தெனாலிராமன் விகடகதை: கடன் தீர்ந்தது! 

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தெனாலிராமன் செய்த தந்திரம்..
தெனாலிராமன் | Tenaliraman, his wife, and the king.
தெனாலிராமன் | Tenaliraman, his wife, and the king.Image credit: Chatgpt
Updated on

அரசவைக் கூடியது அன்று கடன் வசூலிப்பு பற்றிய கூட்டம் நாட்டில் யார் யார் கடன் வாங்கியிருக்கிறார்கள்? எவ்வளவு பேர் திருப்பி கொடுத்திருக்கிறார்கள்? எவ்வளவு பேர் திருப்பிக் கொடுக்கவில்லை? என்ற பட்டியலை வாசித்தார் ராஜகுரு.

தெனாலிராமன், "ஆயிரம் பணம்" உரக்கச் சொன்னார். "தெனாலிராமன் இவ்வளவு பணமா கடன் வைத்திருக்கிறாய்? ஏன் கடனை கட்டவில்லை" என மன்னர் கேட்டார்.

அவர், "நமது அதிகாரிகள் கடன் வசூலிக்கச் சென்றால் ஆள் வீட்டில் இருப்பதில்லை. அதோடு வீட்டில் இருந்தாலும் மனைவி மூலம் இல்லை என்று சொல்லச் சொல்லி விடுகிறார்" என்ற சொல்லிவிடுகிறார் என்றார் ராஜகுரு.

மன்னருக்கு கோபம் வந்தது.

"தெனாலிராமன் அரசவை உறுப்பினராய் இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுப்பது தானே முறை. தெனாலிராமன் அரசவைக்கு வரவில்லையே ஏன்?" என மன்னர் கேட்டார்.

"கடன் வசூல் சம்பந்தமான கூட்டத்திற்கு அவர் எப்போதும் வருவதே இல்லை மன்னர் மன்னவா.." ராஜகுரு சொல்ல மன்னருக்கு இன்னமும் கோபம் அதிகமானது.

என்ன திமிர் இருந்தால் கூட்டத்திற்கு வராமல் தட்டி கழிப்பான்? அதிகாரிகள் போனால் தானே இல்லை என்கிறார்கள். நானே மாலை அவன் வீடு சென்று கடன் வசூலை கவனிக்கிறேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் .

யானையின் பாதத்திலிருந்து தப்பிவிட்டாய். ஆனால் இந்த முறை உனக்கு நிரந்தர சிறை தண்டனை தான் என்னை மீறி அரசரிடம் உனக்கு பெரிய நட்பென்று நினைப்போ.. இனி நீ காலி எப்பவும் இந்த ராஜகுருதான் மன்னரின் நெருக்கமான ஆள் என்று ராஜகுரு தனக்குத்தானே பேசிக்கொண்டார்.

தெனாலிராமன் | Tenaliraman, his wife, and the king.
தெனாலிராமன் | Tenaliraman, his wife, and the king.Image credit: Gemini AI

மாலை மன்னர் தெனாலிராமன் இல்லத்திற்குள் நுழைந்தார். மன்னர் வருவதை பார்த்ததும் தெனாலிராமன் படுத்துக்கொண்டான். அரசவையில் காலை நடந்த விவகாரங்களை தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மூலம் தெரிந்து கொண்டான் தெனாலிராமன். ஆனால், மன்னரே நேரில் வருவார் என்று நினைக்கவில்லை. மனைவியிடம் எதையோ சொல்லிவிட்டு கண்களை மூடி முகத்தை சவக்கிளைக்கு கொண்டு வந்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ரோபோவும் ராமுவும்..!
தெனாலிராமன் | Tenaliraman, his wife, and the king.

அவன் மனைவி கமலா அழுது கொண்டிருந்தாள். உடனே வந்த மன்னர் படுத்திருக்கும் தெனாலியையும் அழுது கொண்டிருக்கும் அவன் மனைவியும் பார்த்தார்.

"என்ன ஆச்சு தெனாலிராமனுக்கு? எதற்காக அழுகிறாய்?" என்று மன்னர்  கேட்டார். மேலும் கேவி கேவி அழுதாள் கணவனை பார்த்து.

"தெனாலிராமனுக்கு உடல் நலம் இல்லை என்றால் அரண்மனைக்கு சொல்லி அனுப்பினால் அரண்மனை வைத்தியரை அனுப்பி வைக்கிறேன். இதற்கு ஏன் அழுகிறாய் அம்மா?" என்று மன்னர் சொல்ல பார்த்து, "மன்னர்மன்னன் அவர் உடல் நலமில்லாமல் படுத்திருக்கவில்லை. கடன்பாரம் தாங்காமல் மனம் உடைந்து இரண்டு நாட்களை படுத்த படுக்கையில் கிடக்கிறார். தாங்கள் ஒரே ஒரு வார்த்தை" மேலும் சொல்ல முடியாமல் கமலா திக்கினாள். "என்னம்மா ஒரே ஒரு வார்த்தை" மன்னர் பதற்றத்துடன் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சூரியனைத் திருடிய காகம்!
தெனாலிராமன் | Tenaliraman, his wife, and the king.

"மன்னா தாங்கள் தெனாலிராமா கடன் எல்லாம் தீர்ந்து விட்டது என்று சொன்னீர்களானால் அவர் மனம் சாந்தியடையும்" என்றாள் கமலா கண்களை கசக்கியபடி. "தெனாலிராமன் நீ எனக்கு தர வேண்டிய கடன் எல்லாம் தர வேண்டாம். அதனால் நீ நிம்மதியாக கவலை இன்றி கண்களை மூடலாம்" என்றார் மன்னர் வருத்தத்தோடு.

மன்னர் சொன்னதைக் கேட்ட அடுத்த நொடி விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்த தெனாலிராமன், "மன்னா.. கடனால் உயிர் விட்டுக் கிடந்தேன். கடன் தீர்ந்தது என்று தாங்கள் கூறியதும் சென்ற உயிர் மீண்டு விட்டது" என்று சொல்லி சிரித்தான். மன்னருக்கு சிரிப்பதை தவிர வேறு வழி  தெரியவில்லை. எப்படி எல்லாம் நாடகம் போட்டு இந்த தெனாலிராமன் தப்பி விடுகிறான் என்று மனசுக்குள் நினைத்தபடி வெளியேறினார்.

பிறகு மனைவியிடம், "வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் இப்படி செய்தேன்" என்று கூறியதும் அவன் மனைவி மகிழ்ச்சியடைந்தாள்.

logo
Kalki Online
kalkionline.com