மாணவர்களே! தேர்வில் 'சென்டம்' எடுக்கணுமா? ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் இந்த உணவுகள் போதும்..

Foods that boost memory
Foods that boost memoryImg credit: AI Image
Published on

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க கோலின் சத்து முக்கியமானது. இது முட்டையில் அதிகம் உள்ளது.

கிரீன் டீ மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும். இதில் பாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி - ஆக்சிடென்ட் உள்ளது. எனவே, இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் சோர்வான மனநிலையும் மாறும்.

தேனில் அளவற்ற நன்மைகள் உள்ளன. அவற்றில் ஞாபாக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ, பி6 உள்ளதால் தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

தண்ணீர் குறைவானால் மூளை செயல்பாடு குறையும். அதனால் மூளையில் வறட்சியும், ஞாபக சக்தியும் குறையும். ஆதலால் அதிகம் தண்ணீர் குடிப்பதால் மூளைச் செல்கள் சுறுசுறுப்பாக செயல்படும்.

மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்தது. இதிலும் குறிப்பாக சால்மன், சூரை, கானங் கெளுத்தி, நெத்திலி, மத்தி போன்ற மீன்கள் சாப்பிட மிகவும் சிறந்தவை.

கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பெரிய பழங்களில் குவர்செடின் என்னும் மூளை செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. இதில் ஆந்தோசயனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
நம் வீட்டு வாசலில் கிடைக்கும் ஏழைகளின் கொலாஜன்!
Foods that boost memory

ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி சாப்பிட மிகவும் சிறந்தது.

பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளதால் இந்த பொருட்களை சாப்பிட மூளை செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக, தயிரில் அமினோ ஆசிட், தைரோசின் ஞாபக சக்தி போன்றவை அதிகரிக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com