60 வயதா? உங்கள் வாழ்க்கையின் பொற்காலம் இதுதான்! சாதிக்க இன்னும் காலம் இருக்கிறது...!

ஆகஸ்ட் 21 - உலக மூத்த குடிமக்கள் தினம்!
Elderly people
Elderly people
Published on
Kalki Strip
Kalki Strip

பொதுவாக 60 வயதுக்கு மேலோ அல்லது பணி ஓய்வு பெற்ற பின்னரோ எல்லாம் முடிந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், எதுவும் முடிந்து விடவில்லை. சாதிக்க இன்னும் காலம் இருக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் உழைக்கும் திறன் 60 வயதுக்கு கீழே உள்ளவர்களை விட அதிகமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 60 களில் தொடங்கும் உங்களின் உச்சக்கட்ட ஆற்றல் 80 வயது வரை தொடரும் என்கிறார்கள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஆய்வாளர்கள்.

உலகின் 500க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க கம்பெனிகளின் சி.இ.ஓ-களின் வயது 60 க்கும் மேல். உலகின் மதிப்பு மிக்க பரிசான நோபல் பரிசைப் பெற்றவர்களின் சராசரி வயது 62. நீங்கள் வயதானவர்கள் அல்ல, நீங்கள் மறு சுழற்சி செய்யப்பட்ட இளைஞர்கள். நீங்கள் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? இளைஞர்களோடு அதிகம் பழகுங்கள், நன்றாக உடை உடுத்துங்கள், புதிய அனுபவங்களை தேடிப் பயணம் செய்யுங்கள், மூளைக்கு தீனிபோட நிறைய நிறைய விஷயங்களைத் தேடி படியுங்கள். நகைச்சுவைகளை ரசியுங்கள், மற்றவர்களிடம் விரோதம் மற்றும் பொறாமை பாராட்டாதீர்கள்.

'ஆட்ரோமி' என்பது வயதாகும் போது உடலுக்கு இயற்கையான முறையில் ஏற்படும் ஓர் அசெளகரியம். உடல் செல்கள் பலவீனமடைந்து சீரழிந்து விடுவதால் ஏற்படுகிறது. இதனால் உடல் உறுப்புகளான இதயம், சிறுநீரகம், மூளை போன்றவை தாங்கள் இயக்கத்தை நிறுத்த ஆரம்பிக்கின்றன. இதை தடுக்க முடியுமா? முடியும். அது உடற்பயிற்சியால் மட்டுமே செல்களின் சீரழிவிலிருந்து வயதானவர்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் கனடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உடலான இயக்கம் தான் ஆரோக்கியத்திற்கான மருந்து. சீரான ரத்த ஓட்டம், சரியான நேரத்தில் உடன் கழிவுகளை வெளியேற்ற, ஹார்மோன்களின் ஆரோக்கியமான செயல்பாடு, உடலின் நெகிழ்வான தன்மை என அனைத்திற்கும் உடல் இயக்கம் அவசியம்.

மூளையை நல்ல நிலையில் வைத்திருப்பது சிறந்த உடல் நலனையும், அதிக மகிழ்ச்சியையும் உண்டாக்கும் என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதற்கு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கீரைகள் (பசலைக்கீரை), ஆரஞ்சு, சிகப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் (பெர்ரி பழங்கள்).

பொதுவாக வயதானவர்களுக்கு வைட்டமின் D3, B12, மெக்னீசியம், இரும்புச் சத்து, துத்தநாகம் மற்றும் செலீனியம் சத்து குறைபாட்டால் மட்டுமே உடல் நல குறைபாடுகள் ஏற்படும். குறிப்பாக தலைவலி, தசைவலி, எலும்பு நோய்கள், ஹார்மோன் செயல்பாட்டில் தொய்வு, உடல் வலிகள், இதய நோய் குறைபாடுகள் மற்றும் ஞாபகமறதி ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க மேற்படி குறிப்பிட்ட சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடலின் கழிவுகளை வெளியேற்ற, இறந்த செல்களை புதுப்பிக்க, உடல் உள் காயங்களை குறைக்க, நோய்களை உருவாக்கும் பிரிரேடிக்கல்களை அழிக்க, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மாதத்தில் இருமுறை விரதம் இருப்பது நல்லது என்கிறார்கள் சிகாகோ ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வாளர்கள்.

நல்ல உடல் நலம், நாம் வாழும் சுற்றுச்சூழலை பொறுத்ததே. அதிக மாசு படிந்த காற்று, அளவுக்கு மீறிய இரைச்சல் மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவையே பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. இந்த விஷயங்கள் முதியவர்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே முதியோர்கள் அமைதியான சூழலில், நல்ல காற்றோட்டம் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறும் சூழலில் இருக்க வேண்டும்.

முதுமை காலத்தை ஆரோக்கியமான முறையில் கழிக்க அவ்வப்போது கால முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயதாகிவிட்டது இனி எல்லா நோய்களும் வரும் என்ற மனப்பான்மையை வேரோடு அகற்ற வேண்டும். வயதான காலத்தில் சில மாற்றங்கள் உடலில் தென்படும் பசி குறையும், தூக்கம் குறையும், ஞாபக சக்தி குறையும் அதற்கு தகுந்தவாறு நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு அவ்வப்போது உடல் பரிசோதனையும், மருத்துவர் ஆலோசனையும் தேவை.

இதையும் படியுங்கள்:
முதுமை ஞாபக மறதியை சமாளிக்க சில ஸ்மார்ட் யோசனைகள்!
Elderly people

முதுமை காலத்தில் வீட்டில் முடங்கி கிடப்பவர்களுக்கே மூப்பின் விளைவு 6 மடங்கு அதிகமாக ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை தவிர்க்க ஆரோக்கியமான பொழுது போக்குகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் உதாரணமாக புத்தகம் படிப்பது, நாளிதழ்களை பார்ப்பது, வானொலி கேட்பது, தோட்டத்தில் வேலை பார்ப்பது, ஆன்மீக சேவைகள் போன்றவைகளில் ஈடுபடுவது. சமூக நல சேவை மற்றும் குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவழியுங்கள். முடிந்த மட்டும் அடுத்தவர்களுக்கு உதவுங்கள். உங்கள் கையில் உங்களுக்கு உதவும் வகையில் பண இருப்பு வைத்திருக்க வேண்டும். உங்களது உடைமைகளை உங்களிடம் மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
'முதுமை என்று எதுவும் இல்லை; நோய் என்று எதுவும் இல்லை; இயலாமை என்று எதுவுமில்லை' - பட்டினத்தார் சொன்னது!
Elderly people

முதியவர்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் அவசியம். அதன் அவசியத்தை பலரும் அறிவதில்லை. தூக்க குறைபாடு செரிமான கோளாறு, ஹார்மோன் சமச்சீர் இன்மை, குறைந்த நோய் எதிர்ப்பாற்றல், உடல் சோர்வு போன்றவைகளை ஏற்படுத்தும். எனவே சரியான நேரத்தில் சரியான அளவு தூங்கி வருவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com