
மானுட உலகில் சுகாதார சேவைகளின் தேவை அதிகரித்து உள்ளது. சுகாதார சேவை என்றால் மருத்துவர், செவிலியர் என்ற நிலையைக் கடந்து மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் துணை சுகாதார அறிவியல் படிப்புகள் (Allied Health Sceinces) படித்து சேவை வழங்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது இன்று வரை பலரும் அறியாத ஒன்று.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.
- எனும் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கிற்க்கிணங்க, நோயை அறிந்து, நோயின் அடிப்படைக்காரணத்தை அறிந்து, அதற்கான மிகச்சரியான தீர்வினை வழங்குவதே, அல்லது தீர்வுக்கு பரிந்துரைப்பதே மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ வல்லுநர்களின் (Allied Health Care Professionals) தலையாய பணியாகும். இவர்களின் தேவை உலகம் முழுவதிலும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தேவையை பூர்த்தி செய்யும்விதமாக, சங்கர நேத்ராலயாவின் சுகாதாரம் சார்ந்த பட்டப்படிப்புகள், குறிப்பாக பரங்கிமலையில் எண்: 8, ஜி எஸ் டி சாலையில், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் டாக்டர் வி ஜி அப்புக்குட்டி வளாகத்தில் செயல்படும் எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி மற்றும் தி சங்கர நேத்ராலயா அகாடெமியில் வழங்கப்படுகின்றன.
இங்கே பிளஸ் 2 வில் அறிவியல் பாடங்கள் படித்த மாணவர்கள் ஆப்டோமெட்ரியில் பி.ஆப்டோம், பிஎஸ்சி - மெடிக்கல் லேப் டெக்னாலஜி, அறிவியல் மற்றும் காமர்ஸ் பாடங்கள் படித்த மாணவர்கள் பிபிஏ – ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் படிக்கலாம்.
இது உலகப்புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் அவர்களின் கனவு திட்டம். மருத்துவத்துறையில் மருத்துவர்கள் மட்டுமல்லாது, மருத்துவத்தின் துணைத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த கல்வி நிறுவனங்களை தொடங்கினார்.
பேச்சிலர் ஆஃப் ஆப்டோமெட்ரி
ப்ளஸ் 2 வில் உயிரியல் மற்றும் கணிதம் பாடங்கள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை சங்கர நேத்ராலயாவில் வழங்கப்படும் இந்த படிப்பு தஞ்சாவூரில் உள்ள புகழ் பெற்ற சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு வருடங்கள் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும், மூன்றாம் மற்றும் நான்காம் வருடங்கள் சென்னையிலும் படிக்க வேண்டும். நான்காம் வருடம் மருத்துவமனையில் நேரடி பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பேச்சிலர் ஆஃப் ஆப்டோமெட்ரி படிக்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட வலைத்தள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
www.sastra.edu/sastraapplication
சங்கர நேத்ராலயா, கொல்கத்தாவில் செயல்படும் கல்லூரியில் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் பேச்சிலர் ஆஃப் ஆப்டோமெட்ரி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பேச்சிலர் ஆஃப் ஆப்டோமெட்ரி படித்தவர்கள் மாஸ்டர் ஆஃப் ஆப்டோமெட்ரி படிக்கலாம், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆர்வமுள்ளவர்கள் டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு படித்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்கள். உலகின் பல நாடுகளிலும் தங்களது சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
கொல்கத்தா சங்கர நேத்ராலயாவில் படிக்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட வலைத்தள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
https://snesokolkata.org/admission.html
பிஎஸ்சி - மெடிக்கல் லேப் டெக்னாலஜி:
இந்த படிப்பு தற்பொழுது தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் சங்கர நேத்ராலயா வில் கடந்த 30 வருடங்களாக வழங்கப்படுகிறது.
இந்த படிப்பு படித்த அனைவரும் பல்வேறு மருத்துவமனைகள், அறிவியல் மற்றும் அரசு, உள்நாட்டு, பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். முக்கியமான விஷயம், இந்த படிப்பு படித்த யாருமே வேலை இல்லாமல் இல்லை.
இது நான்கு வருட பட்டப்படிப்பு.
முதல் மூன்று வருடங்கள் வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் வகுப்புகளும், நான்காம் வருடம் முழுவதும் பிரபல மருத்துவமனையில் நேரடி பணி பயிற்சி (Internship) யும் வழங்கப்படுகிறது.
BSc மெடிக்கல் லேப் டெக்னாலஜி படித்தவர்கள் MSc மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிக்கலாம், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆர்வமுள்ளவர்கள் டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு படித்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்கள்.
மேலும் விவரங்களுக்கு . https://www.thesnacademy.ac.in/bsc-medical-laboratory-technology.html வலைத்தளத்திற்கு செல்லவும்.
பி பி ஏ – ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட்:
தி சங்கர நேத்ராலயா அகாடமி யில் மூன்று வருட - ஆறு பருவ பட்டப்படிப்பு தி ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகிறது.
கல்வித்தகுதி - +2 வில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இந்த பட்டப்படிப்பில் சேரலாம்.
தி சங்கர நேத்ராலயா அகாதெமியில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் சுகாதாரத் துறையில் நிர்வாக அனுபவமும், மிகச்சிறந்த கல்வித் தகுதியும் மிக்க அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
பி.பி.ஏ. பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவமனையில் வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் சுகாதார மேலாண்மைத் துறையில் MBA மற்றும் MHA உயர் படிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் கடந்த 10 வருடங்களில் இந்த படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் உடனடி வேலைவாய்ப்பு அல்லது உயர் கல்வி வேலை வாய்ப்பு என உலகின் பல பகுதிகளிலும் சேவை செய்து வருகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு https://www.thesnacademy.ac.in/bba-healthcare-management.html வலைத்தளத்திற்கு செல்லவும்.
தி சங்கர நேத்ராலயா அகாடெமி மற்றும் எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரியின் முதல்வர் டாக்டர் என் அனுராதா சொல்கிறார்:
இங்கே பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற் படிப்புகளில் சேர்வதற்கு நன்கொடை ஏதும் கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள சிறந்த மாணவர்களுக்கு, பி எஸ் சி மெடிக்கல் லேப் டெக்னாலாஜி மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் இடமிருந்து உதவி பெறப்பட்டு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக பிபிஏ மற்றும் பி எஸ் சி எம்.எல்.டி, படிப்புகளில் அதிகபட்சம் 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். தேவைகளைப் பொறுத்து, இங்கே படித்த மாணவர்களுக்கு சங்கர நேத்ராலயாவிலேயே வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.