கவிதைத் துளிகள் 3 - ஒரு பெரியவரின் ஆதங்கம்..!

Tamil poetry
Tamil poetry
Published on

கவிதைத் துளி 1 - ஒரு பெரியவரின் ஆதங்கம்!
முதலில்…
கிணற்றைக் காணுமென்றுதான்…
காமெடி செய்தார்கள்!
அப்புறம்…
குட்டை...குளம்…
ஆறு...ஏரியென்று…
அத்தனையும் காணாதது
உண்மை என்கிறார்கள்!
போகிற போக்கைப் பார்த்தால்…
கடல்களும் கூட
காணாமல் போய்விடுமோ?!
நல்லவேளை!...
அப்போது நாமிருக்க மாட்டோம்!
நமக்குத்தான்…
- வயசாகி விட்டதே!

இதையும் படியுங்கள்:
கவிதை: பொங்கட்டும் புதுப் பொங்கல்!
Tamil poetry

கவிதைத் துளி 2 - அன்றுதான் அவன்…!
அன்றுதான் அவன்…
அந்த …
ஃபிட்னஸ் சென்டரில்…
அத்தனை
உடற்பயிற்சி எந்திரங்கள்
இருப்பதை
அறிந்து கொண்டான்!
ஏனெனில்
அன்று அவள்…
ஃபிட்னஸ் சென்டருக்கு
வரவில்லை!

இதையும் படியுங்கள்:
கவிதை: இளைஞனே! மனிதர்களைக் காப்பாற்ற வா!
Tamil poetry

கவிதைத் துளி 3 - அறியாப் பாலகன்…!
கருத்தரித்திருக்கும் அம்மா…
அவசரமாக அப்பாவோடு
ஆஸ்பத்திரி போனதும்…
தனக்கு மிகவும் பிடித்த
சிறப்பான சில பொம்மைகளை…
தூசுதட்டி சுத்தப் படுத்தினான்
அந்தப் பாலகன்...
பிறக்கப் போகும் குழந்தைக்காக!
-ஆஸ்பத்திரியிலோ…
அம்மாவுக்கு நடக்கிறது
-அபார்ஷன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com