன் காணப்படும். சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற இடங்களில் காணப்படும். இயற்கையின் பரிசாக வண்ணமயமான நிறங்களில் காணப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com