Basking shark
Basking shark

பாஸ்கிங் சுறாக்கள்(Basking Sharks): பிரித்தானியக் கடல்களின் சாது ராட்சசர்கள்!

Published on

திமிங்கல சுறாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் இனமான, பாஸ்கிங் சுறாக்கள்(Basking Shark) UK-யில் காணப்படும் மிகப்பெரிய சுறா இனமும் கூட. இந்த சாதுவான ராட்சசர்கள் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தையும் விளைவிப்பதில்லை. இவை, தங்கள் பெரிய வாய்களைத் திறந்து, மெதுவாக நீந்திச் சென்று, நீரில் உள்ள ஜூப்ளாங்க்டன் (zoo plankton) எனப்படும் நுண்ணுயிரிகளை வடிகட்டி உண்கின்றன.

இந்த சுறாக்கள் 12 மீட்டர் நீளம் வரையிலும், 6 டன் எடை வரையிலும் வளரக்கூடியவை. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் UK கடற்பரப்பில் இவற்றைக் காணலாம். இவை பெரும்பாலும் கார்ன்வால், ஐல் ஆஃப் மேன், மற்றும் இன்னர் ஹெப்ரைட்ஸ் ஆகிய இடங்களின் கடற்கரைகளில் காணப்படுகின்றன. பாறைப் பகுதிகளிலிருந்து பார்த்தாலும், அனுபவமிக்க படகுச் சுற்றுலா மூலம் இவற்றை மிக நெருக்கமாகப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

பாஸ்கிங் சுறாக்களை(Basking Shark) அடையாளம் காண்பது எப்படி?

பாஸ்கிங் சுறாவின் பெரிய, கறுப்பு, முக்கோண வடிவ முதுகுத் துடுப்பு (dorsal fin) மெதுவாக நீரின் மேற்பரப்பில் நகர்ந்து செல்வதைக் காணலாம். அவற்றின் பெரிய மூக்கும், வால் நுனியும் கூட நீரின் மேலே தெரியும். அவற்றின் சாம்பல் நிற உடல் மிக எளிதில் அடையாளம் காணக்கூடியது. குறிப்பாக, அதன் அகன்ற வாய் தண்ணீருக்கு மேலே தெரியும் போது இதை எளிதாக அடையாளம் காணலாம்.

பாதுகாப்பு நிலை மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை

வடகிழக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள பாஸ்கிங் சுறா இனம், IUCN செம்பட்டியலில் (Red List) அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. UK-யில், வனவிலங்கு மற்றும் நாட்டுப்புறச் சட்டம் (Wildlife and Countryside Act) மூலம் இவை பாதுகாக்கப்படுகின்றன.

நீங்கள் ஒரு பாஸ்கிங் சுறாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அதனுடன் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம்.

படகு: குறைந்தது 100 மீட்டர் தொலைவில் இருங்கள். சுறா திடீரென உங்கள் படகுக்கு அருகில் வந்தால், அதன் மீது மோதி காயம் ஏற்படாமல் இருக்க, படகின் இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள். நீருக்கு அடியில் இன்னும் பல சுறாக்கள் உணவருந்திக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜெட்ஸ்கி: குறைந்தது 100 மீட்டர் தொலைவில் இருங்கள். இவற்றை நெருங்கினால் சுறாக்கள் பயப்படக்கூடும், மேலும் சுறாவுக்கும், ஜெட்ஸ்கி ஓட்டுபவருக்கும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
'முழு பூசணிக்காயையும் சோத்துக்குள்ள மறைக்கிறதுக்கு' உண்மையான அர்த்தம் இதுதான்.!
Basking shark

கயாக்/SUP: அமைதியாகவும், நிதானமாகவும் இருங்கள். சுறாவை நோக்கியோ அல்லது அதன் பாதையை குறுக்கிட்டோ செல்லாதீர்கள்.

நீச்சல்: குழுவாக இருங்கள். சுறாவிடமிருந்தும் குறைந்தது 4 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும். சுறாவை ஒருபோதும் தொடாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
நிலாவில் இருந்து பூமியை பார்க்க முடியுமா? எப்படி இருக்கும்?
Basking shark

நீங்கள் பார்க்கும் பாஸ்கிங் சுறாக்கள் பற்றிய தகவல்களை உங்கள் உள்ளூர் வனவிலங்கு அறக்கட்டளைக்கு (Wildlife Trust) தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உதவலாம். உங்களின் இந்தத் தகவல்கள், இந்த அற்புதமான உயிரினங்களைப் புரிந்துகொள்ளவும், பாதுகாக்கவும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com