? தமிழகத்தை கைப்பற்ற பா.ஜ.க. பகல் கனவு காண்பதாக வைகோ கூறுகின்றாரே?– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.! வைகோ மட்டும்தானா ?." ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை எல்லாம் தோற்கடித்திருப்பார் " என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே…– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.! சிவாஜி, ரஜினியின் நடிப்புத் திறனை இவ்வளவு குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டாம்!. உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் பல அடுக்கு மாடி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதே!– ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்.நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்டிடம் சில வினாடிகளில் தரைமட்டமாக்க பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் கொச்சி நகரில் இதுபோல் நடந்திருக்கிறது. விதி மீறல் செய்யும் நிறுவனங்களையும் அதற்கு துணை நிற்கும் ஊழல் அதிகாரிகளையும் யார், எப்போது தரை மட்டமாக்கபோகிறார்கள் ?.20 ஆண்டுகளாக 275 வழக்குகள் தேக்கம். சிபிஐ தொடுத்துள்ள 6700 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை என்பது பற்றி?– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சிபோல் இந்த நீதிமன்ற தேக்கங்களை ஒழிக்க ஒரு நாடு தழுவிய புரட்சி வரவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலகெடுவுக்குள் தேங்கி கிடக்கும் வழக்குகளை முடித்துவைத்து, எந்த வழக்கும் அப்பில்கள் உட்பட 5 ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் போன்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இல்லாவிடில் வரும் காலங்களில் மக்கள் நீதி மன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்..தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளதாக ஹெச்.ராஜா கூறியிருக்கிறாரே…– எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை, .! அப்படியானால் இதுவரை பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு நியமித்த கவர்னர்கள் தேசபக்தி இல்லாத அறிவார்ந்தவர்கள் அல்லாதவர்கள் என்கிறாரா?.? கனடா மாநாட்டில் வழங்கப்பட்ட இந்திய தேசியக் கொடியில், 'மேட் இன் சைனா' என்று இருந்ததாமே..?!– நெல்லை, குரலோன்.! காமன் வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு உறுப்பினர்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி அணிவகுத்து வருவது மரபு. அந்த கொடிகள் ஒரே மாதிரியான அளவுகளில் இருக்க வேண்டும் என்பதற்காக சீனாவிலிருக்கும் ஒரு நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.. அவர்கள் தயாரித்த அனைத்து நாட்டு கொடிகளிலும் இப்படி மேட் இன் என்று போட்டிருந்தது. ஒரு நாட்டின் தேசியக்கொடியில் எந்த எழுத்துகளும் சின்னங்களும் இருக்க கூடாது என்ற அடிப்படைவிதிகள் அறியாத தயாரிப்பு நிறுவனமும், அதை ஏற்றுக்கொண்ட காமன் வெல்த் கூட்ட அமைப்பினர்களும் கண்டனத்துக்குரியவர்கள்..பா.ஜ.க.வில் அர்ஜூன மூர்த்தி…?– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.ரஜினிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டின்படி அவர் கம்பெனியை தொடங்கவில்லை. அதனால், அதற்காக உதவிக்கு அனுப்பப்பட்ட ஜெனரல்மானேஜர் திரும்ப ஹெட் ஆபீஸுக்கு வந்துவிட்டார்..பா.ஜ.க. இதுவரை மொத்தம் ரூ.5,500 கோடிக்கு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியிருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளாரே…-டாக்டர். இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001.இரண்டு விஷயங்கள் புலனாகிறாது. ஒன்று பா.ஜ.கா.விடம் அவ்வளவு பணம் இருக்கிறது. இரண்டு பா.ஜ.க. அல்லாத கட்சி எம்.எல். ஏ.க்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது.."ஜார்கண்ட் முதலமைச்சர் மக்கள் பிரதிநிதி சட்டத்தை மீறிவிட்டார்" என்று கூறி அவரின் எம்.எல்.ஏ.பதவியை பறிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது பற்றி?…– மலர்விழி, திண்டுக்கல்.அரசியலமைப்பு சட்டம் தேர்தல் கமிஷனுக்கு அளித்திருக்கும் அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், இதன் மூலம் அவர் முதலமைச்சர் பதவியில் தொடர்வதை தடுக்க முடியாது. 6 மாதத்திற்குள் இன்னொரு தேர்தலில் ஜெயித்து பதவியைத் தொடர முடியும் என்பது தான் வருத்தமான செய்தி..? தனது " ஒற்றை தலைமையை நிலைநாட்ட இ.பி.எஸ்., விடா பிடியாக ஓ.பி.எஸ்.வுடன் இணைந்து செயலாற்ற முடியாது" என்று கூறுவது ஏன்?– K.R.G. ஸ்ரீராம், பெங்களூரு – 560 077.! தனது தனித்தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படும் என்றும், அதற்கு ஓ.பி.எஸ். தடையாக இருப்பார் என்றும் அவர் நம்புகிறார்..? ஒரே கல்லில் இரண்டு மாங்காய், ஒரே கல்லில் கொத்து மாங்காய்கள் – என்ன வித்தியாசம்?– வாசுதேவன் ,பெங்களூரு.! பின்னது பா.ஜ.க., முந்தையது சிறு அரசியல் கட்சிகள்..? சமீபத்தில் புருவம் உயர்த்த வைத்த முரண் அல்லது நகை முரண்?–நெல்லை குரலோன், பொட்டல்புதூர்."8 வழிச்சாலை போடக் கூடாது என்று தி.மு.க. எந்தக் காலத்திலும் சொன்னதில்லை" என்று அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருப்பதுதான் …