
இந்த உலகில் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அன்பும் அமைதியும் மிகவும் அவசியம். இவை இரண்டும் இல்லை என்றால் மனிதர்களுக்குள் பிரிவினையும் சண்டையும் வந்து விடும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருந்து அமைதியை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகின்றன. எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மக்களிடையே அன்பையும் அமைதியையும் பெருக செய்வதற்கு சில பொன்மொழிகள் கூறியுள்ளனர்.
அன்பு பற்றிய அறிஞர்களின் பொன்மொழிகள் 5
1. மனித வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. முதல் விஷயம் அன்பு காட்டுவது. இரண்டாவது விஷயம் அன்பு காட்டுவது. மூன்றாவது விஷயம் அன்பு காட்டுவது. ஹென்றி ஜேம்ஸ்.
2. ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் ஒரே சக்தி அன்பு தான்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
3. உண்மையான அன்பு எப்போதும் தீர்ந்து போகாது. பிறருக்கு எவ்வளவு அதிகமாக அன்பை கொடுக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அன்பு உங்களுக்குள் இருக்கும்.
அன்டோயின் டி செயின்ட்.
4. அன்பு இருக்கும் இடத்தில் வாழ்க்கை இருக்கிறது.
மகாத்மா காந்தி.
5. இருள் இருளை விரட்டாது. ஒளியால் மட்டுமே இருளை விரட்ட முடியும். அது போல வெறுப்பு வெறுப்பை மாற்ற முடியாது. அன்பு மட்டுமே வெறுப்பை மாற்ற முடியும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
அமைதி பற்றிய அறிஞர்களின் பொன்மொழிகள் 5
1. அமைதி என்பது மனதில் உள்ளிருந்து வருவது. அதை வெளியே தேடக்கூடாது. புத்தர்.
2. நீங்கள் உங்களுக்குள் அமைதியை காணும் போது உலகத்துடனும் அமைதியை காண முடியும்.
மகா கோசானந்தா.
3. அமைதி என்பது சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருப்பது அல்ல. சண்டை சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்ப்பதுதான்.
ரெனால்ட் ரீகன்.
4. அமைதி என்பது நீங்கள் ஆசைப்படும் விஷயம் அல்ல. அதை நீங்கள் உருவாக்க வேண்டும். அமைதியாக செயல்பட வேண்டும். அமைதியைத் தர வேண்டும். அமைதியாகவே நீங்கள் மாற வேண்டும்.
ஜான் லெனான்.
5. அமைதியைப் பற்றி பேசுவது மட்டும் போதாது. அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது. அதற்காக பாடுபட வேண்டும்.
எலினோர் ரூஸ்வெல்ட்.