சிறுவர் சிறுகதை: கிணற்றுத் தவளையும், ஏரித்தவளையும்..!

அறியாமையுடன் வாதாடுவதை விட விலகிச் செல்வதே புத்திசாலித்தனம் என்பதை விளக்கும் சுவாரஸ்யமான சிறுகதை.
சிறுகதை | The Well FrogS and the Lake Frog
சிறுகதை | The Well FrogS and the Lake FrogImage credit: Gemini AI
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on

மழைவெள்ளத்தில் அடிபட்டு ஒரு கிணற்றுக்குள் நுழைந்த ஏரித் தவளைக்கும், உலகமே அந்தக் கிணற்றுக்குள் மட்டும்தான் என்று நம்பும் அறியாமை நிறைந்த கிணற்றுத் தவளைகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான மோதலே இக்கதை!

காட்டூர் பகுதியில் ஓயாத மழை பெய்து கொண்டிருந்தது. அந்த ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை பெய்து கொண்டிருந்தது.

அந்த ஏரி நீர் குளிர்ச்சி தாங்க முடியாமல் ஒரு தவளை மழை சிறிது விட்டதும் சற்று தூரத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.

கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் அந்த தவளை கிணற்றுக்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்த புதிய தவளையை வரவேற்றது.

"நான் வெகுநாட்களாக பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னை கண்டதும் எனக்கு மகிழ்ச்சி" எனக் கூறி கிணற்றுத் தவளை பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளை புதிய தவளைக்கு தந்தது.

அங்கிருந்த மற்ற இரண்டு தவளைகளுக்கு புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை.

ஒரு தவளை மற்ற தவளையிடம், "இங்கு கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு என கவலை பட்டன.

புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.

அப்போது கிணற்றுத் தவளை, ஏரித்தவைளையிடம், "நண்பனே நீ இத்தனை நாளும் எங்கே இருந்தாய்?" என கேட்டது.

சிறுகதை | The Well FrogS and the Lake Frog
சிறுகதை | The Well FrogS and the Lake FrogImage credit: Gemini AI

"நான் ஏரியில் தங்கி இருந்தேன்" என்றது ஏரித் தவளை.

"ஏரியா? அப்படி என்றால் என்ன?" என கேட்டது கிணற்றுத் தவளை.

"உங்க கிணற்றை போன்ற பெரிய நீர்நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு" என்றது ஏரித் தவளை.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சரியானது தவறாகத் திருப்பித் தரப்படுகிறது!
சிறுகதை | The Well FrogS and the Lake Frog

"இந்தக் கிணற்றை போன்றதில் அவ்வளவு உயிரினங்களாக உள்ளது?" என்று கேட்டது கிணற்றுத் தவளை.

"இந்தக் கிணற்றை விட மிகப்பெரியது ஏரி" என்றது ஏரித் தவளை.

கிணற்றுத்தவளை இதை நம்பவில்லை.

"நண்பா! நீ பொய் சொல்கிறாய். இந்த கிணற்றை விட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது" என்றது கிணற்றுத்தவளை.

ஏரித்தவளை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் நம்பவில்லை; கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

"ஏரித்தவளையைப் பார்த்து நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து" என்று கூறி ஏரித் தவளையை கிணற்றுத் தவளைகள் தாக்கின.

அப்போது, கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண் பக்கெட்டை உள்ளே விட்டு எடுக்கும் போது, அதில் ஏரித்தவளை அந்தத் தண்ணீருடன் மேலே சென்று தாவிக் குதித்து ஏரியை நோக்கி சென்றது.

மனதுக்குள், இந்த முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது என சொல்லியது ஏரித் தவளை.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மந்திரக் கண்ணாடி!
சிறுகதை | The Well FrogS and the Lake Frog

குட்டீஸ்...! இப்போது தெரிந்ததா? முட்டாளிடம் பேசினால் எதுவும் புரியாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளே..! இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், உலகின் பரந்த தன்மையைப் புரிந்து கொண்டு, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் விவாதங்களில் சிக்காமல் புத்திசாலித்தனமாக விலகிச் செல்லும் பக்குவத்தைப் பெறுங்கள். தேவையற்ற வாதங்களைத் தவிர்த்து, சுய அமைதியை நிலைநிறுத்திக் கொள்ள உதவும் மிகச்சிறந்த மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அறியாமையில் மூழ்கியவர்களிடம் விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், உங்களின் மன அமைதியையும் ஆற்றலையும் பாதுகாப்பதற்கான தெளிவான புரிதலைப் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com