'எழுத்தாளர் ஏகாம்பரம்' to 'பாவம் பட்டாபி'... நகைச்சுவை நாடக நாயகன் கோவை அனுராதாவுடன் கல கல பேட்டி!

Kovai Anuradha
Kovai Anuradha
Published on

சென்னை மடிப்பாக்கம் காமெடி கிளப் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை பழம்பெறும் நடிகர் கோவை அனுராதாவை கொண்டு பொதுமக்களுக்கு நகைச்சுவை நாடகம் ஒன்றை பொதுவெளியில் வழங்குகிறது. கூடவே சமோசாவும், சூடான சுவையான காஃபியும் உண்டு. அனைத்தும் இலவசம்.

பெரும்பாலான முதியோர்கள் இந்நிகழ்வை ஒரு நல்ல பொழுதுபோக்காக இரசிக்கிறார்கள். இந்த இரண்டு மணி நேரத்தை வயிறு குலுங்க குலுங்க சிரித்து கழிப்பது என்பது அவர்களுக்கு பெரும் மகிழ்வை தருகிறது.

நாடகத்தின் தொடக்கத்தில் கோவை அனுராதாவுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது பெற்ற சில தகவல்களை நேயர்களுடன் இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

’பாவம் பட்டாபி’ என்ற தலைப்பில் அன்று அளிக்கப்பட்ட நாடகம் ஒரு நடுத்தர குடும்ப இளைஞன் 10 வருடத்திற்கு மேலாக திரைப்பட இயக்குனராக ஆக வேண்டும் என்று முயற்சி செய்கிறார். திரை துறையில் உள்ள சூழ்ச்சி, தந்திரம் இவற்றின் காரணமாகவும், போதுமான திறமையின்மையாலும் கடைசி வரை இவருடைய முயற்சிகள் பயனளிக்காமல் போகின்றன. இறுதியில் தன்னுடைய எம்.காம் படிப்பை கொண்டு மாமனார் வாங்கிக் கொடுக்கும் ஒரு பள்ளியை நிர்வகிக்கும் இயக்குனராக தன்னுடைய வாழ்க்கை பாதையை மாற்றிக்கொள்கிறார்.

இந்த கதையை இரண்டு மணி நேரத்தில் மிக அற்புதமாக தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் தன்னுடைய இயக்கத்தில் கோவை அனுராதா அளித்தார். இந்நாடகம் பார்த்தவர்களை பரவசத்துக்குள்ளாக்கியது. நாடகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் எதார்த்த திரைப்பட உலகை தம்தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது. கதாநாயகனின் மாமனாராக நடித்தவர் கதாபாத்திரமாகவே மாறி அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார்.

கலைமாமணி பட்டம் பெற்ற கோவை அனுராதா. வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் ஜொலித்தவர். இவர் பல சிறந்த நகைச்சுவை நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளிலும் இவர் நடித்த நாடகங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல தொடர்களை இயக்கியும் இருக்கிறார். மேலும், இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் என பட்டம் பெற்றவர். இவருடைய நடிப்பு திறமைக்கு பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்று இருக்கிறார். இவர் பல நூல்களையும் எழுதி இருக்கிறார். 

நாடகத்தின் தொடக்கத்தில் கோவை அனுராதாவுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது பெற்ற சில தகவல்களை நேயர்களுடன் இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன். பேட்டியின் போது அவர் கூறியவை:

"நான் பத்து வயதில் இருந்தே நடிக்கிறேன். என்னை சுற்றி எப்போதும் பசங்க இருந்து கொண்டே இருப்பார்கள். நான் எந்த படத்துக்கு போனாலும் அந்த படத்தை அப்படியே நடித்துக் காட்டுவேன். பாலும் பழமும், பாசமலர் எனும் பா வரிசை படங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். எம்ஜிஆர், சிவாஜி இரண்டு பேருமே என்னுடைய உயிர். நான் ஸ்கூல் படிக்கும்போது, 'சிவாஜி சாரும், எம்ஜிஆர் சாரும் இறந்த பிறகு நாம உயிரோடவே இருக்கக் கூடாது' என்றெல்லாம் பேசி இருக்கேன். அந்த அளவிற்கு அவர்கள் மீது எனக்கு ஒரு மரியாதை உண்டு. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பின்னாடி சினிமாவே இல்லை என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். எம்ஜிஆர் சாரை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவரை நேரில் பார்த்த சமயம் கடவுளை நேரில் பார்த்த அளவுக்கு சந்தோசமாக இருந்தேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாட்டு சர்க்கரை கடலை உருண்டை!
Kovai Anuradha

பாலச்சந்தர் சாருடைய நாடகம் பார்த்துதான் நாடகம் போட ஆசை வந்தது. 1965ல், ’எழுத்தாளர் ஏகாம்பரம்’ என்ற ஒரு நாடகம் போட்டேன். அந்த நாடகத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் கோயம்புத்தூரில் நண்பர்கள் கலை பண்பாட்டு குழு என்று ஆரம்பித்தேன். கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்து நாடகம் போட்ட ட்ரூப்பில் நாங்களும் உண்டு. எங்கள் நாடக குழு பற்றி எல்லா பத்திரிகைகளிலும் எழுதுவார்கள். என் தம்பிங்க நடிக்க ஆர்வமாக இருந்தார்கள். நான் எழுத ஆர்வமாக இருந்தேன். அப்படியே எதார்த்தமாக எங்களுடைய ட்ரூப் அமைந்துவிட்டது. என்னோட நாடகத்தில் ஆபாசமாக எழுத மாட்டேன், பெண்களை மட்டமாக எழுத மாட்டேன். அப்படி எல்லாம் இல்லாமல் நகைச்சுவை கொண்டு வருவது ரொம்பவே கஷ்டம் என்று சொல்வார்கள். ஆனால், நான் அப்படி எழுதி மக்களை சிரிக்க வைத்திருக்கிறேன். என்னோட பலமே என்னுடைய பாடி லாங்குவேஜ்தான். என்னோட எல்லா நாடகத்திலும் கருத்து நிச்சயமாக இருக்கும். ஏன்னா, நான் எம்ஜிஆர் சாருடைய வழியை பின்பற்றி வந்தவன். அப்படியே சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது."

இதையும் படியுங்கள்:
குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 2
Kovai Anuradha

கோவை சரளா குறித்து சொன்னது:

"காமெடி நடிகை கோவை சரளா எங்க ட்ரூப்பை சேர்ந்தவர் என்பதில் எனக்கு மிகப் பெரிய பெருமை. எங்க ஸ்டேஜ் டிராமாவில் இருந்த பொண்ணு இன்னைக்கு சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் என்று சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது. இப்ப வரைக்கும் நாங்கள் எல்லோரும் தொடர்பில் தான் இருக்கிறோம். இப்போதும் மாதத்திற்கு ஒரு நாள் நாடகங்கள் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன். சினிமாவில் 4,5 நாள் சூட்டிங் இருந்தால் அதுவும் சென்னையிலேயே இருந்தால் பண்ணலாம் என்று நினைக்கிறேன்."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com