

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை. 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள், உயிரி ஆயுதங்களால் உலக அழிவு மற்றும் கோவிட் தொற்றுநோய் பரவல் போன்ற பல விஷயங்களை பாபா வாங்கா சரியாக கணித்து கூறியுள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதி வைத்து விட்டு சென்ற பாபா வங்கா, அந்த வகையில் இந்தாண்டு (2025) அவர் கணித்தது போன்றே பல கணிப்புகள் நடந்துள்ளது.
அந்த வகையில் உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், இனக்கலவரங்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் பாபா வங்கா கணித்திருந்தார்.
2025-ம் ஆண்டில் பல உலக நாடுகளில் போர்கள் வெடிக்கும் என்று கூறியிருந்த பாபா வாங்கா, 2026-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார். இந்த முறை, 2026-ம் ஆண்டு பயங்கரமாக இருக்கும் என்றும், மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். இயற்கை பேரழிவுகள், பொருளாதார நெருக்கடிகள், கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு போன்ற பல ஆபத்துகள் 2026-ம் ஆண்டில் ஏற்படப் போவதாகவும், இதனால் 2026 மிகவும் ஆபத்தான ஆண்டாக மாறும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது.2026-ம் ஆண்டில் என்னென்ன நடக்க போகிறது என்பது குறித்து பாபா வாங்கா என்ன சொல்லி இருக்கானு பார்க்கலாம் வாங்க.
* செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில்நுட்பம் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்போது உலகளவில் AI இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் 2026ல் AI மூலமாக மனித உறவுகளுக்கு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மனிதர்களின் வாழ்க்கையையும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவுக்கு AI வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளார்.
* தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வரும் என அவர் கணித்துள்ளார். இது சாமானிய மக்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
* கடந்தாண்டு பல உலக நாடுகளுக்குள் இனக்கலவரங்கள், போர் நடக்கும் என்று கணித்திருந்தார் பாபா வாங்கா. அந்த வகையில் உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர், இந்தியா-பாகிஸ்தான் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம் என பல உலக நாடுகளில் போர் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் கடந்தாண்டை போலவே 2026-ம் ஆண்டிலும் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என கணித்துள்ள பாபா வாங்கா,அந்த போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் என்றும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கணித்துள்ளார். அப்படி நடக்கும் பட்சத்தில் உலக நாடுகளிடையே பொருளாதார பிரச்சனை, கரன்சி மதிப்பு சரிவு, வங்கிகள் திவால், பணவீக்கம் அதிகரிப்பு, நிதிநெருக்கடி போன்ற பிரச்சனைகள் தலைதூக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
* கடந்த ஆண்டை போலவே வரும் 2026-ம் ஆண்டிலும் மாபெரும் இயற்கை பேரழிவுகள், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் என்றும் அந்த பேரழிவால் 7-8 சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்றும் கணித்துள்ளார்.
* மோசமான காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம், தீவிர வறட்சி வானிலை ஏற்படும் என்றும் இதனால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
* 2026-ம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வரும் என்று இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்
* 2026-ம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து ‘உலகின் அதிபதி’ என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவெடுப்பார் எனக் கணித்துள்ளார்..
* கடலுக்கு கீழே பெரிய நகரம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
* 2026-ல் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என கணித்துள்ளார். இதில் தைவான் மீதான கட்டுப்பாடு அல்லது தென் சீனக் கடலில் விரிவாக்கம் ஆகியவை அடங்கும்.
* சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் நெருக்கடி, தொழில்நுட்ப ஆதிக்கம் போன்றவற்றால் 2026-ம் ஆண்டில் இடம்பெயர்வு, அமைதியின்மை உலக நாடுகளிடையே அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.
- பாபா வாங்கா அவரது தீர்க்க தரிசனப்படி அடுத்த 3000 ஆண்டுகளில் இந்த பூமியை என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை ஆண்டு வாரியாக எழுதி வைத்துள்ளார். தனது இறப்பு தேதி ஆகஸ்ட் 11, 1996-ல் நடக்கும் என அவர் கணித்ததுபடியே நடந்தது குறிப்பிடத்தக்கது.