சிவப்பா? பச்சையா?

Green - Red Ribbon...
Green - Red Ribbon...
gokulam strip
gokulam strip

ந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். தேவையான பொருள் சிவப்பு மற்றும் பச்சை ரிப்பன் மட்டுமே!

நீளமான சிவப்பு மற்றும் பச்சைக் கலரில் ரிப்பன் ரோல்களை வாங்கி ஒரு அடி நீளத்துக்குத் துண்டு களாக்கிக் கொள்ளுங்கள். சுமார் 50 பேர் விளையாடப் போகிறார்கள் என்றால், சிவப்பில் ஐம்பது, பச்சையில் ஐம்பது என்று மொத்தம் நூறு ரிப்பன் துண்டுகளை ரெடிபண்ணிக் கொள்ளுங்கள். விளையாட்டை நடத்துபவர் நடுநாயகமாக நின்றுகொள்ள, அவரைச் சுற்றி விளையாடு பவர்கள் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து கொள்ளலாம்; அல்லது நின்றுகொள்ளலாம். ஒவ்வொருவருடைய வலது கையிலும் சிவப்பு ரிப்பனையும், இடது கையில் பச்சை ரிப்பனையும் மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும். முழு ரிப்பனையும் கையில் கட்டிக் கொள்ளாமல், இரு முனைகளும் சில அங்குல நீளத்துக்கு தொங்கும்படி இருக்கவேண்டும். விளையாட்டை நடத்துகிறவரும் தன் கைகளில் விளையாடுகிறவர் களைப்போலவே சிவப்பு மற்றும் பச்சை ரிப்பனைக் கட்டிக் கொள்வது ஆட்டத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கும். விசில் ஊதியதும் விளை யாட்டு ஆரம்பிக்கும்.

விளையாட்டை நடத்துபவர், உரத்த குரலில், எல்லோருக்கும் நன்றாகக் கேட்கும்படியாக சிவப்பு என்று சொல்ல வேண்டும். அவர் சொன்ன மறுவினாடியே அத்தனை பேரும்  தங்கள் வலது கையை உயர்த்தி, கட்டி இருக்கும் சிவப்பு ரிப்பனைக் காட்ட வேண்டும். சரியாக சிவப்பு ரிப்பன் கட்டிய வலது கையைத் தூக்கியவர்கள் விளை யாட்டைத் தொடர அனுமதிக்கப்படு வார்கள்; மாறாக கவனக் குறைவாக இடது கையைத் தூக்கிப் பச்சை ரிப்பனைக் காட்டிவிட்டால், அவர்கள் அவுட். ஆட்டத்தைத் தொடராமல் வெளியேறவேண்டும். அடுத்து விளை யாட்டை நடத்துபவர் பச்சை என்று சொன்னால், மீதம் இருப்பவர்கள் எல்லோரும் இடது கையைத் தூக்கிப் பச்சை ரிப்பனைக் காட்ட வேண்டும். இப்படியே விளையாட்டை நடத்துபவர், பச்சை, சிவப்பு-சிவப்பு, பச்சை-சிவப்பு என்று தன் விருப்பம் போல சிவப்பையோ, பச்சையையோ மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவர் என்ன நிறத்தைச்சொல்கிறாரோ, அந்த நிற ரிப்பன் கட்டிய கையை எல்லோரும் உயர்த்திக் காட்ட வேண்டும்.

நிறங்களை மாற்றி மாற்றிச் சொல்லும்போது  சிலர் கவனமில்லாமல் சிவப்புக்கு பதிலாகப் பச்சை ரிப்பனைக் காட்டி அவுட் ஆகிவிடுவார் கள். விளையாட்டை நடத்துபவர் எத்தனை சாமர்த்தியமாக நிறங்களை மாற்றிச் சொல்லுகிறார், மாற்றி நிறத்தைச் சொல்லும் நேர இடைவெளியை எப்படிக் கையாளுகிறார் என்பதன் அடிப்படையில்தான் அவுட் ஆகிறவர்களின் எண்ணிக்கையும் இருக்கும்; விளையாட்டின் ”வாரஸ்யமும் கூடும்.

இதையும் படியுங்கள்:
ஹீரோ வில்லனாக மாறும் விஷயம் நம் சமையலறையிலேயே நடக்குதே!
Green - Red Ribbon...

விளையாட்டை நடத்துகிற வரும் கையில் ரிப்பன்களைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்று சொன்னேனல்லவா? அவர் வாயால் நிறங்களை சொல்லிக்கொண்டே, கையால் வேறு நிற ரிப்பனை உயர்த்திக் காட்டினால், பங்கேற்பாளர்கள் குழப்பம் அடைந்து தவ றான ரிப்பன் கட்டிய கையை உயர்த்தி சீக்கிரமே அவுட் ஆகிவிடுவார்கள். எத்தனை சீக்கிர மாகவும், எத்தனை அதிகமாகவும் விளையாடு பவர்கள் அவுட் ஆகிறார்களோ அத்தனைக்கு அத்தனை விளையாட்டு களைகட்டும்.

அவுட் ஆகாமல் இருப்பவருக்கு முதல் பரிசும், கடைசியாக அவுட் ஆனவருக்கு இரண்டாம் பரிசும் கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com