

வாழை மரம்
வாழை மரம்
தென்னை போல
முழுதும் தன்னை
தானம் தரும் வள்ளல் மரம்
வாழை இலையில் சாதம் சாப்பிட
கண்கள் இரண்டும் பிரகாசம் ஆகும்
போன பார்வையும் திரும்பி வரும்
சாப்பிட சமைத்து பூவும் தண்டும்
ஒல்லியா ஆயிடும் எப்பேர்ப்பட்ட குண்டும்
நீங்கும் வாதம் போகும் பித்தம்
வயிறும் குடலும் ஆகும் சுத்தம்
சிறுநீரக கற்களால் பட்டால் அவதி
அதற்கும் வாழை தண்டு நல்ல ரெமடி
ஆப்பிள் சாப்பிட முடியுமா ஏழை?
கை கொடுப்பது யார்? நம் வாழை!
முக்கனிகளில் வாழைதான் முதன்மை
அருமை அறிந்து மதிப்போம் அதனை
இல்லை என்றால் வாழையின் நாரு
பூ மாலை கட்ட முடியுமா சாரு
விஷ பாம்புகள் கடிச்சு உயிரை பறிக்கும்
அவற்றின் நஞ்சை கூட வாழை பட்டை முறிக்கும்!
வாழையடி வாழையாய் கன்றுகள் முளைக்கும்
இலையும் காயும் வாழ்நாள் முழுதும் கொடுக்கும்
மரங்களெல்லாம் மரகதங்கள் உதவும் கரங்கள்
அம்மரகதங்களில் வாழை மரங்கள் மாணிக்கங்கள்
பேணுங்கள் அவைகளை பெரும் பயன் அடையுங்கள்