திருக்குறள் காட்டும் விந்தைகள்: வள்ளுவர் உவமையாக்கிய பறவைகளும் விலங்குகளும்!

திருக்குறளில் பறவைகள் மற்றும் விலங்குகளை திருவள்ளுவர் எப்படிக் கையாண்டுள்ளார் என்பதை இந்தத் தொகுப்பு மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
திருவள்ளுவர் | Thirukkural and animals
திருவள்ளுவர் | Thirukkural and animalsImage credit: Chatgpt
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட தனிப்பட்ட பாராட்டத்தக்க தனி இயல்புகள் இருக்கின்றன. திருவள்ளுவர் கூட தான் சொல்ல வந்ததை பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் குணங்களை உதாரணமாக வைத்து விளக்கி உள்ளார். அவற்றை தேடி எடுத்து கீழே தந்துள்ளேன்.

பறவைகள்:

1) கூகை அதாவது ஆந்தை:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது. குரள் 481

விளக்கம்: பகல் நேரத்தில் ஆந்தையைக் காகம் பதம் பார்த்துவிடும். ஏனென்றால், ஆந்தை பகலில் சரியாக பார்க்க இயலாது. அதுபோல, பகைவரை வெல்ல நினைக்கும் அரசனுக்கு ஏற்ற காலம் பார்ப்பது மிக முக்கியம்.

2) காகம்:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள. (குறள்: 527)

விளக்கம்: காகம் தனக்குக் கிடைத்த உணவை மறைக்காமல், தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய குணம் உடையவர்களுக்கே செல்வச் சிறப்பு சேரும்.

3) கொக்கு:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து. (குறள்: 490)

விளக்கம்: காலம் கை கூடும் வரை கொக்கைப் போல அமைதியாகக் காத்திருக்க வேண்டும். காலம் கைகூடினவுடன் கொக்கு மீனை கொத்தி பிடிப்பதை போல காரியத்தை முடிக்க வேண்டும்.

4) அன்னம்:

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம். (குறள்: 1120)

விளக்கம்: அனிச்ச மலரும், அன்னப் பறவையின் மென்மையான இறகும் கூடப் பெண்ணின் மெல்லிய பாதங்களுக்கு நெருஞ்சி முள் போலக் குத்தும்.

இதையும் படியுங்கள்:
சிட்டுக்குருவி முதல் விசித்திரப் பறவைகள் வரை: ஆச்சரியமான தகவல்கள்!
திருவள்ளுவர் | Thirukkural and animals

5) பொதுவான பறவை (புள்):

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள்: 338)

விளக்கம்: முட்டை (அல்லது கூடு) தனியே கிடக்க, பறவை பறந்து போவதைப் போன்றதே, உடலுக்கும் உயிருக்கும் உள்ள தற்காலிக உறவு.

விலங்குகள் / மிருகங்கள் (Animals):

1) யானை:

  • பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

  • வெருஉம் புலிதாக் குறின். (குறள்: 599)

    விளக்கம்: யானை உருவத்தில் பெரியது, கூர்மையான தந்தங்களை உடையது. என்றாலும், துணிவோடு புலி தாக்க வரும்போது அந்த யானை அஞ்சி நடுங்கும்.

  • நனை கவுள் யானையால் யானை யாத்தற்று

    வினையால் வினையாக்கிக் கோடல். (குறள்: 678)

    விளக்கம்: ஒரு மதயானையைக் கொண்டு மற்றொரு காட்டு யானையைப் பிடிப்பதைப் போல, ஒரு செயலைச் செய்யும் போதே அதன் மூலம் மற்றொரு செயலையும் சாதித்துக் கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் | Thiruvalluvar and animals
திருவள்ளுவர் | Thiruvalluvar and animalsImage credit: Gemini AI

2) ஆமை:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள்: 126)

விளக்கம்: ஆமை ஆபத்து வரும்போது தன் உடலின் ஐந்து உறுப்புகளையும் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வது போல, ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிகளிலும் அரணாக விளங்கும்.

4) விலங்கு மற்றும் மனிதன் (பொது ஒப்பீடு):

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

விளக்கம்: நல்ல நூல்களைக் கற்றவர்களோடு ஒப்பிடும் போது, கல்லாதவர்கள் மனித வடிவத்தில் இருக்கும் விலங்குகளுக்கு சமமாகத்தான் கருதப்படுவார்கள்.

5) சிங்கம்:

வள்ளுவர் சிங்கத்தை "அரிமா" என்ற தூய தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுகிறார். காட்டின் ராஜாவான சிங்கத்தின் கம்பீரத்தையும் அஞ்சா நெஞ்சத்தையும் சிறந்த ஒரு நாட்டின் தலைவனுக்கு (அரசனுக்கு) உவமையாகக் கூறுகிறார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.  (குறள்: - 381)

பொருள்: வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், குறையாத செல்வம், சிறந்த அமைச்சர், நல்ல நட்பு, அழிக்க முடியாத கோட்டை (அரண்) ஆகிய ஆறு அங்கங்களையும் முறையாகக் கொண்ட அரசனே உலக ஆட்சியாளர்களுள் சிங்கம் (ஏறு) போன்ற கம்பீரமானவன் ஆவான்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே பயம்னா என்னன்னே தெரியாத விலங்கு எது தெரியுமா?
திருவள்ளுவர் | Thirukkural and animals

6) நாகம்:

பாம்பின் (நாகத்தின்) மிக முக்கிய குணம் அதன் மூச்சுக்காற்றின் வலிமையும் (சீற்றம்), அது கொடுக்கும் பயமும் ஆகும். பகைவர்களின் ஆரவாரத்தை அடக்க பாம்பின் சீற்றமே போதும் என்றும், தீயவர்களுடன் வாழ்வது பாம்போடு வாழ்வதற்குச் சமம் என்றும் வள்ளுவர் எச்சரிக்கிறார்.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (குறள்: 746)

பொருள்: கடல் போலத் திரண்டு வந்து எலிகள் கூட்டம் கூட்டமாக எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் (ஒலி எழுப்பினாலும்) என்ன பயன்? ஒரு நாகப் பாம்பு (பாம்பு) தன் மூச்சை பலமாக விட்டுச் சீறினால் மட்டுமே போதும், அத்தனை எலிகளும் அழிந்துவிடும். (இதன் மூலம் வீண் ஆரவாரம் செய்யும் பலவீனமான பகைவர்களை, தகுதியுடைய ஒருவனின் சிறு சீற்றம் அடக்கிவிடும் என்ற குணம் உணர்த்தப்படுகிறது.

7) மான்:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் 969)

விளக்கம்: தன் உடலிலிருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விட்டு விடும் கவரி மான். அது போலத்தான் உயர்ந்தவர்கள் தங்கள் மானம் மரியாதைக்கு ஒரு துளி களங்கம் வந்தாலும் உயிர் துறப்பர்.

logo
Kalki Online
kalkionline.com