அடேங்கப்பா! பொம்மைகளுக்கு இவளோ விலையா!

Most Expensive Dolls
Most Expensive Dolls
Published on

எல்லாருடைய குழந்தை பருவத்திலும் பொம்மையின் பங்கு பெரும் அளவில் இருக்கும். நம் விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் அந்த பொம்மையிடம் காண்பித்து அதை ஒரு வழியாக்கிருப்போம். ஆனால் நாம் இப்போது பார்க்கப் போகும் பொம்மைகளோ அவ்வளவு எளிதில் தொட முடியாத இடத்தில் இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. அஸ்டோலட் டால்ஹவுஸ் கேஸ்டெல் (Astolat Dollhouse Castle):

இதுவரை உருவாக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பொம்மைகளில் ஒன்று அஸ்டோலட் டால்ஹவுஸ் கேஸ்டெல் ஆகும். இதன் மதிப்பு $8.5 மில்லியன் (ரூ.71,37,52,208) ஆகும். மாஸ்டர் மினியேச்சரிஸ்ட் எலைன் டீஹலால் (miniaturist Elaine Diehl) வடிவமைக்கப்பட்ட இந்த மினியேச்சர் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த கற்கள் போன்ற ஆடம்பரமான பொருட்களால் வடிவமைக்கபட்டுள்ளது. டால்ஹவுஸ் அதன் படைப்பாளரின் கலைத்திறன் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இது தனித்துவமான பொருட்களை சேகரிக்கும் நபர்களுக்கு ஒரு மதிப்புமிக்க அடையாளமாக அமைகிறது.

2. L’Oiseleur (The Bird Trainer Doll):

L'Oiseleur (The Bird Trainer), $6.25 மில்லியன் (ரூ.52,35,13,831) மதிப்புள்ள ஒரு தானியங்கி பொம்மை. கிறிஸ்டியன் பெய்லி (Christian Bailly) உருவாக்கிய இந்த நேர்த்தியான பொம்மை 2,340 க்கும் மேற்பட்ட பளபளப்பான ஸ்டீல் பாகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் வாசித்து நகரும் வகையில் புல்லாங்குழல் வாசிக்கும் ஒருவரின் உருவத்தையும் கொண்டுள்ளது. இதில் உபயோகப்படுத்தி உள்ள இந்த தனித்துவமிக்க கைவினைத்திறன் இதை மிகவும் மதிப்புமிக்க பொம்மையாக மாற்றுகிறது.

3. மேடம் அலெக்சாண்டர் எலோயிஸ் பொம்மை (Madame Alexander Eloise Doll):

மேடம் அலெக்சாண்டர் எலோயிஸ் பொம்மை, $5 மில்லியன் (ரூ.41,88,11,065) மதிப்புமிக்கதாகும். இந்த பொம்மை ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் (Swarovski crystals) அலங்கரிக்கப்பட்ட ஹாட் கோட்சர் (haute couture) பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையான தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட பாகங்களும் அடங்கும். அதன் பிரத்யேக தன்மை மற்றும் உயர்தர பொருட்களின் பயன்பாடால், அது மிகப்பெரிய விலைக்கு பறைசாற்றப் படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பொம்மை கலாசாரம்!
Most Expensive Dolls

4. கோல்ட் லம்போர்கினி அவென்டடோர் மாடல் கார் (Gold Lamborghini Aventador Model Car):

கார் ஆர்வலர்களுக்கு, கோல்ட் லம்போர்கினி அவென்டடோர் மாடல் கார் கனவு விஷயமாகும், இதன் மதிப்பு $7.5 மில்லியன் (ரூ.62,82,16,597). கார் போன்ற இது, திடமான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் தத்துருவமான வடிவமைப்பு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் பயன்பாடு ஆகியவையால் இந்த மாடல் காரை ஒரு பொக்கிஷமாக பார்க்கிறார்கள்.

5. ஷிமான்ஸ்கி சாக்கர் பால் (The Shimansky Soccer Ball):

$2.59 மில்லியன் (ரூ.17,24,66,396) மதிப்புள்ள ஷிமான்ஸ்கி சாக்கர் பால், விளையாட்டுடன் சேர்ந்த ஆடம்பரத்தின் தனித்துவமான கலவையாகும். இந்த கால்பந்து பந்தில் 6,620 வெள்ளை வைரங்கள் மற்றும் 2,640 கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2010 FIFA உலகக் கோப்பையின் நினைவாக உருவாக்கப்பட்டது, இன்று வரை அதன் வரலாற்று முக்கியத்துவத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நேர்த்திக்கடனாக உருவ பொம்மை செலுத்தும் அதிசயக் கோயில்!
Most Expensive Dolls

6. ஸ்டீஃப் லூயிஸ் உய்ட்டன் டெடி பியர்(Steiff Louis Vuitton Teddy Bear):

கடைசியாக, ஸ்டீஃப் லூயிஸ் உய்ட்டன் டெடி பியர், $2.1 மில்லியன் (ரூ.17,59,00,647) மதிப்புடையது, புகழ்பெற்ற லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) இன் உடை அலங்காரத்துடன், காலத்தால் அழியாத ஒரு டெடி பியர் வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும், உண்மையான தங்கம் மற்றும் வைரம் இதன் ஆடையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அரிதான தன்மை மற்றும் உயர்தர பேஷன் பிராண்டின் சேர்க்கையால் இதன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

உலகின் விலையுயர்ந்த இந்த பொம்மைகள் அவற்றின் தனித்துவமான கைவினைத்திறன், விலைமதிப்பற்ற பொருட்களின் பயன்பாடு மற்றும் கிடைக்க அரிதானவை போன்ற காரணத்தால், இவற்றின் சாயலில் உள்ள பிற பொம்மைகளிடமிருந்து தனித்து நிற்கிறது. இதுவே அவற்றின் மதிப்பை உயர்த்தி, வெறும் விளையாட்டுப் பொருளாக பார்க்காமல், ஒரு ஆடம்பரமான சேகரிப்பு மற்றும் நிலை சின்னங்களாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com