தமிழ்நாட்டின் 5 புலிகள் காப்பகங்கள்... அதன் சிறப்புகள்...

wildlife sanctuary
wildlife sanctuaryImg credit: AI Image

1. ஆனைமலை புலிகள் காப்பகம்:

Anamalai Tiger Reserve
Anamalai Tiger ReserveImg credit: Incredible India

இது தமிழ்நாட்டின் கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். முன்பு இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம் என அழைக்கப்பட்டது.

இது 958 ச.கி.மீ  பரப்பளவில் புலிகள், யானைகள் பல அரிய உயிரினங்களுக்கு புகலிடமாக திகழ்கிறது. புலிகள் காப்பகத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதன் வடகிழக்கு மூலையில் டாப் ஸ்லிப், ஆழியாறு, கவி அருவி  போன்றவை அமைந்துள்ளன.

ஆனைமலை புலி காப்பகத்தில் வங்காளப்புலி, இந்திய யானை, இந்திய சிறுத்தை தோலே, நீலகிரி தஹர் மற்றும் சிங்கவால் குரங்கு இந்திய பழுப்பு கீரிகள், சோம்பல் கரடி, ராட்சத அணில், இந்திய சிறுத்தை, இந்திய எறும்புண்ணி, இந்திய முள்ளம்பன்றி, பனை அணில், 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 315 வகையான பட்டாம்பூச்சிகளும் உள்ளன.

2. முதுமலை புலிகள் காப்பகம்:

Mudumalai Tiger Reserve
Mudumalai Tiger ReserveImg credit: Travel-along.in

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். 1940 இல் நிறுவப்பட்டது. 323 கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.

கேரளா கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி உள்ளது. யானைகள் அடர்த்தியில் முதலிடம் வகிக்கும் இந்த பூங்காவில் புலிகள் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளை காணலாம்.

வனத்துறை அனுமதியுடன் சஃபாரி மற்றும் வன விலங்கு காப்பக பகுதிகளை கண்டு களிக்கலாம். மலையேற்ற வசதிகள் இங்கு இல்லை.

இதையும் படியுங்கள்:
குட்டி ஸ்டோரி: வேலையில் கவனம் வேண்டும்!
wildlife sanctuary

3. களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம்:

Kalakkad-Mundanthurai Tiger Reserve
Kalakkad-Mundanthurai Tiger ReserveImg credit: KMTR Kalakkad Mundanthurai Tiger Reserve

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் 17 வது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்துக்கு புகழ் பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறு எங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும் .

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா... பள்ளி விடுமுறை துவங்கியாச்சு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது தெரியுமா?
wildlife sanctuary

1962 -ம் இன்று களக்காடு புலிகள் சரணாலயமும், முண்டந்துறை புலிகள் சரணாலயமும் உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில் இந்த இரு சரணாலயங்களையும் ஒன்றிணைத்து இக்காப்பகம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் இதுவும் ஒன்றாகும்.

4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்:

Sathyamangalam Tiger Reserve
Sathyamangalam Tiger ReserveImg credit: Discover India by car

இது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டையும் உள்ளடக்கிய பகுதியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும்.

தமிழ் நாட்டின் மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயம் ஆகும். 543.9 சதுர மைல் பரப்பளவில் 2008-ம் ஆண்டில் சத்தியமங்கலம் பிரிவின் ஒரு பகுதியாகவும், பின் 2011 - இல் விரிவுபடுத்தி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

5. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்:

Srivilliputhur - Megamalai Tiger Reserve
Srivilliputhur - Megamalai Tiger ReserveImg credit: The News Minute

இது பிப்ரவரி 2021-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஐந்தாவது மற்றும் இந்தியாவின் 51-வது புலிகள் காப்பகம் ஆகும்.

இது விருதுநகர்,தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள நரைத்த அணில் மற்றவற்றிற்கும் புகலிடமாக உள்ளது. இது மேகமலை வனவிலங்கு சரணாலங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இந்த காப்பகம் பெரியாறு புலிகள் காப்பகத்தை தமிழ்நாட்டில் தெற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் முக்கிய பாதையாக செயல்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் சுமார் 1000 சதுர கி.மீ அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா! பாசத்துக்காக  போராடும் ஒரு குட்டி குரங்கை பற்றிய சுவாரஸ்யமான  தகவல்களை பார்ப்போமா!
wildlife sanctuary

இங்கு பசுமை மாறாத காடுகள், இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிகளை கொண்டுள்ளது.

கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்துடன் இது இணைந்திருப்பதால் புலிகளின் இனப்பெருக்கம் மற்றும் இடப்பெயர்ச்சிக்கு இந்த காப்பகம் மிகவும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com