

கார்திக் - ஹரிணி இளம் தம்பதிகள். அவர்களுக்கு 2 குழந்தைகள். முதலில் ஆண். பெயர் அத்வைத். இப்போது வயது 11. அடுத்து ஒரு பெண் ஆதிரா. வயது 4. எப்போதும் சிரித்த முகம். தம்பதிகளுக்கு தங்கள் குழந்தைகளை சாதனை செய்ய வைக்க வேண்டும் என்று ஆவா. ஆதிரா பாட்டு வகுப்பிற்கும், பரத நாட்டியம் வகுப்பிற்கும் போய் வருகிறார்.
நம் நாயகன் அத்வைத் தான். ரொம்ப வெகுளி. அவன் சதுரங்கம் வகுப்பிற்குப் போய் கற்று வந்தான். பல்வேறு போட்டிகளில் கலந்து பரிசுகள் பெற்று உள்ளான். 5ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் கராத்தே வகுப்பிற்கு 4 வயது முதல் போய் வருகிறான். சிறந்த பயிற்சி. சிறந்த ஈடுபாடு. கராத்தே என்பது அவன் உயிர். எப்போது வாரக்கடைசி வரும் என்று நினைத்துக்கொண்டு இருப்பான். சனி மற்றும் ஞாயிறு அன்று கராத்தே வகுப்பு உண்டு.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இந்தியர்களால் கண்டுபிடிக்கபட்டதே கராத்தே. ஆனால் அது சீனா, ஜப்பான் என்று பல நூற்றாண்டுகளாக அங்கு வளர்ந்து வருகிறது. சதுரங்கம்கூட நம்மால் கண்டுபிடிக்கபட்டது தான். ஆனால் இந்த நூற்றாண்டில் தான் சதுரங்கம் மற்றும் கராத்தே இந்தியாவில் வளரத் துவங்கியது.
அத்வைத் பக்கம் செல்வோம். அவனுக்குச் சதுரங்கம் பிடித்து இருந்தது. ஆனால், அதைவிட தற்காப்பு கலையான கராத்தே மீது காதல் கொண்டு இருந்தான் என்று சொல்லியே தீர வேண்டும். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து ஒரு அரை மணி நேரம் வீட்டு பாடம் செய்து முடிப்பான். பின் 5.45க்கு மொட்டை மாடி சென்று விடுவான். கராத்தே பயிற்சி செய்வான். அவன் மனம் முழுக்க முழுக்க கராத்தே தான். அதற்கு தேவையான மனக்குவிப்பு அவனிடம் இருந்தது.
அவன் ஆரம்பிக்கும்போது “ ஓஸ்ஸ்” சொல்வதே தெளிவாக இருக்கும். உடல் அசைவுகளும் பக்காவாக இருக்கும். சரியாக ஒரு மணி நேரம். கடுமையான பயிற்சி. அலாதி பிரியம். பின்னர் 6.45 க்கு வீடு வந்து குளிக்க போய்விடுவான். அவனது அர்ப்பணிப்பு கண்டு நாம் ஆச்சரியம்தான் அடைய முடியும். அவன் முதல் உள்ளூர் போட்டிகளில் பங்கு பெற்றான். பல பரிசுகள் பெற்றான். 8 வயதிலேயே முதல் பெல்ட் வாங்கி விட்டான்.
அவன் அசூர வளர்ச்சி கண்டு மாஸ்டர் வியந்து போனார். எனவே, அத்வைத்திற்கு ஸ்பெஷல் கவனம் செலுத்தினார். ஒரே வருடத்தில் இரண்டாவது பெல்ட் வாங்கி விட்டான். அவனுக்கு 11 வயது நடக்கும்போது அகில உலக கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.
மாஸ்டர் வீட்டிற்கே வந்து அத்வைதை தானே கூட்டி செல்வதாக சொன்னார். முதலில் தயங்கிய அம்மா மற்றும் அப்பா…மாஸ்டர் சொன்னதை நினைத்து சரி என்று சொன்னார்கள்.
அகில உலக கராத்தே போட்டிக்கு போகும்முன் அத்வைத்தை ஒரு வாரம் பள்ளிக்கு லீவ் லெட்டர் கொடுக்கச் சொன்னார். அத்வைத் அப்படியே செய்தான். அவனுக்கு ஒரே குஷி. சந்தோஷம். எப்படியும் டெல்லியில் அசத்தி விட வேண்டும் என்று தீர்மானித்தான். முதல் ரவுண்ட், 2 மற்றும் 3வது ரவுண்டில் தூள் கிளம்பினான். கால் இறுதி, அரை இறுதி என்று எல்லா ரவுண்டிலும் தூள் கிளம்பினான்.
கோச் சொல்வதை காது கொடுத்து கேட்டான். நாளை இறுதி போட்டி. அத்வைத்திற்கு இப்போதுதான் சற்று பயம் வந்தது. இறுதி போட்டியில் வெல்ல மனம் துடிதுடித்தது. அவன் ஆஞ்சநேயரை மனதாரப் பிரார்த்தனை செய்தான். கோச் பதட்டமாக இருந்தார். கடைசியாக அத்வைத் இடம் "பயப்படாதே… தைரியமாக போராடு… இவ்வளவு தூரம் வந்ததே உலக சாதனை" - கண்ணீர் விட்டு பேசினார்.
அத்வைத் மாஸ்டருக்கு உறுதிமொழி கொடுத்தான். இறுதி போட்டி. மாஸ்டர் வெளியே போய் விட்டார். உள்ளே அத்வைத் படு ஆக்ரோஷமாக, மன குவிப்புடன், தைரியமாகச் சண்டை போட்டான். இறுதி ரவுண்ட் முடிந்தது. மாஸ்டர் உள்ளே வந்தார். அத்வைத் அவர் அருகே உட்கார்ந்தான்.
மைக்கில் குரல்: அத்வைத் மிக குறைந்த வயதிலேயே ப்ளேக் பெல்ட் வாங்கிவிட்டார். கூட்டம் கரவொலி செய்தது.
மேலும் மைக்கில்: இனி அத்வைத் மாணவர் இல்லை. அவரே மாஸ்டர் ஆகிவிட்டார். வாழ்த்துகள். மாஸ்டர் அத்வைத்தை தனது தோளில் சுமந்து அரங்கம் முழுக்க முழுக்க பவனி வந்தார்.
அத்வைத் உடனே அம்மா, அப்பாவிடம் பேசினான். இருவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
11 வயதில் கருப்பு பெல்ட் வாங்குவது ஒரு உலக சாதனை. இது அத்வைத்தின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் மட்டுமே சாத்தியமானது. இனி கருப்பு பெல்ட் பெற்ற அத்வைத் ஒரு மாஸ்டர்..!