துருவக் கரடிகளின் 'வெள்ளை' ரகசியம்!

பிப்ரவரி 27-ஆம் தேதி 'உலக துருவக் கரடிகள் தினம்'
Discovering the Arctic Giant
A Polar Bear’s Journey
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27-ஆம் தேதி 'உலக துருவக் கரடிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், ஆர்க்டிக் பனிப்பரப்பின் மீது உயிர்வாழும் துருவக் கரடிகளின் எதிர்காலத்தைப் பற்றிய ஓர் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.

துருவக் கரடிகள் உலகின் மிகப்பெரிய கரடி இனமாகும். நன்கு வளர்ந்த ஆண் கரடி 800 கிலோ வரை எடை இருக்கும்; மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.

இதன் பாதங்கள் பெரிய தட்டுகளைப் போல விரிந்து இருப்பதால், பனியில் சறுக்காமல் நடப்பதற்கு உதவி செய்கின்றன. இதன் தோல் உண்மையில் கருப்பு நிறமாகும்; ஆனால், அதன் மேல் உள்ள ரோமங்கள் நிறமிகள் அற்றவை. இந்த ரோமங்கள் ஒளியைப் பிரதிபலிப்பதால் நமக்கு வெள்ளையாகக் காட்சியளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பொன்னியின் செல்வனில் என்ன இருக்கு?
Discovering the Arctic Giant

தோலுக்குக் கீழ் படர்ந்துள்ள நான்கு அங்குல தடிமனான கொழுப்புப் அடுக்கு, இவைகளை கடும் குளிரிலிருந்து பாதுகாக்கிறது.

இவை பெரும்பாலும் பனிப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள மீன்களையும், கடல் நாய்களையும் வேட்டையாடி உண்கின்றன. புவி வெப்பமடைவதால் தற்போது கடல் பனிகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் உணவு தேட இயலாமல், துருவக் கரடிகள் நீண்ட தூரம் கடலில் நீந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இது துருவக் கரடிகள் அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கப்படுகிறது.

துருவக் கரடிகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பனிப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. தற்போது அவற்றின் இருப்பிடம் உருகிக் கொண்டிருக்கிறது. நாம் கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே, இந்தப் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுத்து அவற்றின் வாழ்வாதாரத்தைக் காக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com