
இந்தியாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டுதோறும் புதுப்புது கார்களையும், பைக்குகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறு விற்பனை வரும் அனைத்து வகையான கார்களும், பைக்குகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவு செய்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதுப்புது மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தினாலும் சில மாடல்கள் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பதுடன், விற்பனையிலும் கல்லா கட்டுகின்றன.
இந்த ஆண்டு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் சந்தைகயில் விற்பனைக்கு வந்ததுடன் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின. 2025 ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தாண்டு விற்பனையில் பட்டையை கிளப்பிய டாப் 5 கார்கள் மற்றும் 5 பைக்குகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
2025: அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள்:
2025-ல் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 5 கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon)முதலிடம் பிடித்துள்ளது, டாடா நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமை டாடா நெக்ஸான் காருக்கு உண்டு. சென்னை போன்ற நகரங்களில், டாடா நெக்ஸானின் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.9.54 லட்சத்தில் இருந்து ரூ.17.60 லட்சம் வரை இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
இரண்டாம் இடம் பிடித்துள்ள டிசையர் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான செடான் கார் ஆகும். நல்ல மைலேஜை கொடுக்கும் இந்த காரின் விலை சுமார் ரூ.6.26 லட்சம் முதல் ரூ.9.31 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. அதேபோல் மாருதி டிசையர் இந்தியாவில் மிகவும் விருப்பமான கார்களில் ஒன்றாகும், இது சிறந்த மைலேஜ் மற்றும் அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை சுமார் 6.26 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).
ஹூண்டாய் க்ரெட்டா என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காம்பாக்ட் SUV ஆகும். இதன் கவர்ச்சியான வடிவமைப்பு, வசதியான கேபின் மற்றும் பல அம்சங்கள் பலரையும் கவரும் வகையில் உள்ளது. இது நகரத்தில் ஓட்டுவதற்கும் நீண்ட பயணங்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த SUV-ஆகக் கருதப்படுகிறது. மொத்தத்தில், ஹூண்டாய் க்ரெட்டா ஸ்டைல், தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் வசதி ஆகியவற்றின் கலவையாக, இந்திய சந்தையில் மிகவும் விரும்பப்படும் SUV-களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.10.73 லட்சம் முதல் ரூ.20.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
2025-ம் ஆண்டு அதிக விற்பனையில் 4-ம் இடம் பிடித்துள்ளது டாடா பஞ்ச். டாடா பஞ்ச் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறிய, மலிவு விலையில் மைக்ரோ எஸ்யூவிகளில் ஒன்றாகும். இது வலுவான தரம் மற்றும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு பெயர் பெற்றது. இது சிறிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான, ஸ்டைலான மற்றும் நம்பகமான எஸ்யூவி ஆகும். இதன் அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு பிரபலமான 2025 கியா செல்டோஸ் இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. கியா செல்டோஸ், அதன் போட்டியாளர்களுக்கு மத்தியில் அதன் ஸ்டைல் மற்றும் அம்சங்களால் தனித்து நிற்கிறது, குறிப்பாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் புதிய வகைகளுடன், இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்புமிக்க தேர்வாக அமைகிறது. சென்னையில் இதன் தொடக்க விலை ரூ.10.79 லட்சம் ஆக உள்ளது.
2025: அதிகம் விற்பனையான டாப் 5 பைக்குகள்:
பயணிகளின் மறுக்க முடியாத ராஜா, அதீத நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளுக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் அதிகளவில் விற்பனையாகும் இந்த பைக், லிட்டருக்கு 87 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்கை நிரப்பினால் இதை சுமார் 600 கிலோ மீட்டர் வரை எளிதாக இயக்க முடியும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.73,527.
2025-ல் இந்த பைக் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளாக இருந்து வருகிறது. மென்மையான சவாரி, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, சூப்பர்-ஸ்மூத் எஞ்சின், சுத்திகரிப்பு மற்றும் சிறந்த மைலேஜுக்கு பெயர் பெற்றது, இது வசதியான நகர பயணத்திற்கு சிறந்த தேர்வாகும். 123.94cc BS6 எஞ்சின் மூலம் இயக்கப்படும் ஹோண்டா ஷைன் அதிகபட்சமாக 55 முதல் 65 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் திறன் கொண்டது. மேலும் இந்தியாவில் Honda Shine பைக் ரூ.80,318 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலிருந்து தொடங்குகிறது.
இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 இரண்டும் பிரபலமான ஸ்போர்ட்டி மோட்டார் சைக்கிள்களாகும். பல்சர் 125 மலிவானது, சிறந்த மைலேஜை (சுமார் 50+ கிமீ/லி) தருகிறது. நகரப் பயணங்கள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்தது. பல்சர் 150 அதிக வேகம், சக்தி வாய்ந்தது (149.5சிசி இன்ஜின், 14 PS சக்தி) மற்றும் அதிக செயல்திறன் கொண்டது, ஆனால் விலை அதிகம், மைலேஜ் சற்றே குறைவு (சுமார் 49-65 கிமீ/லி). பல்சர் 150-ம் விலை ரூ.1,05,000-லிருந்து ஆரம்பம், பல்சர் 125-ன் விலை ரூ.80,000-லிருந்து ஆரம்பமாகிறது.
இது டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் பைக் வரிசையாகும். ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த அம்சங்களுக்காக பிரபலமான இந்த பைக் தினசரி சவாரியில் அதிக சிலிர்ப்பை விரும்பும் ரைடர்களுக்கு சிறந்தது. இதில் பழுதுகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.1,08,750 (எக்ஸ்ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 என்பது கிளாசிக் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் வரும் ஒரு பிரபலமான மோட்டார் சைக்கிள் ஆகும். இது 349cc இன்ஜின், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் வசதியான பயணத்திற்குப் பெயர் பெற்றது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.81 லட்சம் முதல் ரூ.2.30 லட்சம் வரை மாறுபடுகிறது (மாடல் மற்றும் நகரத்தைப் பொறுத்து). சென்னையில் இந்த பைக்கின் விலை ரூ.2,14,647 (எக்ஸ்-ஷோரூம் விலை)ஆகும்.
இந்த தரவுகள் 2025-ன் விற்பனை அறிக்கைகள் மற்றும் ஆட்டோமொபைல் தளங்களின் கணிப்புகளின் அடிப்படையில் பொதுவான ஒரு பட்டியலாகும். குறிப்பிட்ட விற்பனை தரவுகளைப் பொறுத்து இந்த தரவரிசை மாறுபடலாம்.