குழந்தைப் பாடல்: மழலைகளின் மகுடம்!

குழந்தைகளின் லட்சியங்களை ஈடேற்றவும், அவர்களைச் சிறந்த குடிமக்களாக மாற்றவும் உதவும் பாடல்.
குழந்தைப் பாடல் |  children
குழந்தைப் பாடல் | childrenImage credit: Chatgpt
பா. நூருல்லாஹ்

என் பெயர் பா.நூருல்லாஹ். நான் ஆசிரியர். சமூகப் பணியிலும் ஈடுபட்டு மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வருகிறேன். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினால் கவிதை கட்டுரை கதை போன்றவை எழுதி வருகிறேன். சமூகத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்தும் எனக்குள் ஏற்படும் சில கருத்துக்களை முன்வைத்தும் கதைகள் எழுதி வருகிறேன்.

Updated on: 

குழந்தைப் பாடல்: மழலைகளின் மகுடம்!

சின்னச் சின்ன மழலைகளே!

சிந்தனையில் சிறகுகளே!

மண்ணில் மலர்ந்த மலர்களே!

மனிதம் காக்கும் விளக்குகளே!

காலைக் கதிரின் ஒளியைப்போல

கனிவாய் மலர்வோம் உலகமெங்கும்!

காகிதத்தில் கனவைத் தீட்டி

காலம் போற்ற வாழ்ந்திடுவோம்!

நிலவைத் தொட்டிட ஆசையுண்டு,

நீல வானில் பறந்திட ஆசை!

அறிவின் பாதை நடந்தால் போதும்

அனைத்தும் கைகூடும் தோழா!

மரத்தின் நிழலில் மகிழ்ச்சி காண்போம்,

மலரின் வாசத்தில் அன்பைக் காண்போம்!

பறவையின் சிறகில் சுதந்திரம் கற்போம்

பசுமை உலகைப் பாதுகாத்திடுவோம்!

இதையும் படியுங்கள்:
கவிதை: எட்டயபுரத்தின் எரிமலை!
குழந்தைப் பாடல் |  children

ஏழை என்றொரு வேற்றுமை வேண்டாம்,

எவரும் தாழ்வென எண்ணுதல் வேண்டாம்!

அன்பெனும் மொழியில் பேசிடுவோம்,

அனைவர் உள்ளமும் இணைந்திடுவோம்!

புத்தகம் எங்கள் புதையல் ஆகும்

புன்னகை எங்கள் அணிகலன் ஆகும்!

உண்மை எங்கள் உயிரெனக் கொள்வோம்

உயர்ந்த பண்பால் உலகை வெல்வோம்!

மழலை நெஞ்சில் நம்பிக்கை விதைப்போம்

மனிதநேயத்தை நாளும் வளர்ப்போம்!

இன்றைய குழந்தை நாளைய உலகம்

இனிய எதிர்காலம் எங்கள் வசம்!

logo
Kalki Online
kalkionline.com