2025 ஆம் ஆண்டில் விளிம்பில் வந்து நிற்கிறோம். இன்னும் சில தினங்களில் 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் வரவிருக்கும் புத்தாண்டு, நமக்கு நல்ல வளமான, மகிழ்ச்சியான, பாதுகாப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று நேர்மறையாக எண்ணுவோம். அதே நேரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று எழுதப்பட்ட கணிப்புகளை இங்கு பார்ப்போம்.
ஹிந்து மதத்தின் எதிர்கால கணிப்பு புத்தகமான பவிஷ்ய மாலிகா உலகின் எதிர்காலம் பற்றி கூறுகிறது. 600 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு துறவிகளால் கூறப்பட்ட தகவல்களை சேர்த்து ஶ்ரீ அச்சுதானந்த தாசால் ஒருங்கிணைக்கப்பட்டு நூலாக இது எழுதப்பட்டது. இது இந்தியாவின் தீர்க்க தரிசன நூலாகும். நாஸ்டர்டாமஸ் மற்றும் பாபா வாங்காவின் தீர்க்க தரிசனத்தை விட இது அதிக கணிப்புகளை கொண்டுள்ளது. பவிஷ்ய மாலிகாவின் கணிப்பின் படி 2026 ஆம் ஆண்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நீங்களும் அந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம்! புத்தகத்தை வாங்க...
2026ல் மூன்றாம் உலகப் போர்:
பவிஷ்ய மாலிகாவின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளன, உலகம் முழுவதும் பல மாற்றங்கள் நிகழும். ஏற்கனவே கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனங்களின் அடிப்படையில் மினி உலகப் போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீன போர், இந்தியா - பாகிஸ்தான் சண்டை, ஆப்கன் - பாகிஸ்தான் சண்டை ஆகியவற்றை இந்த ஆண்டு பார்த்து விட்டோம்.
முன்றாம் உலகப்போர் 2026 ஆம் ஆண்டு தொடங்க அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களும் அதிகரிக்கக்கூடும். பங்களாதேஷ் உடனான உறவுகள் மோசமான நிலைக்கு செல்லும். 2026 இல் உலகப்போர் தொடங்கி 2027 வரை நீடிக்கும் என்று பவிஷ்ய மாலிகா கூறுகிறது.
2026ல் இயற்கை பேரிடர்கள்:
இந்த ஆண்டு இயற்கை தன் சூழலில் ஏராளமான மாற்றங்களை வெளிப்படுத்த உள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இயல்பை விட அதிக குளிரை அனுபவிக்க வேண்டி இருக்கும். டெல்லி, காஷ்மீர் போன்ற பல இந்திய மாநிலங்களில், குளிர் அதிகமாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இந்தியாவின் பல மாநிலங்களில் மிக அதிக கனமழை, புயல் மற்றும் வெள்ளம் போன்றவை ஏற்படும். இந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு மக்கள் பயப்படும் அளவிற்கு அதிகரிக்கக் கூடும். பல நாடுகளில் பூகம்பங்கள் கூட ஏற்படும், இது போன்ற இயற்கைப் பேரிடர்கள் காலப்போக்கில் மேலும் அதிகரிக்கும்.
2026ல் பொருளாதார நிலை:
பவிஷ்ய மாலிகாவின் கணிப்பின் படி உலகப் பொருளாதார சூழல்கள் ஸ்திரத்தன்மையை இழக்கும். போர் மற்றும் இயற்கை பேரழிவு காரணமாக பல நாடுகள் பொருளாதார மந்தநிலையை அடையும், உள்நாட்டு வன்முறை மிகுந்த சில நாடுகளில் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத்தை இழந்த நிலையில், அதிக பாதிப்புகளை சந்திக்கும்.
பல நாடுகளில் பணவீக்கம் கணிசமாக அதிகரிக்கும். இது மேற்கத்திய நாடுகளில் தொடங்கலாம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்றவர்கள் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருக்கும். இந்த சூழல் போர் அல்லது பெருந்தொற்று காரணமாக கூட நடைபெறலாம். இந்த காலக் கட்டத்தில் ஆன்மீக வழியில் பயணித்து இறைவனின் நாமத்தை உச்சரிப்பவர்கள் மட்டுமே பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பவிஷ்யா மாலிகா கூறியுள்ளது.
2026ல் பெரும்தொற்று வருமா?
பவிஷ்ய மாலிகாவின் கணிப்பின்படி, புதிய நோய்கள் 2026 ஆம் ஆண்டில் பரவி 2027 ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த உள்ளது. 2032 ஆம் ஆண்டுக்குள் 64 வகையான புதிய நோய்கள் தோன்றும். ஐரோப்பாவில் கதிர்வீச்சு அளவுகள் உயரக்கூடும், இது பொது வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும். இது குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான காலமாக இருக்கலாம்.
நீங்களும் அந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம்! புத்தகத்தை வாங்க...