முதுமை ஞாபக மறதியை சமாளிக்க சில ஸ்மார்ட் யோசனைகள்!

Some smart ideas to deal with senile dementia
Some smart ideas to deal with senile dementia
Published on

‘இந்த மூக்குக்கண்ணாடியை எங்க வச்சேன்னு தெரியல, மாத்திரை டப்பா எங்க போச்சு? வீட்டுச் சாவியை இங்கதானே வைச்சேன்? காணலியே’ என்று முதியவர்கள் அடிக்கடி எதையாவது தேடிக்கொண்டே இருப்பார்கள். ஞாபக மறதி வயோதிகத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. ஆனாலும். அதை சமாளிப்பதற்கு சில பயனுள்ள யோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மூளையை பயிற்றுவித்தல்: மனித மூளை அபரிமிதமான சேமிப்புத் திறன் கொண்டது. ஆனாலும், உடலின் மற்ற பாகங்களைப் போலவே மூளையும் நரம்பு மண்டலமும் பிரச்னைகளுக்கு ஆளாகும்போது ஞாபக மறதி ஏற்படுகிறது. மூளையைத் தூண்டும் விதமாக சில அறிவாற்றல் மிக்க விளையாட்டுக்கள் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பது, செஸ் விளையாட்டு மற்றும் நினைவகப் பயிற்சி செய்யலாம். உதாரணமாக, மேசை மேல் ஐந்து அல்லது பத்துப் பொருட்களை வைத்து, அவற்றை இரண்டு நிமிடம் உற்றுநோக்கி விட்டு, கண்களை மூடிக்கொண்டு, அவற்றை நினைவுபடுத்திப் பார்க்கலாம். அல்லது ஒரு காகிதத்தில் அவற்றின் பெயர்களை எழுதலாம்.

உடற்பயிற்சிகள்: உடற்பயிற்சி செய்யும்போது அது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அளிக்கிறது. எண்டார்பின் என்கிற ஹார்மோன் சுரந்து மனதை உற்சாகப்படுத்தி, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. இது நினைவாற்றல் வீழ்ச்சியை சமாளிக்க உதவுகிறது.

தியானம் செய்தல்: கூர்மையான நினைவாற்றலை அடைய தியானம் மிகப் பயனுள்ள ஒரு பயிற்சி. இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மூளை செல்களை சேதப்படுத்தும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் தியானம் ஒரு சிறந்த வழியாக உள்ளது.

ஸ்லோகங்கள் சொல்லுதல்: தினசரி பூஜை செய்யும்போது சொல்லும் சுலோகங்களும் மந்திரங்களும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், மனதிற்குத் தேவையான அமைதியும் ஆனந்தமும் கிட்டும். மந்திரங்கள் சொல்லும்போது வெளிப்படுத்தும் ஒலிகள் மூளையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நல்ல தூக்கம்: போதுமான தூக்கம் இல்லாததால் மனநிலை மாறுபாடுகள் ஏற்படுவதன் மூலம் மறதியும் ஏற்படுகிறது. இரவில் நல்ல ஆழ்ந்து தூங்குவதால் அது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்துள்ள உணவு: மூளையின் சரியான செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான உணவு முக்கியமானது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை விட, உலர் பழங்கள், விதைகள் நினைவாற்றலை அதிகரிக்கும். வைட்டமின் டியும் அறிவாற்றல் செயல்பாடுகளுக்குத் தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். எனவே, தினமும் அரை மணி நேரமாவது சூரிய ஒளியில் நிற்பது அவசியம்.

வெள்ளை சர்க்கரையை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கான ஆபத்து மட்டுமல்ல, மோசமான நினைவாற்றலையும் ஏற்படுத்தும். சர்க்கரைக்கு பதிலாக ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது மூளையின் செயல்பாட்டிற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் உதவும்.

இதையும் படியுங்கள்:
நமது சுக, துக்கங்களுக்கு இவை நான்கும்தான் காரணம்!
Some smart ideas to deal with senile dementia

எழுதிவைப்பது: ஒரு காகிதத்தில் அன்றைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பட்டியல் மாதிரி போட்டுக் கொண்டால் மறக்காது. அது மூளைக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.

செய்யும் வேலையில் கவனம்: ஒரு வேலை செய்யும்போது அந்த வேலையில் மட்டும் கவனம் வைத்தால் போதும். ஒரு புத்தகம் படிக்கும்போது, கவனம் முழுக்க அதில் மட்டுமே இருக்க வேண்டும். செய்யும் சின்ன சின்ன விஷயத்திலும் கூட ஒரு துல்லியத்தைக் கொண்டு வந்தால் அது மூளை சிறப்பாக வேலை செய்ய உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com